Kathir News
Begin typing your search above and press return to search.

'கதிர் & தி கம்யூன் எழுத்துக்களால் தூக்கம் தொலைத்த நிதியமைச்சருக்கு...' - அனைவரும் முரசொலி படிப்பவர்கள் இல்லையே அமைச்சரே!

29 ஆகஸ்ட் 2022 அன்று, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையின் படத்தை ட்வீட் செய்துள்ளார்,

கதிர் & தி கம்யூன் எழுத்துக்களால் தூக்கம் தொலைத்த நிதியமைச்சருக்கு... - அனைவரும் முரசொலி படிப்பவர்கள் இல்லையே அமைச்சரே!

Mohan RajBy : Mohan Raj

  |  4 Sep 2022 2:38 PM GMT

29 ஆகஸ்ட் 2022 அன்று, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையின் படத்தை ட்வீட் செய்துள்ளார், இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 50% அதிகரித்துள்ளது என.




மேலும் அவரது ட்வீட்டில், பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா அவர்களை குறிப்பிட்டு, பி.டி.ஆர் பற்றிய செய்தியை வெளியிடும் சில நிறுவனங்களையும் குறிவைத்து, 'எஸ்.ஜி.சூர்யா போன்ற மதவாதிகள் முட்டாள்தனமான செய்தி அட்டைகளை கதிர் & கம்யூன் போன்றவைகளில் பரப்புகிறார்கள், மேலும் அரசாங்கத்தின் மீது பழி போடுகிறார்கள்' என குறிப்பிட்டார்.

தி.மு.க அமைச்சருக்கு, தன்னால் இயலவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும், உண்மையான தகவல்களை மூடி மறைக்கும் வழக்கமும் உள்ளது. அதன் நீட்சியாக சில திரிக்கப்பட்ட கருத்துக்களுடன் அவரின் வழக்கமான பொய் தகவல் பரப்பும் வேலையை செய்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட தி இந்து கட்டுரையில் இருந்த தகவலானது, 'மாநிலத்தின் சொந்த வருவாயில் மிக உயர்ந்த வளர்ச்சி மதுபானத்தின் மீதான மாநில கலால் வரியிலிருந்து கிடைத்துள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பின்புலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க அரசு தனது மக்களுக்கு அதிக மதுபானங்களை விற்கிறது, மக்களிடம் மதுபானம் விற்று வரும் மாநில கலால் வரி 116.3% மூலம் வந்த வளர்ச்சியை தமிழகத்தின் வருமான வளர்ச்சிபோல் காண்பித்துள்ளது.

இது மட்டுமின்றி பி.டி.ஆர் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 2021-22 நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசு ₹36,013 கோடி சம்பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தான் நிதியமைச்சராக இருக்கும் மாநிலம் சாராயம் விற்ற காசில் வந்த வருமானத்தை பெருமையாக ஒரு நிதியமைச்சர் கூறுகிறார் என்றால் அவரின் பொருளாதார அறிவை நினைத்து பாருங்கள்.

அவர் கூறியபடியே இந்த வருவாய் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால் அதிலும் நிதியமைச்சரின் அசாத்திய பொருளாதார அறிவு வியக்க வைக்கிறது. எப்படி என்றால் இந்த ஆண்டுக்கான முதல் காலாண்டில் (Q1 - 2022-23) பெற்ற வருவாயை விட கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் (Q1 - 2021-22) தமிழகம் பெற்ற வருவாய் அதிகம். இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆண்டு கொரோனா பேரிடரில் தமிழகம் தவித்து வந்தது. அப்படி கொரோனா பேரிடர் காலத்தில் பெற்ற வருவாயை விட கம்மியாக வருவாய் பெற்ற இந்த ஆண்டை எப்படி இந்த நிதியமைச்சர் வளர்ச்சி என்கிறார்?


தமிழக மக்கள் அனைவரும் முரசொலி படிப்பவர்கள் என நினைத்துவிட்டாரா பி.டி.ஆர் அவர்கள்?

கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டின் (Q4) உடன் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டை (Q1) உடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் தமிழகத்தின் செயல்பாடுகளை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவதே சரியான விஷயம் ஆகும் இதைத்தான் பொருளாதார வல்லுனர்களும் ஏற்பார்கள்.

2021-22ஆம் காலாண்டிற்கான தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் (யூனியன் வரிகளில் மாநிலத்தின் பங்கு நீங்கலாக) ₹37,718.09 கோடிகள். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ₹35863.86 கோடியாக குறைந்துள்ளது.



ஒருவேளை, தி இந்து 2021-22 ஆம் ஆண்டின் Q4 வருவாயை 2022-23 ஆம் ஆண்டின் Q1 வருவாயுடன் ஒப்பிடவில்லை, அப்படி ஒப்பிட்டிருந்தால் தெரியும் இது வளர்ச்சியா அல்லது சறுக்கலா என.

மறுபுறம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு Q1 2022-23 வருவாய் Q4 2021-22 வருவாயை விடக் குறைவாகத் தோன்றலாம். ஆனால், மத்திய அரசின் பகிர்வை சேர்க்காமல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்துள்ளது.

இதில் தெளிவாக தெரிவது என்னவென்றால் குஜராத்தின் சொந்த வரி வருவாய் முந்தைய காலாண்டை விட இந்த காலாண்டில் 4.88% அதிகரித்துள்ளது. மறுபுறம், தமிழகம் 4.92% குறைந்துள்ளது.



மேலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், குஜராத் தனது மக்களை மது போதையில் ஆழ்த்தாமல் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற இதேபோன்ற பல மாநிலங்கள் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் குறைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளன என்பது உண்மைதான்.

2021-22 ஆம் ஆண்டின் Q1 உடன் ஒப்பிடும்போது, ​​Q1 இல் சொந்த வரி வருவாயில் 50% உயர்வைக் காட்டும் தமிழ்நாட்டிற்கு PTR பாராட்டை தேட விரும்பினால், பல மாநிலங்கள் அதிக சொந்த வரி வருவாயைப் பதிவு செய்துள்ளன. முதல் காலாண்டில் மகாராஷ்டிராவின் சொந்த வரி வருவாய் 68% மற்றும் குஜராத்தின் 50% அதிகரித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது மாநில கலால் வரியை குறைவாகவே உயர்த்தியுள்ளன, அதாவது இந்த மாநிலங்கள் வருவாய் ஈட்டுவதற்காக மக்கள் வாயில் மதுவை ஊற்றுவதில்லை.





எனவே, தனது மோசமான செயல்பாட்டை மறைப்பதற்குப் பதிலாக, தி.மு.க அமைச்சர் தன்னையும், தான் ஆற்றிய பணிகளையும் தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் சாராயத்தின் வருவாயை தான் ஆற்றிய பணியின் பலன் அது என்பதை விளம்பரப்படுத்துவதற்கு பி.டி.ஆர் வெட்கப்படவேண்டும். முக்கியமாக தான் இருப்பது தி.மு.க'வில் என்பதை உணர்ந்து கழகத்தின் வரலாற்றை நினைத்து சற்று வார்த்தைகளை குறைப்பது குறைந்தபட்ச மரியாதையாவது காப்பாற்றும்.



Source - The Commune




Next Story
கதிர் தொகுப்பு
Trending News