Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வரும் சூப்பர் ஸ்டார் - இது ஆன்மீக மண் என அடித்து கூற வரும் அவதாரம்.!

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வரும் சூப்பர் ஸ்டார் - இது ஆன்மீக மண் என அடித்து கூற வரும் அவதாரம்.!

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வரும் சூப்பர் ஸ்டார் - இது ஆன்மீக மண் என அடித்து கூற வரும் அவதாரம்.!

Mohan RajBy : Mohan Raj

  |  3 Dec 2020 5:08 PM GMT

தமிழக அரசில் களத்தில் இதுவரை பல முதல்வர்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். ஆனால் அவர்களில் இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்கள் தமிழ் சினிமா தந்த முதல்வர்கள்தான். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன், ஜெயலலிதா போன்ற நால்வருமே இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் காரணம் இவர்கள் அரசியலுக்கு முன் சினிமா'வின் புகழ் வெளிச்சத்தில் வலம் வந்தது.

அதுபோல் தமிழகம் அடுத்த முதல்வரை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த வேளையில் ஓர் நட்சத்திரம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் பத்தோடு பதினொன்றாக நட்சத்திரமாக இருப்பவர் அல்ல 40 வருடமாக தமிழ் சினிமாவை கட்டி ஆள்பவர்.

சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால், மக்களால், சினிமா உலகத்தினரால், ஊடகத்தினரால், அரசியல்வாதிகளால், விளையாட்டு பிரபலங்களால் என அனைத்து தரப்பினரையும் தனது வசீகரத்தால் கட்டி போட்டவர் திரு.ரஜினிகாந்த் அவர்கள். திரு.ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தது போல் "வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் நான் அரசியலுக்கு வருகிறேன்" என கூறியது போல் இன்று தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் வருகையை அறிவிக்க காரணமான முக்கிய கருத்து "தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லை ஆகையால் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் தேவை! 'சிஸ்டம் கெட்டுபோய்விட்டது, எனவே அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் தேவை" என கூறினார். மேலும் அதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் மற்றொரு பொதுக்கூட்டத்தில் "என்னால் எம்.ஜி.ஆர் ஆட்சியை தர இயலும்" என உறுதிபட கூறினார்.

இந்த நிலையில் கோரோனா நோய் தொற்று ஊரடங்கு குறுக்கிட தன் உடல்நலம் காரணமாக அரசியல் அறிவிப்பை தள்ளி வைத்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் இன்று "தனது கட்சி பற்றிய அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன், வரும் ஜனவரியில் கட்சியை துவக்குவேன் என கூறி தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் ஓர் அலையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக அரசியல் களம் திரு.ரஜினிகாந்த் அவர்கள் கூறியது போல் வெற்றிடமாக உள்ளது. தனது 94வது வயதிலும் கட்சி பணிகளை கவனித்த கருணாநிதி இல்லை, இறக்கும் வரை முதல்வராக அ.தி.மு.க என்ற பேரியக்கத்தை கட்டி காத்த ஜெயலலிதா அம்மையார் இல்லை. இந்த இருவரும் இல்லாமல் அ.தி.மு.க மற்றும் தி.மு.க செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இந்த நிலையில் மக்களிடம் இந்த இரு திராவிட கழகங்கள் அரசியல் வெறுப்பை சம்பாரித்துவிட்டது. எதிலும் ஊழல், அரசு அதிகாரிகளின் மெத்தனம், சமூக சீர்கேடுகள், அரசியலை பிழைப்பாக நடத்தும் அரசியல்வாதிகளின் ரவுடியிசங்கள் என தமிழகம் தகிக்கும் சூழலில் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை பற்றிய அறிவிப்பு தமிழக மக்களிடையே குறிப்பாக இளைஞர் மற்றும் பெண்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், அரசியல் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலங்களே உள்ள நிலையில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த அதிர்வலை தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தும் என இப்பொழுதே மக்கள் மற்றும் மாற்று அரசியலை எதிர்கொள்ளும் அனைவரின் நடவடிக்கைகளில் இருந்து தெரிகிறது.

பார்ப்போம் பெரியார் மண் ரஜினியால் ஆன்மீக மண்'ணாக மாற போகிறதா என்று?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News