Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க-விற்கு இனிக்க துவங்கிய இந்துக்களின் வாக்கு வங்கி! காற்றில் பறக்கும் திராவிட கொள்கை!!

தி.மு.க-விற்கு இனிக்க துவங்கிய இந்துக்களின் வாக்கு வங்கி! காற்றில் பறக்கும் திராவிட கொள்கை!!

தி.மு.க-விற்கு இனிக்க துவங்கிய இந்துக்களின் வாக்கு வங்கி! காற்றில் பறக்கும் திராவிட கொள்கை!!

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jan 2021 4:47 PM GMT

"தனித் திராவிட நாட்டிலே இந்துக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?" என எழுதினார் தி.மு.க நிறுவனர் சி.என்.அண்ணாதுரை அதன் பிறகு 24.10.02 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் "இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்" என அப்போதை தி.மு.க தலைவர் மு.கருணாநிதி இந்துக்களை பற்றி கேவலமாக கூறினார்.

பின் காலங்கள் சென்றன இந்துக்களை தி.மு.க வஞ்சிக்கின்றது என காலப்போக்கில் இந்து சமுதாய மக்களுக்கு புரிந்துகொள்ள துவங்கிய காலகட்டமும் வந்தது காலத்ததால் கருணாநிதியும் மறைந்தார். பின் அவரின் வாரிசு என்ற அடையாளத்துடன் ஸ்டாலின் பதவி ஏற்கும் போது இந்துக்களின் ஒற்றுமை கணிசமாக உயர துவங்கியது அப்பொழுது தி.மு.க தலைமையின் வார்த்தைகளும் மாற துவங்கியது.

அதுவரை இந்துக்களை அடித்து பேசிய தி.மு.க தலைமை முதன் முறையாக அணைத்து பேச துவங்கியது. 2015'ம் ஆண்டு முதன் முறையாக தி.மு.க இந்துக்களை அரவணைக்க துவங்கிய ஆண்டு, அதுவரை 'இந்துக்களுக்கு என்ன வேலை' எனவும் இந்துக்களை 'திருடன்' எனவும் பேசிவந்த தி.மு.க'வின் தலைவர்கள் வரிசையில் 2015 ஆண்டு தஞ்சையில் 'நமக்கு நாமே' என்ற அரசியல் பரப்புரை பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் பேசியது "இந்துக்களின் எதிரி என்று தி.மு.க'வை காண்பிக்க முயற்சிக்கின்றனர். தி.மு.க'வில் இருப்பது 90% இந்துக்களே" என்று இந்துக்களின் மீது அரவணைப்பை முதன் முதலில் காட்டினார்.

பின் காலங்கள் செல்லச்செல்ல காட்சிகள் மாறின தமிழகத்தில் இந்துக்களின் வாக்கு வங்கி பலதரப்பட்ட எண்ணிக்கையை எட்ட துவங்கியவுடன் ஸ்டாலின் மகனும் தி.மு.க'வின் இளைஞரணி செயலாளருமாகிய உதயநிதி 'விநாயகர் சதுர்த்தி' அன்று விநாயகரின் சிலையை தன் மகள் தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். பலதரப்பட்ட விமர்சனங்கள் கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் இந்து மத எதிர்ப்பாளர்கள் மத்தியில் எழுந்த பின் வழக்கம்போல் அதை சமாளித்தார்.

ஆனால் அதன் பிறகான உதயநிதியின் பிரச்சார சுற்றுப்பயணங்களில் கண்டிப்பாக இந்துக்களின் குறிப்பாக இந்துக்களின் ஆணிவேரான ஆலயங்களை பாதுகாத்து பராமரிக்கும் பிராமணர் சமுதாயத்தின் மீதும், சைவ மற்றும் வைணவ மடாதிபதிகளின் மீது திடீரென உதயநிதிக்கு பாசம் பீறிட்டு வந்துவிடுகிறது.

கடந்த கொரோனோ காலகட்டத்தில் அனைவருக்கும் உதவி பொருள்கள் வழங்குகிய நிகழ்ச்சியில் படம் பிடித்தாலும் அதில் பிராமணர்கள் இருக்கும் வண்ணம் பார்த்துக்கொண்டார் தி.மு.க'வின் பட்டத்து இளவரசர். காரணம் இந்துக்கள் வாக்கு வங்கி!

அதன் பிறகு டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயண சமயங்களில் வேளாங்கண்ணி, நாகூர் என்று மறவாமல் போனவர் தருமபுரம் ஆதீனத்தின் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகளை பார்த்து ஆசி வாங்கி சென்றார். காரணம் இந்துக்கள் வாக்கு வங்கி!!

தற்பொழுது விழுப்புரம் திருக்கோவிலூர் சென்றவர் அங்கு ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய ஸ்வாமிகள் அவர்களை சந்தித்து பவ்யமாக வணங்கிவிட்டு வந்துள்ளார்.

அதனை தனது ட்விட்டர் பதிவில்,

"விழுப்புரம் (ம) - திருக்கோவிலூரில் திரு.இராமானுஜர் ஜீயர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பிரச்சாரப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்திய ஜீயர் அவர்களுக்கு நன்றி" என பெருமையாக பதிவிட்டுள்ளார்.

காலத்தின் கோலத்தால் தி.மு.க-விற்கு இந்துக்களின் வாக்கு வங்கி இனிக்க துவங்கியுள்ளது. இனி அறிவாலய வாசலில் விநாயகரை வைத்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

'சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்!

ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை, அவர் எப்போதும் வால் பிடிப்பார்"

என்ற புரட்சிதலைவர் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News