Kathir News
Begin typing your search above and press return to search.

நிலக்கரி உற்பத்தியில் சுயசார்புடன் திகழுமா இந்திய அரசு? - விரிவான பார்வை !

நிலக்கரி உற்பத்தியில் சுயசார்புடன் திகழுமா இந்திய அரசு? - விரிவான பார்வை !

G PradeepBy : G Pradeep

  |  2 March 2021 12:45 AM GMT

இந்தியாவில், நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது இந்திய அரசு. இந்த நோக்கம் ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கம் "ஆத்மநிர்பர் பாரத் 'திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னரே நிர்ணயக்கப்பட்டது.

நிலக்கரி உற்பத்தியை 2019-2020 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் டன்னாக (பி.டி) அதிகரிக்கும் இலக்கை 2014 ஆம் ஆண்டில் நிர்ணயித்தது இந்திய அரசு. அதில், இந்திய நிலக்கரி நிறுவனம் ( CIL) மற்றும் அதன் துணை நிறுவனங்களிலிருந்து 1 பில்லியன் டன் நிலக்கரி கிடைக்கபெறுகிறது. 2019 ஆம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தியை 1.5 பில்லியன் டன்னாக உயர்த்துவதற்கான இலக்கு 2023-24 வரை என மாற்றியமைக்கப்பட்டது.

2020 டிசம்பரில், நிலக்கரி அமைச்சகம் 2023-24 இல் இந்திய நிலக்கரி நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி கிடைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

நிலக்கரி அமைச்சகத்தின் அறிக்கையின் படி, நிலக்கரியின் தேவை கடந்த 2019 – 20 ஆம் ஆண்டில் 955.26 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரியின் தேவை 2023-24 இல் 1.27 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. மேலும் நம்முடைய உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் இந்தியா சுய சார்பு நாடாக திகழும்.

நிலக்கரி உற்பத்தியில் 1.5 பில்லியன் டன் இலக்கை நாம் அடைய வேண்டுமெனில், நிலக்கரியின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் சுமார் 7 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். இது சாத்தியமற்ற இலக்கல்ல. நிச்சயமாக சாத்தியம். 2008 ஆண்டு முதல் 2010 ஆண்டு வரையில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி சராசரி விகிதத்தில் சுமார் 7 சதவீதம் வரை வளர்ந்தது.

2001-02 முதல் 2009-10 வரையிலான கடந்த பத்தாண்டுகளில் நிலக்கரி உற்பத்தி சராசரியாக 5 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்தது. 2019-20 ஆம் ஆண்டில் நிலக்கரி விநியோகத்தில் முதலீடுகள் இரண்டு மடங்கு அதிகரித்த போதிலும், 2010-11 முதல் 2019-20 வரையிலான ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சியில் 3 சதவீத தோய்வு ஏற்பட்டது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையே இதற்கான முக்கிய காரணம். 2019-20 ஆம் ஆண்டில், இந்தியாவில் மூல நிலக்கரி உற்பத்தி 729.1 மெட்ரிக் டன் ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 0.05 சதவீதம் குறைவான வளர்ச்சி ஆகும்.

2020 ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில், நிலக்கரி உற்பத்தி ஆண்டுக்கு 3.3 சதவீதம் குறைந்து 337.52 மெட்ரிக் டன்னாக இருந்தது. இச்சமயத்தில் தான், நிலக்கரி இறக்குமதி மிக வேகமாக வளர்ந்தது. கடந்த 2018-19 ஆம் ஆண்டின் 183.510 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 2019-20 ஆம் ஆண்டில், நிலக்கரி இறக்குமதியின் மொத்த அளவு 5.6 சதவீதமாக உயர்ந்து 248.54 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. 2019-20 வரையில் செய்யப்பட்ட இறக்குமதிக்கான செலவு 1.5 பில்லியனுக்கும் அதிகமாகும். இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இந்திய அரசாங்கமும் இந்திய நிலக்கரி நிறுவனமும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றன.

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, நிலக்கரியை விநியோகிக்கும் போது அதில் தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக தலையீடுகளை இந்திய நிலக்கரி நிறுவனம் நாடுகிறது. இந்த அம்சம் "நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வரைபடம் " எனும் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் இலக்கை விரைந்து அடையவேண்டுமெனில், ரயில் பாதையில் முதலீடு செய்யப்பட வேண்டும், சுரங்கங்களை இயந்திரமையமாக்கல் ஒப்பந்த அடிப்படையில் பெரிய அளவிலான சுரங்க வேலைகள், அதனோடு விரைவாக நிலத்தை கையகப்படுத்தி, விரைவாக சுற்றுசூழல் அனுமதியை பெறுவது போன்றவை செய்யப்பட வேண்டும் என பட்டியலிடுகிறது அந்த அறிக்கை.

சர்வதேச எரிசக்தி அமைப்பின் (ஐ.இ.ஏ) கருத்துப்படி, 2014 ஆம் ஆண்டில் நிலக்கரிக்கான தேவை உலகளவில் உயர்ந்தது. மற்றும் 2030 ஆண்டிற்கு முன்னதாகவே மின் உற்பத்தியில் நிலக்கரியின் பயன்பாடு உச்சம் பெறும். சீன நாட்டில் நிலவும் நிலக்கரியின் பயன்பாடே, உலகளாவிய நிலக்கரி பயன்பாட்டில் 50 சதவிகித பங்கு வகிக்கிறது. எனவே அங்கு, நிலக்கரியின் தேவை 2025 ம் ஆண்டில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில், கொரோனா காலத்திற்கு முன்பாக இருந்த நிலக்கரிக்கான தேவை மீண்டும் அதன் பழைய நிலைக்கு திரும்பும் சாத்தியங்கள் இல்லை. மற்றும் சர்வதேச அளவில் நிகழும் எரிபொருள் கலவையில் நிலக்கரியின் பங்கு முதல் முறையாக 20 சதவீதம் வீழும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்புரட்சி நிகழ்ந்த தொட்டு இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் முறை. 2020 இல் சர்வதேச அளவில் நிலவிய நிலக்கரிக்கான தேவை 7 % வரை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிகழ்ந்த ஊரடங்கின் காரணமாக மின்சாரத்தின் தேவை குறைந்தது. இந்த சர்வதேச அளவிலான மின்சார பயன்பாட்டில் கிட்ட தட்ட 65% நிலக்கரி உற்பத்தி பங்கு வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கரியை நிராகரித்தல், இயற்கையாகவும் மலிவாகவும் கிடைக்கும் எரிவாயுக்களை அதிகரிக்கும் ஆதரவு கொள்கைகள் போன்றவைகளால் மேற்கத்திய பொருளாதாரத்தில் நிலக்கரி வீழ்ச்சி கண்டது.

தற்போதைய அரசிற்கு மிக விரிவான பார்வை உள்ளது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட , நிதி ஆயோக்கின் துணை தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் உயர் மட்ட குழுவின் ஆணையின் படி, நிலக்கரி துறை தாராளமயமாக்கப்பட வேண்டும். நிலக்கரியை வருவாய்க்கான அம்சமாக பார்க்காமல் நிலக்கரியை பயன்படுத்தும் துறைகளின் மூலம் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சியாக கருத வேண்டும். இந்த புதிய பார்வையின் மூலம், இன்று இருக்கும் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை உணர்ந்து நிலக்கரி உற்பத்தியில் மிக விரைவாகவும் அதிகபட்ச உற்பத்தியை தருமாறும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். என்ற பரிந்துரையை இந்த கமிட்டி அளித்துள்ளது.

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மிக விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்டு வர இயலும் என அரசு முழுமையாக நம்புகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை குறைப்பது மட்டுமல்லாமல், விலைமதிப்பற்ற அந்நிய செலவாணி காக்கலாம், மற்றும் நிலக்கரி வளம் நிறைந்த மாநிலங்களில் பொருளாதாரத்தை வளர்க்கும் பொருட்டு பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கலாம். இதன் மூலம் இந்திய பொருளாதார வளரும் என அரசு நம்புகிறது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி வளங்களை அரசாங்கம் திறந்துள்ளது, மேலும் எஃகு, அலுமினியம், உரங்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தி மற்றும் செயலாக்கத்தில் நிலக்கரியின் வணிக உற்பத்தி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது. ஏற்றுமதி மற்றும் நிலக்கரி சாராத துறைகளுக்கு பல்வகைப்படுத்துவதன் மூலமும் உள்நாட்டு நிலக்கரி உற்பதியினை விரிவுப்படுத்த முனைந்துள்ளது மத்திய அரசு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News