Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வாதிகார நாடுகளை சமாளிக்க ஜனநாயக நாடுகளிடையே ஒற்றுமை வர வேண்டிய அவசியம்.!

சர்வாதிகார நாடுகளை சமாளிக்க ஜனநாயக நாடுகளிடையே ஒற்றுமை வர வேண்டிய அவசியம்.!

Saffron MomBy : Saffron Mom

  |  8 April 2021 1:56 AM GMT

பல்லாண்டுகளாக உலகம் மேலைநாடுகளின் ஜனநாயக தாராளமயமான ஒழுங்கால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பொருளாதார ஒழுங்கு முறை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக ஒற்றுமை ஆகிய சில மதிப்புகளை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒழுங்கை உருவாக்கினர்.

1980கள் மற்றும் 1990களில் ஜனநாயக மயமாக்கலின் மூன்றாம் அலை வீசத் தொடங்கியது. லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியாவிலும் அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகள் உடைந்து ஜனநாயக நாடுகள் மற்றும் நிறுவனங்களின் பெரும் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய ஜனநாயக மயமாக்கல் தேக்கமடைந்துள்ளது.

பிராந்தியங்களில் சுதந்திரம், மனித உரிமைகள், அரசின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், நீதி, சமத்துவம் ஆகியவை சரிவடையவும் தேக்கமடையவும் தொடங்கியது.

உலகெங்கிலும் பொய் செய்திகள், மக்களின் இடம்பெயர்வு, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை சமாளிக்க ஜனநாயக நாடுகள் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

2019ல் ஜனநாயக நாடுகள் இடையே மூலோபாய ஒத்துழைப்பு என்ற தலைப்பில் நடந்த ஒரு விவாதத்தில் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள ஜனநாயகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்தனர். சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா நன்கு நிறுவப்பட்ட ஜனநாயகமாக இருந்து வருகிறது.

காலனித்துவத்திற்கு பிறகு வரும் பொருளாதாரத்திற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2030ஆம் ஆண்டில் பத்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

என்றாலும் ஜனநாயகம் பெரும் அச்சத்துடன் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்கிறது என்பதை நாம் உணரவேண்டும். உலகின் சர்வாதிகார அரசாங்கங்களுக்கும் ஜனநாயகங்களுக்கும் இடையில் ஒரு புதிய போட்டி உள்ளது. இவை இங்கிலாந்து அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும்.

ஜனநாயக நாடுகள் ஜனநாயக சமூகத்தை பிரதிபலிக்கின்றன. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அரசாங்க அதிகாரிகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தொடர்புகள் பெரும்பாலான பொதுவான இலக்குகளை கொண்டிருந்தாலும், கூட்டுறவு கொள்கைகள், பிரச்சனைகள் மாறுபடும்.

தேசிய நன்மைகள், நோக்கங்கள் ஆகியவற்றில் வித்தியாசங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கடக்க நாடுகள் தொடர்ந்து உழைக்க வேண்டும். உலகமயமாக்கல் மற்றும் சர்வதேச வணிகமும் மேலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. சீனா மற்றும் ரஷ்யாவின் வளர்ச்சியை பெரும்பாலான நாடுகள் எதிர்பார்க்காததால் பலதரப்பு வர்த்தக முறை தற்பொழுது தடைபட்டுள்ளது. வர்த்தகம் செய்யப்படும் பொருட்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் சுதந்திர வர்த்தக பகுதிகள் வழியாகவே செல்கின்றன. உலகளாவிய ஜனநாயக நாடுகள் ஒருவருக்கொருவர் இன்னும் நெருக்கமாக ஈடுபடவேண்டும். சீனாவின் கூர்மையான சக்தி பல ஐரோப்பிய பொருளாதாரங்களை பாதித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் அதன் செல்வாக்கு வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது. இதனால் சிறிய ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படுகின்றன.

சீனாவின் நடவடிக்கைகள் மூன்று நோக்கங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பிளவுகளை அதிகப்படுத்துதல், சீன அரசியலமைப்புக்கு எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வைத்தல். ஜனநாயக நாடுகள் இடையே ஒத்துழைப்பு என்பது ஜனநாயகவாதிகள் மத்தியில் உருவாகிறது. இன்றைய உலகில் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி சீனாவின் எழுச்சி போன்ற மாறி வரும் எதார்த்தங்களை மேற்கத்திய நிறுவனங்கள் பிரதிபலிக்க வேண்டும்.

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் நியாயமான ஆசைகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. சீனாவின் பிரச்சினைகளை வெவ்வேறு நாடுகள் பல்வேறு விதமாக கையாளுகின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் முக்கியமான தீர்மானிக்கும் காரணி அதன் தேசிய நலன்கள் ஆக உள்ளது. தற்போதைய சூழலில் சவால்களை கருத்தில் கொண்டு சர்வாதிகார அரசாங்கங்களை சமாளிக்க ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News