ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் என்ன? - ஒரு பார்வை
நாட்டின் 15 -வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றிருக்கும் நிலையில் ,இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்த பார்வை.
By : Mohan Raj
நாட்டின் 15 -வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றிருக்கும் நிலையில் ,இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்த பார்வை.
அரசின் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதி யிடம் உள்ளளது.நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் தலைவர் என்ற முறையில் அவரே அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக உள்ளார்.முப்படைகளின் தலைமை தளபதியும் அவரே.
மந்திரி சபையின் பரிந்துரையின் பேரில் நாடாளமன்றத்தை கூட்டுவதற்கும், நாடாளமன்றத்தை கலைக்கவும் அதிகாரம் பெற்றிருக்கிறார். நாடாளமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தைத் தவிர மற்ற எந்த நேரத்திலும் அவசர சட்டம் பிறப்பிக்கவும் அதிகாரம் கொண்டிருக்கிறார்.
நிதி மசோதாக்களை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் அதிகாரம் பெற்றவர் ஆகிறார்.
மன்னிப்பு,அவகாசம் அல்லது தண்டனையில் இருந்து விடுவித்தல் அல்லது இடைநீக்கம் செய்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தண்டனைகளை ரத்து செய்தல் அல்லது மாற்றுதல் எனப் பல்வேறு அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதி.
போர்,வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் நாட்டிற்கு அச்சுறுத்தல், ஏற்பட்டால் பிரதமர் தலைமையில் ஆன மந்திரிசபையின் பரிந்துரையின்பேரில் அவசரநிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம்
மேற்கண்ட அதிகாரங்கள் உள்பட மேலும் பல்வேறு அதிகாரங்களை ஜனாதிபதி தன் வசம் வைத்திருக்கிறார்.