Kathir News
Begin typing your search above and press return to search.

'உங்களுக்கு கடன் தர நங்கள் இருக்கிறோம்' - வலை விரித்து ஏமாற்ற காத்திருக்கும் ஆன்லைன் கடன் செயலிகள் எனும் அரக்கன்

Online fraud apps

உங்களுக்கு கடன் தர நங்கள் இருக்கிறோம் - வலை விரித்து ஏமாற்ற காத்திருக்கும் ஆன்லைன் கடன் செயலிகள் எனும் அரக்கன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 April 2022 11:45 AM GMT

அவசரத்திற்காக விபரம் அறியாமல் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கும் நபர்கள் பின்னாளில் மர்மநபர்களின் இன்னல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்படும் நிகழ்வுகள் தற்பொழுது தமிழகத்தில் அதிகமாகி வருகின்றன.


ஆன்லைனில் கடன்கள் வழங்கும் செயலிகள் தற்பொழுது அதிகமாகியுள்ளன, ஒருமுறை உங்கள் மொபைல் நம்பர், ஆதார் மற்றும் இன்னபிற விவரங்களை அதில் பதிவு செய்துவிட்டு உங்கள் தேவைக்கு ஏற்ப தொகையை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்படி வாங்கும் தொகையை குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் கூறும் வட்டியுடன் சேர்த்து செலுத்தி விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனால் அவர்கள் அதிக வட்டி மற்றும் அறிவிக்கப்படாத கட்டணங்களை நிர்ணயித்து திரும்ப செலுத்த வேண்டிய தொகையை அதிகரித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்களும் நிறையவே நடந்து வருகின்றன.

குறிப்பாக ஒருவர் பத்தாயிரம் ரூபாய் ஆன்லைன் செயலியில் கடன் வாங்குகிறார் என்றால் அந்த 10,000 ரூபாய் பணத்தை அவருக்கு ஏழு நாளில் திருப்பி கட்ட அவகாசம் தருகிறது என வைத்துக்கொள்வோம், அந்த ஏழு நாட்களில் அவர் பத்தாயிரம் ரூபாயுடன் சேர்த்து பதிவு கட்டணம், நடைமுறை கட்டணம், வட்டி என குறைந்தபட்சம் 8,000 வரை சேர்த்து மொத்தம் 18,000 கட்ட வேண்டிய சூழல் உருவாகிறது. இப்படி அதிக தொகையுடன் சேர்த்து வசூலிக்க படுவதால் அவசரத்திற்கு விபரம் அறியாமல் கடன் வாங்கும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர், அப்படி அப்படி அவர்கள் கூறும் தொகையை குறிப்பிட்ட கால அளவில் கட்ட முடியவில்லை என்றால் அவர்களுக்கு தொலைபேசியில் மர்மநபர்களால் மிரட்டல்கள், அவர்கள் மொபைலில் வைத்திருக்கும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் தொலைபேசி எண்களுக்கு இவர்களைப் பற்றிய தகவல்களை அனுப்புதல் போன்ற அத்துமீறல்களும் நடைபெற்று வருவதால் பலர் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருவாரூரை சேர்ந்த நபரொருவர் அவசரத்திற்கு விவரம் அறியாமல் ஆன்லைனில் பணம் வாங்கி திரும்ப குறிப்பிட்ட கால அவகாசத்தில் கட்ட முடியாத காரணத்தினால் அவருக்கு தொடர்ச்சியாக வரும் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன, அந்த தொலைபேசி அழைப்பில் மிரட்டல்களும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவர் தொலைபேசி அடுப்பு அழைப்புகளை எடுக்காத நிலையில் அவர் மொபைல் போனில் பதிந்து வைத்திருக்கும் தொலைபேசி எண்களுக்கு அவர்கள் இவரின் புகைப்படம் பெயர் மற்றும் வாங்கிய தொகை இவற்றை பதிவிட்டு இதை இந்த படத்தில் உள்ள நபர் இவ்வளவு கடன் வாங்கி ஏமாற்றிவிட்டார் அப்படி என குறுஞ்செய்தி அனுப்பியது பரபரப்பாக்கியது, இதனால் கடன் வாங்கிய நபர் மனமுடைந்து மிகவும் நொந்து போயுள்ளார்.

மற்றுமொரு சம்பவத்தில் விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவசரத்திற்காக ஆன்லைன் செயலில் விவரம் அறியாமல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தி விட்ட நிலையிலும் அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அவரது மொபைலில் இருந்து புகைப்படங்களை மர்ம கும்பல் சேகரித்து உள்ளது மேலும் அந்த புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்து அதே பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளது, அதிர்ந்த பெண் அந்த வாட்ஸ்அப் என்னை தொடர்புகொண்டு விபரம் கேட்கையில் அவர்கள் அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு என்னிடம் நாங்கள் கூறும் தொகையை செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்த வில்லை என்றால் இந்த புகைப்படங்களை அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என கூறியது அந்த பெண்ணை அதிர்ச்சி அடைய வைத்தது இதனால் அந்த பெண் சைபர் பிரிவு போலீசாரை அணுகியுள்ளார்.

இப்படி ஆன்லைன் செயலி அரக்கனிடம் கடன் வாங்கிக்கொண்டு சிக்கி தவித்து வரும் பலர் வெளியில் கூற முடியாமல் மனமுடைந்து இருக்கின்றனர், வெளியில் இது போன்ற ஒரு சில சம்பவங்கள் மட்டுமே தெரியவருகின்றன இன்னும் தமிழகத்தில் இதுபோன்ற பல செயல்கள் தினமும் நடந்த வகையில் உள்ளன. அரசாங்கம் தலையிட்டு இதுபோன்ற விஷயங்கள் மேலும் நடைபெறாமல் தடுத்தால் மட்டுமே இது போன்ற அப்பாவிகள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News