சனாதன பாதைக்கு திரும்பிய கத்தோலிக்க பாதிரியார் - நயன்தாரா உட்பட கத்தோலிக்கத்தை விட்டு சனாதன பாதைக்கு திரும்பும் பட்டியல் நீளுகிறது
தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி உள்ளார் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர்.
By : Mohan Raj
தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி உள்ளார் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர்.
கத்தோலிக்க பாதிரி ஆண்டோனி பெர்னால்டஸ் தாய் மதம் திரும்பியுள்ளார் கோவா கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தார் இவர்.
400 வருடங்களாக கத்தோலிக்க குடும்ப பின்னணி கொண்ட இவர் கத்தோலிக்க சர்ச்சில் பாதிரியாக இருந்தார். பாதர் ஆண்டனி பெர்னால்டஸ் மிகப் பழமையான இந்து நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவிலில் நடந்த பொது நிகழ்ச்சியில் சனாதன தர்ம பாதைக்கு திரும்பினார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்ட பொழுது, 'எனது வாழ்வின் மிக்க மகிழ்ச்சி தரும் நாள் இன்று! இனிமேல் என எந்த சர்ச்சுடனும் தொடர்பு கிடையாது' என தெரிவித்துள்ளார். இந்த தகவலை பேராசிரியர் பி.ஏ.வர்கீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி உள்ளனர் என்ற பட்டியலை அவர் வெளியிட்டார். அதில் நயன்தாராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.