Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசை வார்த்தை பேசி, அரசியல் செய்து, நடுத்தெருவில் விட்ட உதயநிதி ஸ்டாலின் - கொதிக்கும் மருத்துவ மாணவர்கள்!

எதிர்கட்சியாக இருந்த பொழுது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண விவகாரத்தில் ஆதரவு தருகிறேன் என்ற பெயரில் அரசியல் செய்துவிட்டு எதிர்க்கட்சியான பிறகு அது பற்றி கண்டுகொள்ளாமல் உதயநிதி ஸ்டாலின் இருப்பது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை வார்த்தை பேசி, அரசியல் செய்து, நடுத்தெருவில் விட்ட உதயநிதி ஸ்டாலின் - கொதிக்கும் மருத்துவ மாணவர்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  1 May 2022 4:16 PM GMT

எதிர் கட்சியாக இருந்த பொழுது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண விவகாரத்தில் ஆதரவு தருகிறேன் என்ற பெயரில் அரசியல் செய்துவிட்டு ஆளும் கட்சியான பிறகு அது பற்றி கண்டுகொள்ளாமல் உதயநிதி ஸ்டாலின் இருப்பது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே தங்களிடமும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று 10-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பின்பு அதன் கட்டுப்பாட்டில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது, ஆனாலும் அங்கு தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் மாணவர்கள், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே போல் மாணவர்கள் இதே கட்டண விவகாரம் தொடர்பான போராட்டத்தில் ஈடுட்டனர்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, ஆட்சி மாறியதும் கட்டணத்தை மாற்றுவோம் என மாணவர்களிடம் உறுதி அளித்தது. போதாக்குறைக்கு தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கியது மட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பதிவில், 'சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியரை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய நிலையில் அதை முடக்க மாணவ, மாணவிகள் மாலையிலிருந்து விடுதியில் இருந்து வெளியேற வேண்டுமென மிரட்டப்பட்டனர். நீட் தேர்வை அனுமதித்து பலரின் மருத்துவராகும் கனவை தகர்க்கும் அடிமைகள், ஏழை எளிய மாணவர்களையும் அதிக கட்டணம் வசூலித்து நெருக்கடிக்குள்ளாக்குவது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டத்தை கட்டணத்தை அரசால் நடத்தப்படும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'என கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போராட்டம் நடக்கும் வேளையில் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார். அப்பொழுது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.



மேலும் அடுத்த சில தினங்களில் இதே விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன், 2021 ஜனவரி மாதம் 26-ஆம் தேதி அன்று போராட்டத்தில் ஈடுபடும் மனவர்களுடன் காணொளி கட்சி வாயிலாக உரையாடி தங்களது வழக்கமான வசனமான, 'அடுத்த ஆட்சி கழக ஆட்சி தான் கவலைப்படாதீர்கள்' என உறுதியளித்தார்.


இதுமட்டுமில்லாமல் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாத காலமே இடைவெளி இருக்கும் நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து உதயநிதி அரசியல் செய்யும் விதமாக தனது ட்விட்டர் பதிவில், 'சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அரசு மருத்துவமனை போலவே கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டு மீண்டும் பழைய கட்டணத்தை கேட்கிறது எடுபிடி அரசு' என கனமான வார்த்தைகளால் இந்த சம்பவத்தை குறிப்பிட்டார்.


எதிர்க்கட்சியாக இருந்தபோது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி விவகாரத்தை வைத்து எப்படி எலாம் அரசியல் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் அரசியல் செய்துவிட்டு, தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆன பின்பும் இந்தக் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாற்றாமல் அதே நிலையிலேயே வைத்துள்ளது தி.மு.க அரசு.

இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டில் இக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதனை கண்டித்து 2, 3, 4-ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 10-வது நாளான நேற்று முதலாம் ஆண்டு தவிர மற்ற ஆண்டு படிக்கும் மாணவர்கள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எப்படி விடுதிகள் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டதோ அதேபோலவே தற்போதும் 2, 3, 4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது பரபரப்பான காரணங்களை வைத்து அரசியல் செய்து மக்கள் மத்தியில் தங்கள் பெயரை முன்னிறுத்தி கொள்ள பாடுபட்ட தி.மு.க-வினர் ஆளுங்கட்சியான பின்னரும் எந்த விவகாரத்திற்காக அரசியல் செய்தனரோ அந்த விவகாரத்தை சரி செய்யாமல் மக்கள் மற்றும் மாணவர்களை புறக்கணிக்கின்றனர் என்பதற்கு இதுவே உதாரணம். குறிப்பாக உதயநிதி சிதம்பரம் ராஜா மருத்துவ கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் மாணவர்களைத் தன் சுயலாப அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டு தற்போது நட்டாற்றில் விட்டு விட்டார் என்பதே உண்மை.

செய்திகள் தரவு:



Next Story
கதிர் தொகுப்பு
Trending News