Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான் நெருக்கடி: பல் இல்லாத பாம்பானதா ஐக்கிய நாடுகள் சபை (UN) ?

ஐக்கிய நாடுகள் பயனற்றதா? ஆப்கானிஸ்தானின் பிரச்சினைகளுக்கு அதன் முக்கிய உறுப்பினர்கள் தான் காரணம் என்பதால் சபையை கலைத்து விடலாமா?

ஆப்கானிஸ்தான் நெருக்கடி: பல் இல்லாத பாம்பானதா ஐக்கிய நாடுகள் சபை (UN) ?
X

Saffron MomBy : Saffron Mom

  |  3 Sep 2021 10:33 AM GMT

ஆப்கானிஸ்தான் இந்த நூற்றாண்டில் கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க ராணுவம் வெளியேறியவுடன் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வீழும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் இந்த அளவிற்கு சீக்கிரம் அது நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பதிலேயே மிகவும் மோசமான கணிப்பில் கூட, ஆப்கானிஸ்தான் ராணுவப் படைகள் அதன் தலைநகர் காபூலை அடுத்த ஆறு மாதத்திற்கு பாதுகாத்து தக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

பல பாதுகாப்புத் துறை நிபுணர்களின் கருத்துப்படி, என்றைக்கு தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோ அக்கணமே வெற்றி தலிபான்களின் வசம் வந்து விட்டது. சுவாரஸ்யமாக இந்த அமைதி ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எந்த விதத்திலும் பங்கேற்கவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும் சமீப காலங்களில் காணப்படாத அளவிற்கு மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

இதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கும் பொழுது, இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட நிலைமை எப்படி உருவானது? கடந்த காலத்தில் நடந்தது போன்று இப்போது திருப்பி நடக்காமல் இருக்க நாம் எந்த பாடங்களையும் கற்றுக் கொள்ளவில்லையா? ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இந்த குறிப்பிட்ட காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட தானே? என்ற பல கேள்விகள் நமக்குள் எழுவது சாதாரணமே.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின் இறுதியில் உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் இரண்டாம் உலகப்போரை தடுப்பதில் பெரும் தோல்வி அடைந்ததையடுத்து ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை என்பது ஐக்கிய நாடுகளின் முக்கியமான அங்கங்களில் ஒன்றாகும். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை சுமக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. இதில் 5 நிரந்தர உறுப்பினர்கள் வீட்டோ அதிகாரத்துடனும், மற்றவர்கள் தற்காலிக உறுப்பினர்களாகவும் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா. இத்தகைய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வரும் எந்த தீர்மானத்தையும் தடுக்க வீட்டோ அதிகாரங்கள் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பாலான நிரந்தர உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த நலன்களையே கருதுவதாலும், தேவையான நடுநிலையான முடிவுகளை எடுக்கத் தவறியதாலும் தான் ஆப்கானிஸ்தான் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த சபை தேவையான நேரங்களில் பல்லில்லாத பாம்பாக மாறிவிட்டது. சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானின் முக்கியமான பிரச்சினைகள் அந்த நிரந்தர உறுப்பினர்களின் தலையீடுகள், குழப்பங்கள் தவறுகளால் தான் ஏற்பட்டது.

பனிப்போர் காலகட்டங்களில் முன்னாள் சோவியத் யூனியனும் (USSR) அமெரிக்காவும் சர்வதேச செல்வாக்கிற்காக ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு ஸ்திரத்தன்மை கொண்டு வருவதாக கூறிக்கொண்டே ரஷ்யா இந்த படையெடுப்பை மேற்கொண்டது. இது ஆரம்பத்தில் வெற்றிகரமாக அமைந்தாலும், முஜாஹிதீன் உட்பட மற்ற பல அமைப்புகளின் எழுச்சி சோவியத் யூனியன் தன்னுடைய இலக்கை அடைய முடியாமல் தடுத்தது. சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் ஒரு குழப்பமான நெருக்கடியில் மூழ்கியது.

அப்போதைய சோவியத் யூனியனுக்கு எதிரான போட்டி மனப்பான்மையில் அமெரிக்கா முஜைஹிதீன் மற்றும் சில அமைப்புகளுக்கு நிதி மூலங்களையும் ஆதரவையும் அளித்தது. அமெரிக்கா, பாகிஸ்தானை பயன்படுத்தி அந்தப் பிராந்தியத்தில் மத ரீதியிலான தீவிரவாதிகளை உருவாக்க உதவி செய்தது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள மதராஸாக்களுக்கு நிதி அளித்து அதில் படிப்பவர்களை தீவிரமாகி சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வைத்தது. பாகிஸ்தானுக்கு குறுகியகால பொருளாதார மற்றும் மற்ற உதவிகள் தேவைப்பட்டதால், தேவையான மனித வளங்களையும் புகலிடங்களையும் வழங்கியது.


ஆனால் செப்டம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, முஜஹிதீனல் இருந்து பிரிந்த ஒரு பிரிவான தலிபான் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்த பொழுது அமெரிக்கா தங்கள் தவறின் தீவிரத்தை உணர்ந்தது. அவர்கள் உடனடியாக ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்து தலிபான்களிடம் இருந்து நாட்டை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் வழங்கினர்.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனக்கு முன்னிருந்த அதிபர்களைப் போல் அல்லாமல், சமீபத்தில் ஆப்கானிஸ்தானை மீட்டெடுத்து கட்டுவது அமெரிக்கப் படையெடுப்பின் நோக்கம் அல்ல என்று தெரிவித்திருந்தார்.


ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததன் காரணம் அந்நாட்டை மீட்டெடுத்து கட்டுவது அல்ல என்றால், வேறு என்ன காரணம்? அங்கு புகலிடம் பெற்றிருக்கும் தீவிரவாத அமைப்புகளை அழிப்பதற்கா? அப்படி என்றால் அமெரிக்கா தற்பொழுது வெளியேறுகிறது என்றால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்புகளும் அழிக்கப்பட்டதா? இல்லை.

எந்த குழுவை அழிப்பதற்காக வந்தார்களோ அதே குழுவிடம் தான் ஆப்கானிஸ்தானை மறுபடியும் அமெரிக்கர்கள் ஒப்படைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடனை நீதிக்கு கொண்டு வருவது தான் அமெரிக்காவின் நோக்கமா? ஆனால் 2011லேயே ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டான். இப்போது வரை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் என்ன செய்துகொண்டிருக்கிறது? சுவாரஸ்யமாக ஒசாமா பின்லாடன் ஆப்கானிஸ்தானில் கண்டறியப்படவில்லை, அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானில் கொல்லப்பட்டான்.

எந்த தெளிவான தொலைநோக்குப் பார்வையும் இன்றி அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மக்களை தலிபான்களிடம் விட்டுவிட்டு வந்தது மட்டுமல்லாமல், இந்த பின்வாங்கும் படலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள நவீன ஆயுதங்களை தலிபான்களிடம் விட்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் தலிபான் தான் விமானத்துறை பெற்ற முதல் தீவிரவாத அமைப்பாக மாறி இருக்கிறார்கள்.

சீனா தங்கள் பங்கிற்கு ஆப்கானிஸ்தானின் பிரச்சனைகளில் முடிந்த அளவு லாபம் பார்க்க முயற்சிக்கிறார்கள். தங்களுடைய சொந்த பிராந்திய லட்சியங்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் அதனுடைய பெல்ட் மற்றும் ரோடு முன் முயற்சியை விரிவுபடுத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமவளங்கள் மேலும் சீனா ஒரு கண் வைத்துள்ளது. சர்ச்சைகளில் சிக்கிய ஆப்கானிஸ்தான், தலிபான் கீழ் இருக்கும் பொழுது சீனா தங்களுடைய செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் விரிவு படுத்துவது மிகவும் எளிது. இதற்கு மாறாக ஏற்கனவே ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இந்தியாவிற்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்தது.

பிரான்சும் இங்கிலாந்தும் நேட்டோ மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருப்பதால் அமெரிக்கா என்ன செய்கிறதோ அதையே பின்பற்றுவார்கள். அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் மீது எந்த சிறப்பு ஆர்வமும் இல்லை. அகதிகள் அவர்கள் நாடுகளுக்கு வந்து சேர்வார்கள் என்ற கவலைகள் இருந்தாலும், எந்த உடனடி எல்லைகளையும் அவர்கள் ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொள்வதில்லை என்பதால் அதன் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகளின் ஒரு அங்கமாக இருந்தும் ஆப்கானிஸ்தானில் எந்த மனித உரிமைகளையும் காப்பாற்ற முடியாததாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களில் சிலர் தான் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு காரணம் எனும் போது எந்த அதிகாரத்தில் ஐக்கிய நாடுகள் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்? அப்படி என்றால் ஐக்கிய நாடுகள் பயனற்றதா? ஆப்கானிஸ்தானின் முக்கியமான பிரச்சினைகளுக்கு அதன் முக்கிய உறுப்பினர்கள் தான் காரணம் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையை கலைத்து விடலாமா?

எந்தவித உலகப் போர் அல்லது அணு ஆயுத போர் ஐக்கிய நாடுகள் சபை வந்ததிலிருந்து வரவில்லை என்றாலும், நாடுகளுக்கு உள்ளேயும் நாடுகளுக்கு இடையில் உருவாகும் போர்களை தடுக்க ஐ.நா தவறி விட்டது. சொல்லப்போனால் உலகப்போர் அல்லது அணு ஆயுதப் போர் நடக்காமல் இருப்பதற்கு காரணம் இருபுறமும் கட்டாயம் அழிந்துவிடும் என்ற பயமே அன்றி, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அல்ல. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை பலபல நாடுகள் தங்களுடைய சொந்த நலன்களுக்காக அரசியல் விளையாடும் இடமாக மாறி விட்டது. எனவே வல்லரசு நாடுகள் தங்களுடைய நடவடிக்கைகளுக்கு எந்த வித விளைவுகளோ, கேள்விகளோ இல்லாமல் தப்பிக்கின்றன. இதற்கு உதாரணமாக, கொரானா வைரஸ் உருவானதில் அதன் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான சீனாவின் பங்களிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையால் அல்லது உலக சுகாதார அமைப்பால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது.

1945இன் விதிமுறைகள் 2021ற்க்கு ஏற்புடையதாகாது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் தங்களுடைய குறுகியகால சுயநலன்களைத் தாண்டி யோசிக்கவும் நடந்து கொள்ளவும் வேண்டும்.


Courtesy: Samvada World

Next Story
கதிர் தொகுப்பு
Trending News