Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா! இந்தியாவின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா! இந்தியாவின் நிலை என்ன?

Saffron MomBy : Saffron Mom

  |  10 Jun 2021 2:03 AM GMT

அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களுடைய ராணுவத்தை அழைத்துக் கொள்வதை விரைவுபடுத்தியுள்ளது. US சென்ட்ரல் கமாண்ட் அதிகாரிகள் 4 - 6% செயல்முறை முடிந்துள்ளதாகவும், முழுமையாக செப்டம்பர் 11, 2021 ராணுவம் திரும்ப செல்லும் முறை முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறப் போகும் நேரத்தில், வருங்காலத்தில் அமெரிக்கா எம்மாதிரியான ராணுவ தளங்களை அங்கே நிர்வகிக்க விரும்பும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்கு வெளியே அமெரிக்க தளங்கள் அமையவுள்ள இடத்தைக் குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.

கிட்டத்தட்ட அனைத்து தலிபான் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் புகலிடமாக விளங்குகிறது. அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையிலான தங்களுடைய உறவை தற்பொழுது பேலன்ஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருக்கிறது.

தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் ஒரு முக்கியமான பங்காளராக இருந்தாலும், அமெரிக்கா வெளியேறிய பிறகு பாகிஸ்தான் எதிர்கொள்ளும் சவால் எளிமையாக இருக்காது.

சமீபத்திய ஒரு நேர்காணலில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, பாகிஸ்தானில் அமெரிக்க தளங்களை அமைப்பதற்கு, அமெரிக்காவிடம் இருந்து பெரிய பொருளாதார திட்டங்களையும் முதலீடுகளையும் பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை நிலவழியில் அணுகுவதற்கு அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவால்கள் இருப்பதால், பாகிஸ்தான் தங்களுடைய இருப்பிடத்தை (ஆப்கானிஸ்தான் அருகில்) அனுகூலமாக பயன்படுத்தி அமெரிக்காவிடம் மேலும் உதவி கோர நினைக்கிறது.

ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான அழுத்தத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும், ஈரானிடமிருந்து அழுத்தத்தில் மத்திய கிழக்கு நாடுகளும் இருப்பதால் இத்தகைய நாடுகளில் அமெரிக்கா, தங்களுடைய ராணுவ தளத்தை நிறுவ முடியாது. பாகிஸ்தான் தான் அமெரிக்காவிற்குள்ள ஒரே வாய்ப்பாக இருக்கும்.

ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க இருப்பிற்கு எதிராக பிராந்தியத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் ஒரு நிலையில் இருப்பர் என நாம் எதிர்பார்க்கலாம். ஆன்லைனில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தலிபான்கள், இத்தகைய ராணுவ தளங்களை அனுமதிக்கும் நாடுகளுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

ஆனால் தலிபான்களால் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியுமா? என்ற கேள்விகளும் எழுகிறது ஏனெனில் பொதுவாக ஆப்கானிஸ்தான் எல்லைக்கு வெளியே நடக்கும் விவகாரங்களை பற்றி தலிபான்கள் பெரும் அக்கறை காட்டுவது இல்லை. அல்கொய்தாவுடனான தங்களுடைய உறவை கொண்டு இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

சுவாரசியமாக, அமெரிக்க ராணுவத்திற்கு தங்களுடைய தளங்களை கொடுக்க பாகிஸ்தான் முடிவு செய்தால் இத்தகைய தாக்குதல்களுக்கு பாகிஸ்தானும் உள்ளாக நேரிடும் என்பதும் இந்த அச்சுறுத்தலில் அடக்கம். எனவே தலிபான்கள் பாகிஸ்தான் சார்பில்லாமல் கடந்த சில வருடங்களில் முன்னேறியிருப்பதை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவின் புதிய பைடேன் நிர்வாகம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அந்த அளவிற்கு நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. தலிபான்களின் அச்சுறுத்தல்களையும் மீறி, பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்திற்கு தளங்களை பாகிஸ்தான் கொடுத்தால் அது இந்தியாவில் சில கவலைகளை ஏற்படுத்தும்.

இச்செயல் பாகிஸ்தானுக்கு QUAD அமைப்பில் ஒரு இடத்தை கூட வழங்க வாய்ப்பளிக்கும். ஆனால் பாகிஸ்தான் தளங்களை அமெரிக்கா அணுக முடியவில்லை என்றால் இந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கு உதவ வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா உள்ளாகும். இது குறித்து அவ்வளவாக இந்தியா பெரும் முடிவுகளை இதுவரை எடுத்ததில்லை.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அமெரிக்காவையும் தாண்டி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது பல மூலோபாய மாற்றங்களையும், திட்டங்களையும் உருவாக்கும். வரும் மாதங்களில் இது குறித்து முடிவுகளை எடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விவாதங்கள் பல நடத்த வேண்டியிருக்கும்.

With Inputs from: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News