Kathir News
Begin typing your search above and press return to search.

The Kashmir Files: பனி உறையும் தேசத்தில் ரத்தம் உறைந்த உண்மை சரித்திரம்!

The Kashmir Files: பனி உறையும் தேசத்தில் ரத்தம் உறைந்த உண்மை சரித்திரம்!
X

Tinku VenkateshBy : Tinku Venkatesh

  |  13 March 2022 2:22 PM GMT

தற்காலத்தில் வெளியாகும் பாலிவுட் திரைப்படங்கள் எல்லாம் குப்பைக்குச் சமமானவை என்றால் மிகையாகாது. பிரம்மாண்டத்தையும், தென்னிந்தியாவில் வாழும் மக்களை நக்கலடிப்பதையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அதில் உருப்படியாக ஒன்றுமில்லை என்பதே உண்மை. ஆனால் அவ்வப்போது சில நல்ல படங்களும் விதிவிலக்காக வெளிவருகின்றன. அப்படி வெளிவந்திருக்கும் ஒரு திரைப்படம் தான் "The Kashmir Files".

தனது சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் நிலையைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையைப் பற்றியும் பேசுவதற்கு 30 ஆண்டுகள் கழித்து தான் தைரியம் வந்திருக்கிறது போல. காஷ்மீரின் பூர்வகுடியான பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படமாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலேயே இஸ்லாமிய தீவிரவாதி ரத்தம் கலந்த உணவை ஒரு ஹிந்து பெண்மணியை வற்புறுத்தி உண்ண வைப்பதன் மூலம் படத்தின் நோக்கத்திற்கு நம்மை தயார் செய்துவிடுகிறார்கள். இக்காட்சியே இப்படம் கொஞ்சம் கூட கலப்பட்டமற்ற உண்மை சம்பவங்களின் வெளிப்பாடு என்பதற்கு ஓர் உதாரணம்.

படத்தின் மையக்கரு ரொம்ப எளிமையானது. க்ருஷ்ணன் பண்டிட், காஷ்மீர் பண்டிட் இனப்படுகொலைக்குப் பிறகான முதல் தலைமுறையைச் சேர்ந்தவர், இனப்படுகொலை என்பது வெறும் கட்டுக்கதை. பெரும் வெளியேற்றம் மட்டுமே நடந்தது என்று நினைக்கிறார். அதனால் சில வருடங்களுக்கு முன்பு இந்திய அரசாங்கம் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து போராட நினைக்கிறார்.

க்ருஷ்ணனின் தாத்தா இறப்பின் போது காஷ்மீர் இனப்படுகொலையில் தப்பி உயிர்பிழைத்த அவருடைய நண்பர்கள் ஒன்று கூடுகிறார்கள். அங்கிருந்து கதை பின்னோக்கி சென்று, ஒரு காலத்தில் காஷ்மீர் எப்படி ஞானத்தின் பீடமாக விளங்கியது என்பதில் முடிகிறது.

வெகு சில படைப்பாளர்கள் மட்டுமே எவ்வித கலப்படமும் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை திரைப்படமாக எடுக்கத் துணிகிறார்கள். விவேக் அக்னிஹோத்ரி இப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்டார்கள் என்பதையும், அதை மறைக்க முயற்சி செய்த செய்கின்றன ஒரு மாஃபியா கும்பலின் முகத்திரையை அழுத்தமான வசனங்கள் மூலம் கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.

ஒரே கல்லில் இரண்டு காய்களை அடித்திருக்கிறார் படத்தின் டைரக்டர். காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்த கொடுமைகளை அறிந்துகொள்ளும் ஒரு இளைஞனின் மூலம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொன்னதோடு மட்டுமில்லாமல், இந்த உண்மைகளை காலந்தோறும் தொடர்ந்து மறைத்தும் மறுத்தும் வரும் ஒரு முகமூடி சமூகத்தையும் கண்ணத்தில் அறைந்திருக்கிறார்.

இப்படத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நடிப்பதற்கு அசாத்தியமான தைரியமும் நேர்மையும் வேண்டும். அதிலும் குறிப்பாக Mithun Chakraborty, Anupam Kher, Prakash Melwadi, Puneet Issar, and Pallavi Menon ஆகியோர் காஷ்மீரில் இருந்து வெளியேறிய முதல் தலைமுறை பண்டிட்களின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடத்திருக்கிறார்கள் என்பதை விட அவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

படத்தின் இன்னபிற தொழில்நுட்ப சங்கதிகளைப் பற்றி விமர்சிக்க என் போன்றோருக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால் இப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியரும் இப்படத்தைப் பார்த்துவிட்டு இந்தக் கொடுமையைப் பற்றி இவ்வளவு ஆண்டுகள் பேசாமல் மவுனியாக இருந்த குற்றத்திற்காக மனம் வருந்த வேண்டும்.

The Commune தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கருத்து ஸ்ரீகாந்த் பார்த்தசாரதி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News