யாருக்கெல்லாம் 5 ஜி சேவை கிடைக்கும், எல்லாரும் சிம் மற்ற வேண்டுமா? - 5 ஜி பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்
அறிமுக சலுகை உடன் ஜியோ 5ஜி டெஸ்டிங் துவங்கப்பட்டுள்ளது இதனைப் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.
By : Mohan Raj
அறிமுக சலுகை உடன் ஜியோ 5ஜி டெஸ்டிங் துவங்கப்பட்டுள்ளது இதனைப் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.
டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி என இந்தியாவின் நான்கு நகரங்களில் 5 ஜி சேவைகளை ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்குவதாக அறிவித்திருக்கிறது. முதற்கட்டமாக 5ஜி சேவைகள் பீட்டா டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. தசரா பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5 நகரங்களில் 5ஜி சேவைக்கான வெளியீடு தயாராகி வருகிறது, மேலும் 5 ஜி பீட்டா டெஸ்டிகுடன் அறிமுக சலுகைகளையும் அறிவித்திருக்கிறது ஜியோ நிறுவனம். தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் மட்டுமே 5 ஜி சேவையை அனுபவிக்க முடியும். தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அளவில்லாத 5 ஜி டேட்டா அதிகபட்சம் 1gbps வேகத்தில் இணையதள வசதி வழங்கப்பட இருக்கிறது. மேலும் சிறந்த கவரேஜ் மற்றும் டேட்டா அனுபவம் இருக்கும் எனவும் ஜியோ நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
சிறப்பு அழைப்பு குறுஞ்செய்தி மூலம் விடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுக சேவை பயனாளர்கள் மட்டும் தானாக 5 ஜி சேவைக்கு அப்டேட் செய்யப்படுவார்கள். அவர்கள் தனித்தனியா 5ஜி சிம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஒவ்வொரு மொபைல் போனிலும் 5 ஜி சேவை வழங்க எதுவாக மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் ஜியோ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.