Kathir News
Begin typing your search above and press return to search.

'தமிழ்நாடு' வேணும் - பிரிவினை கோஷத்தை முன்னெடுத்த வெற்றிமாறன்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சாதி சான்றிதழ்கள் குறித்தும் அவை பள்ளிகளில் கேட்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்

தமிழ்நாடு வேணும் - பிரிவினை கோஷத்தை முன்னெடுத்த வெற்றிமாறன்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Feb 2023 1:11 AM GMT

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சாதி சான்றிதழ்கள் குறித்தும் அவை பள்ளிகளில் கேட்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் மேலும் தமிழ்நாடு குறித்து அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது போராளிகள் கிளம்புவது வழக்கம், திடீரென அவர்கள் கருத்து சொல்வதும், அந்த கருத்தை மக்கள் கருத்தாக மீடியா மக்கள் மத்தியில் எடுத்து செல்வதும் வழக்கமான ஒன்றுதான், சில நாட்கள் கழித்து பார்த்தால் அந்த குறுகியகால போராளி ஏதாவது கட்சிக்கு ஆதரவாக பேசியது புரியவரும்! இதுதான் இன்றை வரை தமிழக போராளிகளின் வரலாறு!

தலைநகர் சென்னையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், பல கருத்துகளை பேசுகிறேன் என்ற பெயரில் போராளியாக மாறினார்! குறிப்பாகக் கூட்டத்தில் இருந்தவர்கள் கேட்ட கேள்விக்குத் தனது தனது போராளித்தனமான பதில்களை அள்ளி வீசினார்.

மாணவி ஒருவர், 'அனைத்து சாதிகளும் சமம் என்று அரசே சொல்கிறது. இருந்த போதிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிவங்களில் சாதியைக் கண்டிப்பாக நிரப்ப வேண்டும் என்கிறார்களே' என்று கேட்டதற்கு பதிலளித்த வெற்றிமாறன், 'இது எனக்கே கொடுமையான விஷயம் தான். நான் எனது பிள்ளைகளுக்கு எந்த சாதியும் அற்றவர் என்ற சான்றிதழைப் பெற முயன்றேன். இருப்பினும், அப்படித் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இது குறித்து நீதிமன்றத்திற்கும் போய் பார்த்தேன். அங்கும் நிச்சயம் எதாவது சாதியைக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

எதுவும் வேண்டாம் என்று சொன்ன போதும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வேறு சில சம்பவங்களையும் குறிப்பிட்டோம். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.. எந்தவொரு இடத்திலும் சாதி சான்றிதழ் தராமல் இருக்கவே தேவையான வேலைகளைச் செய்து வருகிறேன். பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்.. யாருக்குத் தேவையில்லையோ அவர்களுக்கு அப்படியொரு ஆப்ஷன் இருக்க வேண்டும்' என்றார். சாதி கொடுமைகள் நிகழ்கிறது என அசுரன் படம் எடுத்து தேசிய விருது வாங்கிவிட்டு இப்பொழுது சாதி பத்தி திடீர் போராளியாக பேசியுள்ளார் வெற்றிமாறன்!

சினிமா பத்தி அவர் கூறியதாவது, 'சினிமா என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. சினிமா மூலம் தகவல்களைக் கொண்டு சேர்க்க முடியாது.. ஆனால், அந்த ஒரு விஷயத்தால் ஏற்படும் எமோஷனை கொண்டு சேர்க்க முடியும். ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாகப் படங்களை எடுக்கும்போது அது இயக்கமாக மாறுகிறது. அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தனிநபராக எதுவும் செய்ய முடியாது' அப்டின்னும் சொன்னார்.

அப்போது அங்கிருந்த ஒருவர் உங்களின் மாபெரும் தமிழ் கனவு என்ன என்று ஒருவர் கேட்ட கேள்விக்குச் சற்று யோசித்த இயக்குநர் வெற்றிமாறன், 'தமிழ்நாடு' என்று ஒற்றை வரியில் பதில் சொல்லியதுதான் சர்சைக்குரியது. தமிழ்நாடு என்ற கோரிக்கையை எழுப்பிய கட்சியே தற்பொழுது கம்'ன்னு இருக்குறப்ப தேசிய விருது வாங்கியாச்சு அப்படின்ற மிதப்புல இப்படி 'தமிழ்நாடு' பேச்ச எடுக்குறாரு அப்டின்னு சர்ச்சை கிளம்பியிருக்கு.

ஏற்கனவே இவரு ராஜராஜ சோழனை இந்து மன்னன் இல்லை அப்டின்னு சொன்னது சர்ச்சையானது, சிவாலயம் கட்டி, சிவ பக்தனாக விளங்கிய மன்னனை இந்து மன்னன் இல்லை அப்டின்னு சொல்லி புரட்சி பண்ண வெற்றிமாறன் இப்போ தமிழ்நாடு பத்தி பேச்சு எடுத்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை பல இடதுசாரிகள் கொண்டாடுறாங்க!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News