Kathir News
Begin typing your search above and press return to search.

பின்லேடன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்: என்ன ஆனது அல் கொய்தா?

பின்லேடன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்: என்ன ஆனது அல் கொய்தா?

Saffron MomBy : Saffron Mom

  |  8 May 2021 7:46 AM GMT

மே 2, 2011 அன்று பாகிஸ்தானை சேர்ந்த ஒரு IT பணியாளர் சோயப் அக்தர், இரவு 1:30 க்கு, ஹெலிகாப்டர் ஒன்று நள்ளிரவு ஒரு மணிக்கு அபோட்டாபாத்தில் வட்டமிடுகிறது. இது ஒரு அரிய நிகழ்வு என்று ஒரு ட்வீட் செய்தார்.

என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அவர் கவனித்த அந்நிகழ்வு அமெரிக்க சீல் (SEAL) குழு 6, அபோத்தாபாத்தில் உள்ள ஒரு காம்பவுண்டில், உலகத்தில் அதிகம் தேடப்படும் குற்றவாளியான அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்படும் நிகழ்வாகும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பின்லேடன் கொல்லப்பட்ட செய்தியை அன்று அதிகாரப்பூர்வமாக உலகத்திற்கு அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது நடந்த செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் அமெரிக்காவின் 10 வருட தேடல்களுக்கு பின்லேடனின் மரணம் முடிவு கட்டியது. பின்லேடனின் மரணம் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கியமான மைல்கல் என்று விவாதிக்கப்பட்டாலும், அல்கொய்தா இன்னும் முழுதாக அழிக்கப்படவில்லை.

பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தாவின் தலைமையை அய்மான் அல் ஜெவாகிரி ஏற்றுக்கொண்டு சில காலத்திற்கு முன்பு இறந்து விட்டார் என பல வதந்திகள் பரவினாலும் அவர் அல்கொய்தாவை இன்னும் வழிநடத்தி வருகிறார் என்று அறியப்படுகிறார். கடந்த பத்து வருடங்களில் அல்குவைதா பெருமளவு தன் வலிமையை இழந்திருந்தாலும் அது இன்னும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படவில்லை.

தன்னுடைய வளர்ச்சிக்காக உலகத்தில் இடம் தேடி, தன்னுடைய பாரம்பரிய (அமெரிக்காவை இஸ்லாமிய உலகத்திற்கு வெளியே தள்ளுவது) போன்ற நோக்கங்களை நிறைவேற்ற அரசியல் பிளவுகளை தேடிக்கொண்டிருக்கிறது. அல்கொய்தாவின் திறன்கள் குறைந்து இருக்கலாம் ஆனால் அதன் நோக்கம் அப்படியே உள்ளது. மேலைநாடுகளில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தும் அளவிற்கு வலிமை இல்லை என்றாலும் சிறிய அளவில் தாக்குதல் நடத்தலாம்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் போன்றவைகளுடன் நிறைய செல்வாக்கை அல்கொய்தா இழந்திருந்தாலும், அது இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளது. தொடர்ந்து வேரூன்றிய மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக இருந்து நீண்ட காலம் நிலைத்திருக்கும் வாய்ப்புகளை பெறுகிறது.

2019ல் ஒரு சவுதி விமானப்படை அதிகாரி, ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் மூன்று அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அல் கொய்தா ஒரு ஆடியோ செய்தியின் வாயிலாக பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த ஃப்ளோரிடா தாக்குதல் வாயிலாக அவர்களால் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்த முடியும் என்று யூகிக்க முடிகிறது.

செப்டம்பர் 2001 தாக்குதல் நடந்து 20 வருடங்களுக்குப் பிறகும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடிகிறது. 1990கள் முதல் ஆப்கானிஸ்தான் அல்கொய்தாவின் பாதுகாப்பு புகலிடமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் தலிபான்களின் ஆதரவும் அனுசரணையும். அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும், பிப்ரவரி 2020 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினால் தலிபான்கள் அல்கொய்தா அல்லது மற்ற குழுக்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் தலிபான்கள் தங்கள் வார்த்தையை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேறுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடேன் உறுதிப்படுத்தியிருக்கிறார். CNN தொலைக்காட்சிக்கு அளித்த அரிதான நேர்காணலில் அல்கொய்தா கூறுகையில், இஸ்லாமிய உலகம் முழுவதிலிருந்தும் அமெரிக்கா வெளியேறாவிட்டால் அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து முனைகளிலும் போர் செய்வோம் என உறுதி அளித்திருந்தது.

அல்-கொய்தாவிற்கு எதிரான அமெரிக்கா போரின் நோக்கம் அமெரிக்க நலன்களை பாதுகாப்பதாகும். அமெரிக்க மண்ணில் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த முடியாது என்றாலும் அல்-குவைதா மற்ற பல இயக்கங்களுடன் இணைந்து பல்வேறு ஜிகாதி குழுக்களை உருவாக்கலாம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிறருக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நடத்த விரும்பிய அல்கொய்தா செயற்பாட்டாளர்களுக்கு பின்லேடன் குறிப்பிடத்தகுந்த ஜனநாயகத்தை வழங்கியதாக வரலாறு காட்டுகிறது. அமெரிக்கா 20 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் மேல் தொடுத்த 'போரையும்' மீறி அல்கொய்தா போன்ற பயங்கரவாத குழுக்கள் தப்பிப் பிழைத்துள்ளன.

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கையில் ஈரானை தளமாக கொண்ட சில அல்கொய்தா தலைவர்கள் அல்கொய்தாவின் நெட்வொர்க்குகளை மேற்பார்வையிடுறார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஈரானில் அதிகாரத்தில் இருப்பது சன்னி அதிகார பிரிவினர். ஆனால் அல்கொய்தா ஒரு ஷியா அதிகார மையம்.

கருத்தியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் இருவரும் வெவ்வேறு துருவங்கள். அமெரிக்கா என்ற ஒரு பொதுவான எதிரியை அழிப்பதற்காக இணைந்து செயல்படுகிறார்கள். அமெரிக்கர்கள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானில் மற்றொரு உள்நாட்டுப்போர் வரும் பட்சத்தில் அல்கொய்தா மறுபடியும் தங்களை வளர்த்துக்கொள்ள ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.

1990களின் மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட அதே ஆப்கானிஸ்தானை பின்லேடன் பயன்படுத்திக்கொண்டது வரலாறு. பத்து வருடங்களுக்கு முன்பு பின்லேடனை கொன்றது ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் அதனால் ஏற்படும் தாக்கத்தை விட இது ஒரு குறியீடாகும்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறலாம். ஆனால் அல் கொய்தா பின்லேடன் இல்லாமலேயே நீண்டகாலமாக உள்ளது.

With Inputs from: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News