Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி விவசாயப் போராட்டத்தை ஜஸ்டின் ட்ருடோ ஆதரிக்கும் பின்னணி - காலிஸ்தானி அரசியல்?

டெல்லி விவசாயப் போராட்டத்தை ஜஸ்டின் ட்ருடோ ஆதரிக்கும் பின்னணி - காலிஸ்தானி அரசியல்?

டெல்லி விவசாயப் போராட்டத்தை ஜஸ்டின் ட்ருடோ ஆதரிக்கும் பின்னணி - காலிஸ்தானி அரசியல்?

Saffron MomBy : Saffron Mom

  |  4 Dec 2020 8:53 AM GMT

டெல்லியின் அருகே நடந்து வரும் விவசாயப் போராட்டங்கள் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில கவலைகளை சமீபத்தில் வெளிப்படுத்தினார். குருநானக் ஜெயந்தியின் பொழுது சீக்கிய சமூகத்துடனான ஒரு ஆன்லைன் உரையாடலின் பொழுது இது தொடர்பான கருத்துகளை அவர் கூறினார்.

அவர் கூறுகையில், இந்தியாவில் விவசாயிகளிடமிருந்து வரும் செய்திகளை நான் அறிகிறேன். இச்சூழ்நிலை கவலை அளிக்கிறது. குடும்பம் மற்றும் நண்பர்களை குறித்து கவலை அடைகிறோம். விவசாயிகள் அமைதியாக போராடும் உரிமையைக் காப்பாற்ற கனடா எப்போதும் துணை இருக்கும் என்று நான் நினைவுபடுத்துகிறேன்.

பேச்சுவார்த்தையில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்திய அதிகாரிகளிடம் பல வழிகளில் உங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்து ஒன்றாக செயல்பட வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

அவருக்கு முன்னால் அவருடைய அமைச்சரவை சகா ஹர்ஜீட் மற்றும் சில கனடிய சீக்கிய அரசியல்வாதிகளும் இப்போராட்டங்களை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து வரும் பொழுது இத்தகைய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஹர்ஜீட் சஜ்ஜன்

உண்மையில் இது ஒரு அரசியல் பேச்சு தான். எல்லோருக்கும் எல்லா இடத்திலும் இருக்கும் அளவிற்கு கனடாவிற்கு ஆற்றலோ நோக்கமோ இல்லை. 1970களில் இருந்து கனடா, காலிஸ்தானியர்களுக்கு ஒரு பாதுகாப்பு சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் ஒரு ட்விட்டர் பயனாளி 329 பேரின் இறப்புக்கு காரணமான கனிஷ்க் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்த அளவிற்கு கனடா அரசும் பொறுப்பு என்பதை குறித்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

எதற்காக ட்ருடோ இதை செய்கிறார்?

அப்போதும் சரி, இப்போதும் சரி கனடா அரசியல்வாதிகளின் பேச்சுகள் தேர்தல் களத்தினைப் பொறுத்தே அமைகிறது. 2015ஆம் ஆண்டில் 'தாராளவாதிகளுக்கு' பெரும் ஆதரவளிக்கும் நோக்கில் ட்ருடோ பதவிக்கு வந்தார். ஆனால் அவருடைய அரசாங்கம் பல விஷயங்களை மோசமாக கையாண்டதால், கனடிய மக்களின் நம்பிக்கையை இழந்தனர்.

2019 ஆம் ஆண்டில் ட்ருடோவின் லிபரல் கட்சி கனடிய அரசவையில் மெஜாரிட்டியை இழந்து, ஆட்சியை தக்க வைக்க எதிர்க்கட்சிகளை சார்ந்திருக்கிறது.

ஏற்கனவே தடுப்பூசி மற்றும் பொருளாதார தொகுப்புகளுக்கு பிறகு மக்கள் சற்று நல்ல மனநிலையில் இருக்கும் வேளையில் 2021ன்றிலேயே விரைவான தேர்தலை ட்ருடோ நடத்த விரும்புகிறார் என்று வதந்தி பரவி வருகிறது. எனவே கனடிய பிரதமரின் தற்போதைய அறிக்கை அதன் அடிப்படையில் தான் பார்க்கப்படவேண்டும்.

கனடாவில் சீக்கியர்களிடம் இருந்து கூடுதல் ஆதரவு திரட்டுவதற்காக இந்த மாதிரியான கருத்துக்களை நாம் அடிக்கடி எதிர்பார்க்கலாம். இதேபோன்ற காரணத்தினால் தான் கனடாவின் முக்கிய எதிர்க் கட்சிகளும் இந்த விஷயத்தில் அறிக்கைகளை வெளியிடுவது முக்கியம் என்று கருதின.

கடந்த வாரம் பாகிஸ்தான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அங்கு ஆரப்பாட்டக்காரர்கள் போலீஸ் நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இருப்பினும் ரூடா அல்லது பிற கனடிய அரசியல்வாதிகள் இவற்றை பற்றியெல்லாம் கருத்து கூறவில்லை.

இந்தியாவின் பதில்

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸாவா கூறுகையில், "இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடாவில் சில தலைவர்கள் தவறான தகவல்களை பரப்பியதைக் கண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து இத்தகைய கருத்துக்கள் தேவையற்றவை. அரசியல் காரணங்களுக்காக ராஜாங்க ரீதியான உரையாடல்கள் தவறாக காட்டப்படக் கூடாது" என்று கூறினார்.

அரசாங்கத்தை தவிர பல அரசியல் கட்சிகளும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகளைப் பற்றி ட்ருடோ கருத்துக் கூற வேண்டிய அவசியத்தை குறித்து கேள்வி எழுப்பினர். காங்கிரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரும், இந்தியா தொடர்பாக கருத்து சொல்ல வேண்டிய அவசியத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

ஆம் ஆத்மி கட்சியும் இதை எதிர்த்தது என்றாலும் அதன் ஆதரவாளர்களான துருவ் ரதீ மற்றும் காங்கிரஸ் தலைவர்களான ஸ்ரீவத்சவா ஆகியோர் இந்திய விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டை வரவேற்றனர்.

இதில் குறிப்பான விஷயம் இந்திய விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கனடா எப்பொழுதும் எடுத்து வந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பில், இந்தியா நம் விவசாயிகளுக்கு அளித்து வந்த விவசாய மானியத்தை கனடா எப்பொழுதுமே எதிர்த்துள்ளது. கனடா மற்றும் மற்ற மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) ஒழிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். மேலும் உரங்களுக்கு மானியம், பெரிய அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசாங்கமே கொள்முதல் செய்வது ஆகியவற்றை எதிர்க்கின்றார்கள்.

மேலும் இந்தியா வெளிநாட்டு விவசாய பொருட்களுக்கு தனது சந்தையை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இந்தியாவின் மானிங்கள், வெளிநாட்டு விவசாய சந்தையை பாதிப்பதாக தொடர்ந்து குறைகூறி வருகிறார்கள். 2015 முதல் கனடா இத்தகைய நிலைப்பாடுகளை எடுத்து வந்திருக்கிறது. தன்னுடைய விவசாயிகளுக்கு வருடம் பில்லியன் கணக்கான டாலர்களை கனடா மானியம் அளிப்பது வேறு விஷயம்.

கனடா பிரதமர் மற்றும் மற்ற தலைவர்கள் தங்களுடைய உள்நாட்டு பிரச்சினையே முதலில் சமாளிக்க வேண்டும். காலிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி கனடாவிற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதை புரிந்து கொண்டு அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கே தங்களுக்கு பிரச்சினை என்றால் விவசாயிகளால் அரசாங்கத்திடம் நேரடியாக பேச முடியும். இந்தியா தன்னுடைய விவசாயிகளை சரியாக நடத்துவதில்லை என்று ட்ரூடோ போன்றவர்கள் கருதினால், வர்த்தக ரீதியாக இந்திய விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளை சர்வதேச வர்த்தகத்தில் கனடா கைவிடவேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News