வள்ளுவன் தந்த குறளை வண்ணத்தமிழ் குன்றாத கவிதையாக மாற்றி அசத்திய பெண்மணி!
1330 திருக்குறள்களையும் ஒரு பெண் கவிஞர் குறுங் கவிதையாக மாற்றியமைத்து புதுமை படைத்து இருக்கிறார்.
By : Karthiga
1330 திருக்குறள்களையும் நீண்ட நெடிய விளக்க உரைகள் இன்றி எளிமையான குறுங்கவிதைகளாக மாற்றி கவிச்சோலை போல அமைத்திருக்கிறார் பெண் கவிஞர் ஒருவர். அவரது இந்த புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி ஒரு அமர்க்களமான வேலையை செய்து முடித்த அந்த பெண்ணின் பெயர் சித்ரா மகேஷ். பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்டவரான இவர் தமிழ் கவிதைகள் குறித்த பி.ஹெ.ச்.டி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர்.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் அமெரிக்காவின் டாலஸ் நகரில் செட்டில் ஆனாலும் தமிழ் மீது ஆர்வமும் தமிழ் இலக்கியங்களை ரசித்து வாசிக்கும் காதலும் அவருக்கு குறைந்தபாடில்லை. அப்படி தமிழ் மீது கொண்ட பற்று தான் அவரின் இந்த புதுமையான முயற்சிக்கு வித்தாக அமைந்துள்ளது . வள்ளுவன் தந்த திருக்குறளை வண்ணத்தமிழ் குன்றாத அழகிய குறுகவிதை வடிவில் தொகுத்துக் கொடுத்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
SOURCE:DAILY THANTHI