இதுதான் கடைசி சான்ஸ் இல்லாவிட்டால் உங்கள் வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாது - ஆதார், பான் இணைப்பு குறித்து வருமானவரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்காதவர்களின் பான் எண் செல்லாததாகிவிடும் என வருமானவரித்துறை புதிதாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
By : Mohan Raj
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்காதவர்களின் பான் எண் செல்லாததாகிவிடும் என வருமானவரித்துறை புதிதாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பான் என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி வருமானவரித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'வருமானவரிச் சட்டம் 1961-ன் படி பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் விளக்கு அளிக்கப்பட்ட பிரிவை தவிர மற்றவர்கள் அனைவரும் 2021 மாதம் 31ம் தேதிக்குள்ள ஆதாரம் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
அவ்வாறு இணைக்காதவர்களின் பான் கார்டு 2023 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயலிழந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு ஒருமுறை செயலிழந்து விட்டால் அந்த தனிநபர் வருமானவரிச் சட்டத்தின் அனைத்து விளைவுகளையும் பொறுப்பேற்க வேண்டும், பல்வேறு தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும். பான் கார்டு செயலிழந்துவிட்டால் அந்த நபர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியாது. இருப்பில் இருக்கும் ரிட்டன்களும் பரிசளிக்கப்படாத ரீபண்ட் எதுவும் இருந்தால் அந்த பான் எண்ணுக்கு அனுப்பப்படாது.
பான் கார்டு செயல் இழந்தவுடன் வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள ஐ.டி ரிட்டன் நடைமுறைகளை முடிக்க முடியாது. அதிக விகிதத்தில் வரி கழிக்கப்படும் இது தவிர வருமான வரி செலுத்த பங்கில் புதிதாக கணக்கு தொடங்கவும் முடியாது மற்ற எந்த நிதி நிறுவனங்களில் உள்ள கணக்குகளையும் நீக்கவும் முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.