நெற்றியில் திலகம் இல்லாத வ.உ.சி படத்தை பகிர்ந்த கனிமொழி.. இந்துக்களே இருக்க கூடாது என நினைக்கும் தி.மு.க?
நெற்றியில் திலகம் இல்லாத வ.உ.சி படத்தை பகிர்ந்த கனிமொழி.. இந்துக்களே இருக்க கூடாது என நினைக்கும் தி.மு.க?
By : Mohan Raj
ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் அடையாளம், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்கை வழிமுறை போன்றவற்றை அழிக்க வேண்டும். அல்லது அவர்களின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிப்பதன் மூலம் சில ஆண்டுகளில் அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் சுத்தமாக அழித்து ஒழிக்க முடியும்.
வருடங்கள் செல்ல செல்ல அழிக்கப்படவேண்டிய அடையாளங்களை அடுத்த தலைமுறையினரும் மறந்து புகுத்தப்பட்ட பழக்க வழக்கங்களை மேற்கொண்டு அதனை பின்பற்ற துவங்கி விடுவர் பின் அடுத்த தலைமுறையை தன் முந்தைய தலைமுறையின் வரலாற்று சுவடு கூட தெரியாமல் வளர்த்தெடுத்து அதில் தான் விரும்பு பழக்க வழக்கங்களை புகுத்தி ஓர் இனத்தையே மாற்ற முடியும்.
இப்படிப்பட்ட இனத்தை அழிக்கும் செயலைதான் திராவிடர் கழகமும் அதன் வழி வந்த திராவிட முன்னேற்ற கழகமும் இந்து சமுதாய மக்களின் மீது செய்து வருகின்றன. ஒருவன் இந்து என்பதன் அடையாளம் காண அவனை பார்க்கும் மற்றவர்களுக்கு கண்களில் தெரிவது அவன் நெற்றியில் வைக்கும் விபூதி மற்றும் கும்குமமே ஆகும்.
'நீறில்லா நெற்றிபாழ்' என இந்து மதத்தின் அடையாளமான "திருநீறு இல்லாத நெற்றி பாழ்" என்பது ஔவையார் வாக்கு. இப்படிப்பட்ட திருநீறை இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவனும் தன் வாழ்நாளில் வைக்காமல் இருக்க மாட்டான்.
பிறப்பு முதல் இறப்பு சடங்கு வரை திருநீறு இன்றி நடைபெறாது. அப்படிப்பட்ட இந்து மக்களின் அடையாளமான திருநீறை ஆன்மீககத்தை வாழ்க்கையாக வாழ்ந்தவர்களும், தேசத்தை தன் உயிராக போற்றியவர்களும் தன் வாழ்நாள் முழுக்க வைத்து வலம் வந்தனர்.
அப்படிப்பட்ட மகான்களை அவர்களின் அடையாளமான நெற்றி திலகங்களை தற்பொழுது திராவிடம் என்ற பெயரில் தன் அரசியல் பிழைப்பை இந்து மத மக்களை அழிக்க மட்டுமே உபயோகிக்கும் தி.க, தி.மு.க போன்ற கட்சிகள் அழித்து ஒழிக்க பார்க்கின்றன.
ஏற்கனவே திருவள்ளுவரின் நெற்றியில் இருந்த திருநீறை அழித்து அதனை உலகறிய பரப்பியவர்கள், 'தேசியம் மற்றும் தெய்வீகமும் எனது இரு கண்கள்' என வாழ்ந்து காட்டிய மகான் பசும்பொன்.முத்துராமலிங்க தேவரின் அடையாளமான திருநீறு பூசிய படங்களை மாற்றி திருநீறு இல்லாத அவரின் படங்களை பதிவேற்றி இந்து மத மக்களை 'உங்களால் என்ன செய்ய முடியும்?' என கொக்கரித்தனர்.
அந்த வகையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளான இன்று அவரின் நெற்றியில் எந்நேரமும் வீற்றிருக்கும் இந்துமத அடையாளமான திலகம் இன்றி வெறும் நெற்றியாக திராவிட முன்னேற்ற கழகத்தின் கனிமொழி பகிர்ந்துள்ளார்.
இதுவே கழுத்தில் சிலுவை இல்லாத போப் ஆண்டவரின் படத்தையோ, தலையில் தொப்பி இல்லாத இஸ்லாமிய மத தலைவர்கள் படத்தையோ இதுவரை கனிமொழி பகிர்ந்ததுண்டா? கிடையாது ஏனெனில் அவர்கள் அழிக்க நினைப்பது இந்து மதத்தை மட்டுமே.
இந்து மதம் அழித்தல் மட்டுமே அவர்களின் வாழ்நாள் நோக்கம், மற்ற மதங்களை வளரசெய்து அதன் வாக்கு மற்றும் பண உதவியை வாங்கி வயிறு வளர்க்க முனைவதே திராவிட முன்னேற்ற கழகத்தின் வாழ்நாள் அரசியலாகும்.
இன்னும் 6 மாதங்களில் தேர்தல் வந்தால் என்ன? அப்பொழுதும் நாங்கள் இந்து மத துவேஷத்தை மட்டுமே கையில் எடுப்போம் என்ற முழக்கத்தை இன்றைய செயலின் மூலம் கனிமொழி உணர்த்தியுள்ளார். வழக்கம் போல் இந்துக்களும் சூடு, சொரணையற்று தி.மு.க'வை கண்டு கொள்ளாதிருக்கின்றனர்.