விஜயகாந்திற்கு வீசிய அதே வலையை அண்ணாமலைக்கு வீசும் ஊடகங்கள் - திருப்பி வட்டியும், முதலுமாக கொடுக்கும் அண்ணாமலை
தமிழக செய்தி நிறுவனங்கள் அரசியலில் ஒருவரை ஹீரோவாக சித்தரிப்பதும், அரசியலில் அவரை ஒன்றும் இல்லாமல்
By : Mohan Raj
தமிழக செய்தி நிறுவனங்கள் அரசியலில் ஒருவரை ஹீரோவாக சித்தரிப்பதும், அரசியலில் அவரை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கும் கடந்த 18 ஆண்டு காலமாக பெரிதும் உழைத்து வருகின்றன.
இதில் சிலரை மறைமுக தூண்டுதலின் பெயரில் அரசியலில் கதாநாயகன் போலவும் சித்தரித்துள்ளனர், அதே சில அரசியல் தலைவர்களை காமெடியன்கள் போலவும் சித்தரித்து மக்களிடையே தவறான கருத்துக்களை பரப்ப வைத்ததும் இதே தமிழகத்தில் உள்ள சில மீடியாக்கள்'தான்.
இதில் குறிப்பிடத்தக்க இருவர் உள்ளனர். முன்பு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தற்பொழுது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
அந்த வகையில் 2011ல் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்திற்கு அரசியலில் உயர்ந்து வந்த தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களை தமிழக மீடியாவில் உள்ள சிலர் தவறாக சித்தரித்ததன் மூலம் அவர் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சமூக வலைதளங்களில் 'மீம் மெட்டீரியல்' ஆகிப் போனார்.
அதாவது பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரை சூடேற்றும் வகையில் கேள்விகளை எழுப்பி பின்னர் அவரை கோபப்பட வைத்து அந்த கோபத்தை மட்டும் ஊடகங்களில் பெரிதுபடுத்தி பத்திரிகையாளர் சந்திப்பில் இவருக்கு சரியாக நடக்க தெரியவில்லை, கேள்வி கேட்டால் முழிக்கிறார், பதில் கூற தெரியவில்லை, பதிலே தெரியவில்லை, அரசியல் தெரியவில்லை, அது தெரியவில்லை இது தெரியவில்லை மொத்தத்தில் இவர் அரசியலுக்கு லாயக்கற்றவர்.
இவர் வெறும் திரையில் மட்டுமே கதாநாயகன் ஆனால் நிஜத்தில் 'காமெடி பீஸ்' என்பது போல மக்களிடையே தவறான பிம்பத்தை பரப்பி அதன் மூலம் விஜயகாந்த அவர்களின் அரசியல் செல்வாக்கை நன்கு சரிய வைத்தார்கள். அதன் விளைவு 2011ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் அமர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மற்றும் அவரது கட்சி இன்று அரசியலில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அந்த முறையைத்தான் தற்பொழுது தமிழகத்தின் சில மீடியாக்கள் அண்ணாமலையிடம் கையாளுகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குள் அவரது அரசியல் பாய்ச்சல் வேற லெவலில் இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க தலைவராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து ஆளும் கட்சி செய்யும் தவறுகளை எடுத்து மக்கள் மத்தியில் கூறுவது மட்டுமல்லாமல், தமிழகத்தின் தேவையை உணர்ந்து அறிக்கைகள் அரசியல் செய்வதில் வல்லவராக இருக்கிறார், குறிப்பாக தி.மு.க'விற்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார்.
இந்தியாவை ஆளும் பா.ஜ.க கட்சியின் ஒரு மாநில தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என்ற அளவிற்கு மற்ற மாநில பா.ஜ.க தலைவர்களுக்கு இவர் முன்னுதாரணமாக உள்ளார். ஐபிஎஸ் படித்தவர், கள நிலவரம் புரிந்தவர், விவசாயம் தெரிந்தவர், எளிய குடும்ப பின்னணி, குறிப்பாக இளைஞர், நாட்டுக்காக தன்னலம், குடும்ப நலம் பாராமல் உழைக்கும் ஒருவர் இப்படி அண்ணாமலையை சுற்றி அரசியல்வாதிகள் குறை கூற முடியாத அளவிற்கு ஏகப்பட்ட விஷயங்கள் பாசிட்டிவாக இருப்பதுதான் எதிர்கட்சிகளை மிரள வைக்கின்றன.
ஏனெனில் அரசியல்வாதிகளால் இவரை கைநீட்டி விமர்சிக்க முடியவில்லை, அண்ணாமலை ஊழல் செய்துவிட்டார்! அண்ணாமலை லஞ்சம் வாங்கி விட்டார்! அண்ணாமலையில் மேல் பாலியல் புகார் உள்ளது! அண்ணாமலை அப்படி, அண்ணாமலை இப்படி என அரசியல்வாதிகளால் அண்ணாமலையை பற்றி குறை கூற முடியவில்லை அப்படி குறை கூறுபவர்கள் மீது மக்கள்தான் 'அண்ணாமலையை பற்றி எப்படி பொய் சொல்றாங்க பாரு' என அண்ணாமலை மேல் குறை கூறும் அரசியல்வாதி மேல் சந்தேகம் கொள்கின்றனர். அண்ணாமலையை குறை கூறுபவர்கள் தன் மீது சேற்றை வாரி இறைத்து கொள்வது போல உள்ளது தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழல்.
இது போன்ற சூழலில் அண்ணாமலையை நேரடியாக மோதி எதிர்க்க முடியாதவர்கள் தற்போது எடுத்துள்ள ஆயுதம் தான் தமிழக மீடியா, குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு முறையும் அண்ணாமலையின் பத்திரிகை சந்திப்பை எடுத்துக் கொண்டால் அண்ணாமலை முன் வைக்கப்படும் கேள்விகள் அவர் ஐபிஎஸ் தேர்விலும் கூட வைத்திருக்கப்பட மாட்டாது, அந்த அளவிற்கு இருக்கும் என சொல்ல வேண்டும்.
இந்தியாவை பத்தின தகவல்கள், மாநிலத்தை பத்தின தகவல்கள், நீங்கள் ஊழல் என்கிறீர்களே எவ்வளவு பணம்? எவ்வளவு பைசா? எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளதா? என கேட்பவர்கள் தமிழகத்தின் இதர அரசியல்வாதிகளிடம் அந்த போல் கேட்பதில்லை குறிப்பாக தமிழகத்தின் பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்து வர அரசியல்வாதிகளிடம் இவர்கள் கேட்கும் கேள்விகள் எப்படி தெரியுமா? சார் நீங்க எளிமையாக இருக்கிறீர்களே அதற்கு காரணம் என்ன சார்? உங்களுக்குப் பிறகு உங்கள் வாரிசுகள் அரசியல்களுக்கு வருவார்களா? சார் தமிழகத்தில் உங்களுக்கு பிடித்தது எது? சார் உங்களுக்கு தேங்காய் சட்டினி பிடிக்குமா தக்காளி சட்டினி பிடிக்குமா? இது போன்ற மெல்லிய கேள்விகள் தான் அவர்களிடம் இருக்கும்!
ஆனால் அண்ணாமலையிடம் கேட்கும் கேள்வியோ அனைத்தும் மிக கடினமாக இருக்கும் மேலும் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் சமயம் பார்த்து அண்ணாமலையை கோபப்படுத்தும் வித்தையை அவ்வப்போது பிரயோகித்து வருகிறார்கள் சில மீடியாக்கள்.
குறிப்பாக சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பை எடுத்துக் கொள்ளலாம் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் அண்ணாமலையை கோபப்படுத்தி நான் உங்களுக்கு அதற்கு பதிலாக நான் உங்களுக்கு தகவல் தருகிறேன் அதை நீங்கள் ஒளிபரப்ப தைரியம் உள்ளதா என சொன்ன அண்ணாமலை வார்த்தையை பிடித்துக்கொண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் வெளியில் சென்று யாருக்கோ போன் செய்துவிட்டு வந்து மீண்டும் அண்ணாமலையே எங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வரவேண்டும் என அடம் பிடித்து கூப்பிட்டு மேலும் கோபப்படுத்துகிறார்.
ஒரு மாநில தலைவரிடம் இப்படி பேசும் பத்திரிகையாளரின் உள்நோக்கம் அண்ணாமலை மீதான வெறுப்புதான் என அப்பட்டமாக தெரிகிறது. இதனையே தி.மு.க, அ.தி.மு.க போன்ற இதர கட்சிகளின் மாநில தலைவர்கள் முன்பு சென்று பத்திரிகையாளர் அவர்களின் அறையில் இதே கேள்வியை கேட்பார்களா? இல்லை இதுவரை கேட்டு உள்ளார்களா?
அறிவாலயத்திலேயே அல்லது லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் அலுவலகத்திற்குள் இதுபோன்று சென்று ஒரு மாநில தலைவரிடம் இதுவரை இவர்கள் கேள்வி வைத்தார்கள் என சரித்திரம் உண்டா? கிடையவே கிடையாது!
இதற்கு முன்பு இவர்கள் கேள்வி வைத்துள்ளார்கள் யாரிடம் என்றால் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்'திடம் அவரை இதே போல் கோபப்படுத்தி தங்களின் விசுவாசத்தை கட்டிக்கொண்டார்கள், போல் அதே பிரயோகத்தை அண்ணாமலை மீது வைக்க பார்க்கிறார்கள் ஆனால் விஜயகாந்த் அதில் சிக்கி விட்டார், ஆனால் அண்ணாமலையோ அதில் சிக்காமல் வலை வீசியவர்களை இழுத்து அவர்களின் முகத்திரையை மக்கள் முன்பு இதுதான் மீடியா! இதுதான் இவர்கள் செய்யும் தொழில்! இவர்கள் வருமானத்திற்காக, இவர்களுக்காக எலும்பு துண்டு போடுபவர்களுக்காக இவர்கள் இப்படி கேள்வி கேட்கிறார்கள்! மக்களே இவர்களை புறக்கணியுங்கள் என தற்பொழுது கூறி வருவது இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலையின் அரசியல் இமேஜை உயர்த்தியுள்ளது.