'ஏனுங் ஒரு வருஷம் ஆச்சு கொடுத்த வாக்குறுதி எல்லாம் எங்கேங்க?' - தி.மு.க'வினரை தேடும் கோவை மக்கள்
கோவையில் நிறைவேற்றவதற்காக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க'வினரால் தரப்பட்ட வாக்குறுதிகள் என்னவாகிற்று என கோவை மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
By : Mohan Raj
கோவையில் நிறைவேற்றவதற்காக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க'வினரால் தரப்பட்ட வாக்குறுதிகள் என்னவாகிற்று என கோவை மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
தி.மு.க கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் 505 வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து ஓட்டுகளை பெற்று ஆட்சியைப் பிடித்தது, குறிப்பாக அதில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவைக்கென பல வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஆனாலும் ஓராண்டு முடிந்த நிலையில் இவை அனைத்தும் செயல்படவில்லை என கோபம் கொண்டு மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பாக 445 வது வாக்குறுதியாக கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என இடம்பெற்றுள்ளது ஆனால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும் தமிழக அரசு கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இதுவரை எந்த நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை.
அதேபோல் 432 வது வாக்குறுதியாக கோவையில் போக்குவரத்தில் நெருக்கடியான பகுதிகளில் பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது நடந்து வரும் அவிநாசி ரோடு பறக்கும் பாலம் திட்டம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை நகரம் முழுவதுமே போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் நிலையில் எந்த பறக்கும் சாலை திட்டத்தையும் தி.மு.க அரசு துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவையில் புறநகரம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என 393 வது வாக்குறுதியாக தி.மு.க கொடுத்தது. அது பற்றி இப்பொழுது பேச்சே இல்லை, மேலும் 348 வது வாக்குறுதியாக மாநில அரசு நிதியில் புதிய உயர் சிறப்பு மருத்துவமனை 3 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது ஒன்றை ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் கோவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை மட்டும் வைத்துள்ளது.
மேலும் கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகள், விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச் சாலைக்கு நிலம் எடுப்பு போன்றவற்றை மட்டுமே தி.மு.க'வினர் சாதனையாக கூறி வருகின்றனர் புதிதாக எந்த திட்டங்களும் துவங்கவில்லை எனவும் பெரும்பாலான திட்டங்கள் முந்தைய அ.தி.மு.க அரசால் துவங்கப்பட்டது என்பது கோவை மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.