Kathir News
Begin typing your search above and press return to search.

ஷீரடி ரயில் விஷயத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை திட்டமிட்டு பரப்பும் கம்யூனிச எம்.பி வெங்கடேசன் - அறியாமையா அல்லது வன்மமா?

கம்யூனிச எம்.பி எந்த அளவிற்கு அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார், எந்த விஷயத்தையும் எப்படி அரைகுறை ஞானத்துடன் வெளி உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

ஷீரடி ரயில் விஷயத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை திட்டமிட்டு பரப்பும் கம்யூனிச எம்.பி வெங்கடேசன் - அறியாமையா அல்லது வன்மமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jun 2022 1:11 PM GMT

கம்யூனிச எம்.பி எந்த அளவிற்கு அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார், எந்த விஷயத்தையும் எப்படி அரைகுறை ஞானத்துடன் வெளி உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

'ரயிலை தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும், சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டு தான் சீரடி ரயில்' என பப்ளிசிட்டி அரசியலை தவிர செய்து பழக்கப்படாத எம்.பி.வெங்கடேசன் குற்றச்சாட்டை வைத்து தன் அறியாமையை வெளிஉலகிற்கு காண்பித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'ரயில் அரசின் வசமிருந்த பொழுது இருந்த கட்டணமும், தனியாரிடம் சென்ற பிறகு உள்ள கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பக்தர்கள் சுரண்டப்படுவதை தடுக்க ரயில் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்துவோம்' என குறிப்பிட்டு சீரடி ரயில் அரசு கட்டணத்தையும், தனியார் கட்டணத்தையும் பதிவிட்டு தகவலை ஆராயாமல் அரைகுறை ட்வீட் செய்திருந்தார்.

அவர் வெளியிட்ட ரயில் டிக்கெட் விலையில் குறிப்பாக அரசு கட்டணம் குளிர்சாதன வசதியுடன் முதல் வகுப்பு படுக்கையுடன் உடைய கட்டணம் ரூ.8190 என குறிப்பிட்டு, தனியார் கட்டணம் குளிர்சாதன வசதியுடன் முதல் வகுப்பு படுக்கையுடன் உடைய கட்டணம் ரூ.10,000 என பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக இந்தியன் ரயில்வே அறிவித்த கட்டண விவரம், மற்றும் அந்த கட்டணத்திற்கு பயணிகளுக்கு அளிக்கும் வசதிகள், தனியார் ரயில் கட்டணம் மற்றும் அந்த கட்டணத்திற்கு அளிக்கும் பயணிகளுக்கு வசதிகள் குறித்து தகவல் சேகரித்ததில் எம்.பி வெங்கடேசனின் அறியாமை மற்றும் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் பிறழ்வு மனப்பாண்மை அப்பட்டமாக தெரியவந்தது.

அதாவது ஷீரடி தனியார் ரயில் வழங்கும் வசதிகள் பயணிகளுக்கு அதிகம், குறிப்பாக ரயில் பயணம் மட்டுமின்றி தாங்கும் இடம், உதவிக்கு ஆட்கள், இசையுடன் கூடிய பயணம், காப்பீட்டு தொகையுடன் கூடிய கட்டணம், சீரடியில் வி.ஐ.பி தரிசனம், உயர்தர மெனுவுடன் கூடிய உணவு வகைகள், அவசர காலத்தில் மருத்துவருடன் கூடிய மருத்துவ வசதி என பயணிகளுக்கு ஒரு நட்சத்திர விடுதி போன்ற அனுபவத்தை தனியார் ரயில் தருகிறது. அரசு ரயில் வழங்கும் கட்டணத்திற்கு நெருக்கமாக!

ஷீரடி தனியார் ரயிலில் கிடைக்கும் சலுகைகளின் பட்டியல்!

1. இந்திய ரயில்வேயால் வழக்கமாக வசூலிக்கப்படும் வழக்கமான ரயில் டிக்கெட் கட்டணங்களுக்கு இணையான கட்டணங்கள்.

2. ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரத்யேக வி.ஐ.பி தரிசனத்தை வழங்குகிறது, இதற்கென தனி கட்டணம் கிடையாது.

3. ஷீரடியில் அனைத்து பக்தர்களுக்கும் 3-பேக்ஸ் குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்குமிடம் வசதி, மற்றும் காப்பீட்டுத் தொகை நிறுவனத்தால் நிறுவனத்தால் ஏற்கப்பட்டு அதற்கென தனியாக வசூலிக்கப்படமாட்டாது.

4. அனுபவம் வாய்ந்த அதே சமயம் பயிற்சியுடன் கூடிய தூமை பணியாளர்கள், உதவியாளர்கள், தொழிலார்களால் இந்த ரயில் பராமரிக்கப்படுகிறது, அவர்கள் பயன்பாட்டு பகுதிகளை அடிக்கடி இடைவெளியில் சுத்தம் செய்வார்கள் மற்றும் உணவு வழங்குபவர்கள் பாரம்பரிய சைவ உணவு வகைகளை சமைத்து பரிமாறுவதில் அனுபவமிக்கவர்கள்.

5. குளிர்சாதன பெட்டிகளில் பயணிகள் எடுத்துச் செல்லும் வகையில் படுக்கை பொருள்கள் வழங்கப்படுகிறது. பிற ரயில்களில் பயணிகள் பயணம் முடிந்தவுடன் இருக்கைகளில் விட்டு செல்லவேண்டும் ஆனால் ஷீரடி சிறப்பு ரயிலில் வழங்கப்படும் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை, சிறு துண்டு போன்றவைகளை எடுத்து செல்ல முடியும்.


6. பயணத்தின் போது பயணிகளை மகிழ்விப்பதற்காக, கூடுதல் தரத்துடன் ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆன்-ரயில் பண்பலை ஆகியவை இந்த பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன. பயணத்தை இனிமையாக வைத்திருக்க பக்தி பாடல்கள், ஆன்மீக கதைகள் மற்றும் நேரடி நேர்காணல்கள் இருக்கும்.

7. அனைத்து நெருக்கடிகளையும் நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் விமான கேப்டன் போன்று ஒரு ரயில் முதன்மை அதிகாரி இருப்பார்.

8. எந்த அவசரநிலையிலும் கலந்துகொள்ள ஒரு மருத்துவர் வசதி உண்டு.

9. இரயில்வே போலீஸ் படையுடன் இணைந்து எந்த விதமான பாதிப்புகளிலிருந்தும் பயணிகளை பாதுகாக்க தனியார் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன.

10. போர்டில் எலக்ட்ரீஷியன்கள் மற்றும் ஏ.சி மெக்கானிக் மற்றும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முழுநேரமும் இருப்பார்கள்.

11. முற்றிலும் நச்சு மற்றும் புகை மற்றும் புகையிலை இல்லாத பெட்டிகள் பராமரிக்கப்படும்.

12. இந்த சேவை வழங்கும் நிறுவனம் பக்தர்களை கருத்தில் கொண்டு கோயம்புத்தூர், திரிப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு சாய்பாபா அறக்கட்டளைகளுக்கு சுமார் 350 டிக்கெட்டுகளை சாய் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க தயாராக உள்ளது.

இதுபோன்ற வசதிகள் அரசு கட்டணத்தில் தனியார் ரயிலில் கிடைக்கும் என அறிவிக்கப்படத்தில் எதிலும் குழப்பம் விளைவித்து எதையும் மக்கள் அனுபவிக்க கூடாது, இதனால் மோடி அரசிற்கு ஏதும் நல்ல பெயர் கிடைக்க கூடாது என்ற வழக்கமான மனநிலையுடன் எம்.பி வெங்கடேசன் பழக்கதோஷத்தில் இதிலும் அரசியல் செய்ய நினைத்து தற்பொழுது தலை குனிந்து நிற்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News