Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளத்தில் தொடரும் திரிணாமூல் காங்கிரசின் அராஜகம் - மக்கள் கொந்தளிப்பு!

மேற்கு வங்காளத்தில் தொடரும் திரிணாமூல் காங்கிரசின் அராஜகம் - மக்கள் கொந்தளிப்பு!

Saffron MomBy : Saffron Mom

  |  5 May 2021 1:30 AM GMT

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியானது. இதில் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். அசாமில் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. புதுச்சேரியிலும் தமிழகத்திலும் மட்டும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன.

இதில் மற்ற நான்கு மாநிலங்களும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அமைதியுடன் சென்று கொண்டிருக்கும் வேளையில், மேற்கு வங்காளத்தில் மட்டும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் எதிர்க்கட்சிகளின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக மேற்கு வங்க தெருக்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரிணாமூல் குண்டர்கள் விட்டு வைக்கவில்லை என்றாலும், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பா.ஜ.கவினர் தான். பா.ஜ.க அலுவலகங்கள் எரிப்பு, பெண்களை பலவந்தப்படுத்துதல், பாஜக தொண்டர்களை படுகொலை செய்வது என அவர்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவானது.

காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கிக் கொண்டனர். முடிவுகள் வந்த நாளிலிருந்து வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் எச்சூரி மற்றும் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களும் இது குறித்து கண்டனங்களை எழுப்பி வரும் வேளையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்னும் மம்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.

ஒரு வழியாக சசிதரூர் கூட நடந்த வன்முறைகளை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு விவகாரம் கையை மீறி சென்றது. பா.ஜ.க தொண்டர்கள் பக்கத்து மாநிலமான அசாமுக்கு தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் செல்லும் அளவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம் தொடர்கிறது. இதுகுறித்து இரண்டு நாட்களாக #BengalBurning #BengalViolence என்ற ஹாஷ்டாக்கள் பல்வேறு வீடியோக்கள் புகைப்படங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு மோசமாக அரசியல் படுகொலைகளையும் வன்முறைகளையும் எதிர்க்கட்சிகள் மீது கட்டவிழ்த்துவிடும் மம்தா பானர்ஜியின் அரசாங்கத்தை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும் என்ற ஹாஷ்டாக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. இதிலும் வார்த்தைக்கு வார்த்தை ஃபாசிசம் பாசிசம் என்று கூறும் இடதுசாரி தாராளவாதிகள், கம்யூனிஸ்டு, காங்கிரஸும் பாதிக்கப்பட்டும் கூட மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தவில்லை.

பல முன்னாள் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கூட வெளிப்படையாக அதிர்ச்சி அளிக்கும் அளவிற்கு வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. மேற்கு வங்காள பா.ஜ.க இது தொடர்பாக கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தலைவர்கள் இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட பா.ஜ.க தொண்டர்களின் வீட்டிற்கு சென்று வருகின்றனர். பா.ஜ.க தேசிய தலைவர் J.P.நட்டா பாதிக்கப்பட்ட பாஜக தொண்டர்கள் சந்தித்து நேரில் நலம் விசாரித்தார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் போலீசாரிடமிருந்து இதுகுறித்த அறிக்கையை கேட்டுள்ளார். பிரதமர் மோடி ஆளுநரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மேற்கு வங்க நிலைமையை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து, சட்ட ஒழுங்கு சீர்கெடும் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பாஜக தொண்டர் சுதிப் பிஸ்வாஸ் பட்டப்பகலில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் படுகொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் போஸ் கொடுத்தனர்.

முன்னூறு முதல் நானூறு பா.ஜ.க தொண்டர்கள் அசாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக அசாம் பா.ஜ.க தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா ட்வீட் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சவுரவ் பிரசாத் தங்களுடைய காங்கிரஸ் தொண்டர்கள் என்று கடுமையாகத் தாக்கப்பட்டதாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார். புகைப்படங்களையும் வெளியிட்டார். ஒருவழியாக இது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, நடந்த சம்பவங்கள் எல்லாமே பொய் என்றும் இது பழைய வீடியோக்கள் என்றும் தற்போது எதுவுமே நடக்கவில்லை என்றும் மிகவும் வெளிப்படையாக துணிந்து பொய் பேசியிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்துக்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க முடியவில்லை என்றால் இந்து சமூகம் தற்காப்பை கையில் எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர்.

பல நடுநிலை 'பத்திரிக்கையாளர்கள்' 'நடிகர்கள்' இந்த கொலைகளை நியாயப்படுத்தியும் அவர்கள் பா.ஜ.க தொண்டர்கள் என்பதால் இவர்களுக்கு நடப்பதெல்லாம் தேவைதான் என்ற ரீதியிலும் கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News