Kathir News
Begin typing your search above and press return to search.

திரிணாமுல் காங்கிரஸ் VS பா.ஜ.க: காங்கிரஸ், இடதுசாரி வாக்காளர்களின் ஓட்டுகள் எங்கே செல்லும்?

திரிணாமுல் காங்கிரஸ் VS பா.ஜ.க: காங்கிரஸ், இடதுசாரி வாக்காளர்களின் ஓட்டுகள் எங்கே செல்லும்?

திரிணாமுல் காங்கிரஸ் VS பா.ஜ.க: காங்கிரஸ், இடதுசாரி வாக்காளர்களின் ஓட்டுகள் எங்கே செல்லும்?

Saffron MomBy : Saffron Mom

  |  14 Jan 2021 6:36 AM GMT

வரவிருக்கும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக விளங்கும் திரிணாமுல் காங்கிரசிற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அங்கு உள்ள இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வாக்காளர்கள் எப்படி,யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து வெற்றிக் காற்று வீசக்கூடும்.

காங்கிரஸ் 2014 லோக்சபா தேர்தலில் இருந்து மிகவும் பலவீனமடைந்து விட்டது. 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும், இடதுசாரிகளின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் 294 இடங்களில் 211 வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியில் அமர்ந்தது.

இந்தக் கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரசே பலனடைந்து 44 இடங்களைப் பெற்று , இடதுசாரிகள் 32 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் இந்த கூட்டணி நீடிக்கவில்லை.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸும் இடதுசாரிகளும் எதிராளிகளாகப் போட்டியிட்டனர். ஆனால் 42 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது பா.ஜ.க. இதற்கு முக்கியமான காரணம் இடதுசாரி வாக்காளர்கள் பா.ஜ.க பக்கம் திரும்பியது என்று கூறப்படுகிறது.

இந்தமுறை மேற்கு வங்காள அரசியலைப் பற்றி தெரிந்தவர்கள் கூறுகையில், கம்யூனிஸ்ட் போன்ற சிறிய கட்சிகளை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் ஏனெனில் சட்டசபைத் தேர்தல்கள் உள்ளூர் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நடக்கும் என்றும் முஸ்லிம் வாக்காளர்களும் விவசாயிகளும் ஒரு முக்கியமான பங்கினை இதற்கு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய தன்னுடைய தேர்தல் பேரணிகளில் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கட்சியைக் கொஞ்சம் காட்டமில்லாமல் பேசியதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய தலைவர் சுவேந்தர் ஆதிகாரி வெளிப்படையாகவே இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வாக்காளர்களை பா.ஜ.கவிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் நடந்த பேரணியில் பேசிய அவர், இடதுசாரிகளையும், காங்கிரஸில் இருக்கும் எங்கள் நண்பர்களையும் தான் ஒன்று கேட்டுக் கொள்வதாகவும், அவர்களுடைய கட்சி பேரணி கூட்டங்களில் நடந்து கொள்ளுங்கள் ஆனால் பெங்கால் நன்மைக்காக பா.ஜ.கவுக்கே ஓட்டளியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

2019 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகளை நாம் ஆராய்ந்து பார்த்த போது போது, பா.ஜ.கவின் பெரும் வெற்றிக்கு பங்களித்தவர்கள் முப்பது வருடங்களுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்களே என்று கூறப்படுகிறது. 40 இடதுசாரி வேட்பாளர்களில் 39 பேர் தங்கள் தேர்தல் டெபாசிட் இழந்தனர்.

அதாவது பெற்ற ஓட்டுகளில் ஆறில் ஒரு பகுதி கூட இடதுசாரி கூட்டணிக்கு விழவில்லை. இந்த ஒரு மிகப்பெரும் நிகழ்வு ஆதிகாரியின் சொந்த தொகுதியில் கூட காணப்பட்டது.

ஆனால் அங்கே திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அவருடைய தந்தை மற்றும் இரண்டு முறை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சிசிர் ஆதிகாரி 50 சதவீத ஓட்டுகளை அவர் தொகுதியில் பெற்றார். ஆனால் பா.ஜ.க 42 சதவீதத்தை பெற்றது. இடதுசாரிகளோ 5.3 சதவீத ஓட்டுகளை பெற்று மூன்றாம் இடத்தில் வந்தது.

2014 மற்றும் 2009லும் ஆதிகாரி இந்த இடத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இடதுசாரிகள் 34.1% மற்றும் 42.5 சதவீத ஓட்டுகள் உடன் இரண்டாவது இடத்தில் வந்தனர். எனவே இடதுசாரி போட்டுக் கொண்டிருந்த பெரும்பான்மையான ஓட்டுக்கள் கடந்த முறை பா.ஜ.கவிற்கு சென்றது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அப்பொழுது இடதுசாரி கூட்டணி 41.3 ஓர் சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தாலும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. திரிணாமுல் காங்கிரஸ் 31.1 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தாலும் 19 இடங்களில் வெற்றி பெற்றனர்.

அந்த தேர்தலில் பா.ஜ.க 6.14 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்று ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தன்னுடைய வெற்றிவாய்ப்பை அதன் பிறகு பா.ஜ.க கணிசமாக அதிகரித்துக் கொண்டது. 2014ல் 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2019 18 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை சட்டசபை பிரிவுகளாக நாம் பார்க்கும் பொழுது ஏற்கனவே 2021 சட்டசபை தேர்தல்களில் அவர்கள் 122 இடங்களில் முன்னிலையிலும் திரிணாமுல் காங்கிரஸ் 163 இடங்களில் முன்னிலையிலும் இருக்கிறார்கள்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் பெரும் கலக்கம் அடைந்து இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணாமூல் மக்களவை உறுப்பினரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சுகதா ராய், "இடதுசாரிகளும் சரி காங்கிரசும் சரி எப்பொழுதும் பா.ஜ.க விற்கு ஆதரவு தெரிவித்ததில்லை. ஒன்று அவர்கள் தங்களுடைய சொந்த ஓட்டுக்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அல்லது எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கம்யூனிஸ்ட் கட்சியின் சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் பா.ஜ.க இரண்டுமே ஆட்சிக்கு வராது என்றும் இடதுசாரி காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே ஆட்சிக்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார்.

மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்லும் ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.கவிற்கு இழப்பாகும் என்று தெரிவித்தனர். பா.ஜ.க.விற்கு 2019ல் ஓட்டளித்த இடதுசாரி வாக்காளர்கள் மறுபடியும் இடதுசாரிகளுக்கு வாக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க துணைத் தலைவர் ஒருவர், எங்கள் கட்சி சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வர முடியாது என்பதால் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்கு என்று அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News