Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய-ரஷ்ய உறவு குறித்து அறியப்படாத தகவல்கள் - வலுவாகுமா இருதரப்பு உறவு !

இந்திய-ரஷ்ய உறவு குறித்து அறியப்படாத தகவல்கள் - வலுவாகுமா இருதரப்பு உறவு !

Saffron MomBy : Saffron Mom

  |  15 April 2021 2:53 AM GMT

இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க இந்தியா வந்திருந்தார். இதுகுறித்து அனைவரின் கவனமும் சென்றது. 2020இல் நடக்க இருந்த இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாடு கொரானா வைரஸால் ஒத்திவைக்க நேரிட்டது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே அதிகரித்த இருமுனைப் போட்டியின் மத்தியில், இந்தோ-பசுபிக் தொடர்பான வேறுபாடுகள் அதிகரித்தன.

இந்திய-ரஷ்ய உறவில் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பல விஷயங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒத்துழைக்கலாம். இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய அரங்கங்களில் இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். சீனாவின் எழுச்சியை கையாள்வதற்கு இந்தியா தன்னைப் போன்ற எண்ணம் கொண்ட நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்கிறது. இந்நிலையில் ரஷ்யாவுடனான பல்லாண்டு மூலோபாய முக்கியமான உறவை நாம் பலப்படுத்தவேண்டும்.

குறிப்பாக சீனாவுடனான சமீபத்திய இந்திய மோதலின் பொழுது இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதில் ரஷ்யாவின் பங்கு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மாஸ்கோவிற்கு இரண்டு முறை சென்றது ஆகியவை நல்ல முன்னேற்றங்களாக காணப்பட்டன. இந்த முன்னேற்றங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஜெய்சங்கர் ஆகியோர், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிக்க கூடுகிறார்கள்.

இந்த ஆண்டு இறுதியில் நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் இடையிலான உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியா ரஷ்யா உறவில் இப்படி உயர்மட்ட ஈடுபாடு முக்கியமானது. ஏனெனில் இந்த உறவு உயர்மட்ட தொடர்புகளால் இயக்கப்படுகிறது. மாறிவரும் இந்தியா- ரஷ்யா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் அவசியம் உள்ளது. இதில் முக்கியமான அம்சம், உலக விவகாரங்களில் ஒரு செல்வாக்குள்ள சக்தியாக ரஷ்யா திரும்பி வருவது, அது கிழக்குப் பக்கமுள்ள நாடுகளுக்கு திரும்புவது, சீனா அதன் முக்கியமான வெளிப்புற கூட்டாளியாக இருப்பது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 2021 இன் முதல் மூன்று மாதங்களில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். ஏப்ரல் மாத மத்தியில் ஈரானுக்கு செல்ல ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் அமைச்சர், ஆப்கானிஸ்தான் சிறப்புத் தூதுவர் ஜமீர் புலாவ் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ஒருவரையும் சேர்ந்து அழைத்து வந்திருந்தார்கள்.

இந்த சந்திப்பில் கவரப்பட்ட ஒவ்வொரு பகுதியும் இந்தியாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்யா தற்பொழுது அந்த அளவு சக்தி வாய்ந்த ஒரு நாடாக ஒரு கூட்டாளியாக இல்லாமல் இருந்தாலும், விஷயங்களைக் கெடுக்கவோ உருவாக்கவோ அதற்கு சக்தி இன்னும் உள்ளது. மேற்காசியாவில் வளர்ந்து வரும் ஒரு செல்வாக்கையும் கொண்டுள்ளது. இது இரண்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் உணர்ந்து கொண்டதாக நமக்கு தெரிகிறது.

உலக விவகாரங்களில் தங்களுக்கு நன்மை அளிக்கும் பாதையை இந்தியாவும் ரஷ்யாவும் தொடர்ந்தாலும், இருவரும் சேர்ந்து நன்மை அளிக்கும் விவகாரங்களிலும் ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இந்தோ-பசுபிக் விவகாரத்தில் தங்களுடைய பார்வையை முன் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யா கொஞ்சம் தயக்கம் காட்டுகிறது. இந்த விவகாரத்தில் வேறுபாடுகள் நிறைய இருந்தாலும், இருவரும் வெளிப்படையான ஒரு விவாதத்தில் ஈடுபடும் பொழுது நோக்கங்களை தவறாக புரிந்து கொள்வதையோ அல்லது ஒத்துழைக்கும் விவகாரங்களை ஆய்வு செய்வதை நாம் உறுதிப்படுத்த முடியும்.

ரஷ்யா, இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு பேலன்ஸ் செய்யப்பட்ட ஒரு உறவு இந்தியாவிற்கு நல்லது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு முக்கிய மையம், ஆப்கானிஸ்தான் தன் பாதுகாப்பிற்கு நிலையில்லாமல் இருப்பது இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அமைதியை உருவாக்க இந்தியா தொடர்ந்து பெரும் சக்திகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் ரஷ்யா, இந்தியாவிடம் தொடர்ந்து தொடர்பு இருப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் ரஷ்யா பாகிஸ்தானுடனும் தொடர்பில் இருக்கிறது. ரஷ்யா பாகிஸ்தானுக்கு எந்தவித ராணுவ வன்ஆயுதமும் வழங்க மாட்டேன் என உறுதி அளித்துள்ள நிலையில், இது மூலோபாய சமத்துவத்தை குறைக்காது என நம்பப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News