Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன ஆனது  ஜாக் மா விற்கு? சீன அரசு எந்த அளவிற்கு செல்லும்? முழுப் பின்னணி.!

என்ன ஆனது  ஜாக் மா விற்கு? சீன அரசு எந்த அளவிற்கு செல்லும்? முழுப் பின்னணி.!

என்ன ஆனது  ஜாக் மா விற்கு? சீன அரசு எந்த அளவிற்கு செல்லும்? முழுப் பின்னணி.!

Saffron MomBy : Saffron Mom

  |  7 Jan 2021 6:45 AM GMT

சீனாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கோடீஸ்வரருமான ஜாக் மா காணாமல் போய்விட்டதாக சில நாட்களாக தலைப்புச் செய்திகள் அடிபட்டு வந்தது. அவருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாகவும், தாங்கள் என்ன செய்ய முடியும் என்று காட்டி, ஜாக் மாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கும் வகையிலும் எதுவும் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா என்பது குறித்தும் பல கேள்விகள் உலா வந்தன.

இக்கட்டுரையில் இந்நிகழ்வின் பின்னணி, ஏன் இவ்வாறு நடந்தது? ஜாக்மா எப்படி இருக்கிறார்? சீனாவின் இந்த நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து காணலாம்.

கோடீஸ்வரரான ஜாக் மா சீனாவில் ஒரு அரிதான பிரபலம். தன்னுடைய மனதில் பட்டதை பேசி எல்லைகளை விரிவாக்கம் செய்ய முயலும் ஒரு தொழில்முனைவர். இதன் காரணமாக சீனாவிலும் சரி வெளிநாட்டிலும் சரி அவருடைய அலிபாபா நிறுவனத்திற்கு ஆதரவும் பணபலமும் பெருகி வந்தது.

ஆனால் தற்போது இதே காரணங்களினால் தான் தன்னுடைய தொழிலுக்கும் தன் உயிருக்கும் கூட ஜாக்மா ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். உண்மையான பிரச்சனை கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஆரம்பித்தது.

ஷாங்காயில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய ஜாக் மா சீனாவின் கட்டுப்பாட்டாளர்களை (regulators) விமர்சித்தார். மாவின் நிதி தொழில்நுட்ப நிறுவனமான ANT உலகின் மிகப் பெரிய ஆரம்ப பொது வழங்கலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இந்நிலையில், சீன அதிகாரிகள் புதிய கண்டுபிடிப்புகளை தடுப்பதாக மா குற்றம் சாட்டினார். அந்நாட்டு வங்கிகள் அடகு கடை போன்ற மன நிலையில் நடந்து கொள்வதாகவும் விமர்சித்தார். அவர் குற்றம்சாட்டிய சில தினங்களிலேயே சீன அரசின் பதிலடி ஆரம்பித்தது.

சில நாட்களில் கட்டுப்பாட்டாளர்கள் IPO வை நிறுத்தினர். அதற்கு முன்பாக ஜாக் மா மற்றும் ANT நிர்வாகிகளை ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். அதன் பின்னர் வந்த வாரங்களில் நிறுவனத்தை மறுசீரமைக்கும் படி கட்டுப்பாட்டாளர்கள் உத்தரவிட்டனர்.

தங்களுடைய ஆய்வை அலிபாபாவுக்கும் விரிவுபடுத்தினர். தற்போது சீனாவின் ஆண்டி டிரஸ்ட் இன்வெஸ்டிகேஷன் (நம்பிக்கையின்மை விசாரணை) அலிபாபாவின் மீதும் நடந்து வருகிறது.

ஜாக் மா ஷாங்காயில் நிகழ்த்திய உரைக்கு பிறகு பொது இடங்களில் காணப்படவில்லை. எப்பொழுதும் கேமராக்களின் முன்னால் சகஜமாக இருக்க தயங்காத ஜாக்மா இவ்வாறு இருப்பது மிகுந்த பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின. தற்போது அவருடைய உயிர் மற்றும் வணிகம் பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி இதன் மூலம் ஒரு செய்தி அனுப்ப விரும்புகிறது. சீனா, உலகிற்கு தங்கள் நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக காட்டுகிறது. சீனாவின் பிரபலமான முகங்களாக அவர்கள் அறியப்படலாம். ஆனால் எந்த ஒரு தனிநபரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை விட பெரிய ஆள் இல்லை.

தன் மீது பலவித விசாரணைகள் நடத்தப்படுவதால் சுய விருப்பத்துடன் பொதுவெளியில் இருந்து மா விலகி இருக்கலாம் என்று பலரும் கருதினாலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி, அவர்களுடன் மோதுகின்ற பிரபலமான சீன முகங்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவது இது முதல்முறை அல்ல. உதாரணமாக சீனாவை சேர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகை 2018 இல் திடீரென்று இதேபோல் மாயமானார். பிறகு ஒரு வருடம் கழித்து வந்து ஈடுபட்ட ஒரு வரி ஏய்ப்பு ஊழலுக்கு மன்னிப்பு கேட்டார். ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் கடந்த ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் கொரானா வைரஸ் தொற்று நோயை கையாண்ட விதத்தை குறித்து கடுமையாக விமர்சித்த பிறகு பல மாதங்கள் காணாமல் போனார். பிறகு ஒரு ஊழல் குற்றச்சாட்டில் அவர் 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அலிபாபாவின் ஜாக் மா 500 பில்லியன் டாலர் தொழில்நுட்ப சாம்ராஜ்யமாக உருவாக்கி, தனிப்பட்ட முறையில் 50 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்தார். அவரது நிறுவனங்கள் வளர ஆரம்பித்தவுடன் சீனாவின் பொருளாதார உயர்வின் ஒரு பிரதிநிதியாக அறியப்பட்டார். அடிக்கடி அரசு தலைவர்களை சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் மதிய உணவு அருந்தினார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். கடந்த ஆண்டு கொரானா வைரஸ் தொற்று பரவலுக்காக பல நாடுகளுக்கு நன்கொடைகள் வழங்கினார். பிரபலமான விளையாட்டு வீரர்களுடன் தொடர்ந்து மேடைகளில் தோன்றி வந்தார்.

சீனா தனது நாட்டிலும், அயல்நாடுகளிலும் ஒரு மென்மையான சக்தியை உருவாக்க, ஒரு கவர்ச்சிகரமான முகத்தை காட்ட ஜாக் மாவை பயன்படுத்திக்கொண்டனர். எனவே சீன அரசாங்கம் அலிபாபா நிறுவனம் சீனாவில் வளர பெறும் ஊக்கம் கொடுத்தது.அவருடைய அமெரிக்க போட்டியாளர்களை வெளியே தடுத்து நிறுத்தியது.

With Inputs From: CNN and TimesNow

Next Story
கதிர் தொகுப்பு
Trending News