Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை: யோகி ஆதித்யநாத்தின் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குமா?

சிறப்பு கட்டுரை: யோகி ஆதித்யநாத்தின் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குமா?

சிறப்பு கட்டுரை: யோகி ஆதித்யநாத்தின் பொருளாதார நடவடிக்கைகள் வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குமா?

Saffron MomBy : Saffron Mom

  |  3 Jan 2021 7:00 AM GMT

உத்திர பிரதேசம் இந்தியாவில் மாநில வாரியாக அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. நாட்டின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்கி வரும் உத்தரபிரதேசம், முதலீடு மற்றும் வணிகத்திற்கு ஒரு சிறந்த இடமாக உருவெடுத்துள்ளது.

தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்திர பிரதேச அரசாங்கத்தின் தலைமையை நம்பியிருக்கிறார்கள். உத்திர பிரதேச மாநில பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதை இந்திய அளவில் Ease of Doing Business தரப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு உத்திர பிரதேசம் முன்னேறி இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாக, தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் சீனாவை விட்டு தனது உற்பத்தி ஆலைகளை வெளியே வெளியேற்றியது. இந்நிலையில் உத்திர பிரதேச அரசாங்கம் தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்சிற்கு டிஸ்ப்ளே ஆலை அமைப்பதற்கு நிறைய நிதி சலுகைகள் வழங்க இருக்கிறது. இதற்கு 655 மில்லியன் டாலர்கள் செலவாகும். ஆனால், இதன்மூலம் மேக் இன் இந்தியா திட்டம் உத்வேகம் பெறும். இதன் மூலம் இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக நாம் உலகிற்கு தெரியப்படுத்தலாம்.

Samsung Factory in Noida

சாம்சங் ஏற்கனவே உத்திர பிரதேசத்தில் உலகத்தின் மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்பு ஆலை வைத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உத்திர பிரதேசத்தைப் பொருத்தவரை வேலைவாய்ப்பிற்கு தகுந்த வாய்ப்புகளை வழங்குவதும், சுயதொழில் ஆரம்பிப்பதற்கு தொழில் வாய்ப்புகளை இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப வழங்கி அவர்களை மாநிலத்தின் முன்னேற்றத்தில் பங்கு எடுக்க வைப்பதும் முக்கியமான நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இதற்கு இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வது மிகுந்த அவசியமாகும்.

இந்த நோக்கத்துடன் மார்ச் 2021 வரைக்கும் வரைக்கும் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் "மிஷன் ரோஸ்கர்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் பல்வேறு துறைகள், அமைப்புகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழங்குவதோடு தன்னார்வ நிறுவனங்கள், பலவிதமான வாரியங்கள், மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் இந்த நிதியாண்டின் முடிவில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், சுயதொழிலிற்கும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

இதன் புள்ளி விவரங்களை நாம் கவனித்தால் உத்திர பிரதேச அரசு ஏற்கனவே அரசு மற்றும் தனியார் துறைகளில் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது தெளிவாகிறது. அரசாங்க தரவுகளின்படி இதுவரை சுமார் 3 லட்சத்து 79 ஆயிரத்து 750 இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் அடிப்படை மற்றும் இடைநிலை கல்வித் துறையில் மட்டும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கும் அவர்களை கவுரவிப்பதற்கும் அடிமட்டத்தில் வங்கி வசதிகளை வழங்குவதற்காகவும் 58,000 வங்கி பெண் சக்காகளை நியமித்ததன் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை தர உத்தரப் பிரதேச அரசாங்கம் முயல்கிறது. இந்த செயல் முறை விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்திர பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து கட்டிடங்கள், சமூக கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை இரண்டிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகளை வழங்கும் செயல்முறையும் விரைவில் நிறைவடைகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேசத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

நம் நாட்டின் பொருளாதார நிலைமையை உற்று நோக்கினால் ஒவ்வொரு மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பு மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகும். எனவே, அந்நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு நிறைய ஊக்கத்தையும் உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸின் கடினமான இந்த காலகட்டத்தில் உத்திர பிரதேச அரசு 39 ஆயிரத்து 390 கோடி ரூபாய் கடன் உதவியை 14.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு தொழில் பிரிவுகளுக்கு வினியோகித்து உள்ளது. இவற்றில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிவுகள் மிகவும் புதியவை. மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதுவரை 52 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளன. மேலும் ஆத்மநிர்பர், ரோஸ்கர் உத்திரபிரதேசம் திட்டத்தின் கீழ் 1.25 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழில்துறை திட்டங்களில் சுமார் 33 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கோடி ரூபாய் டிபன்ஸ் காரிடாரில் முதலீடு செய்வது அம்மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உத்திர பிரதேசத்தின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் மேம்பட்ட பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும்.

இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெறும் வேலை வாய்ப்புகளை தருவது மட்டுமல்லாமல் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்கும். கொரானா வைரஸ் தொற்று பரவ தொடங்கியவுடன் பிற மாநிலங்களிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் உத்திரப் பிரதேசத்திற்கும் வந்து சேர்ந்தனர். மாநில அரசு அவர்களுக்கு பாதுகாப்பான வருமானத்தை உறுதி செய்தது மட்டுமல்லாமல் பலவித முயற்சிகளை அவர்களை அங்கேயே தக்கவைத்துக்கொள்ள எடுத்து வருகிறது.

இதன் விளைவாக சுமார் 36 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பொருளாதார மாதிரியின் பாதையில் செல்வதன் மூலம் உத்திரபிரதேசம் நிலையான விரைவான மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

With Inputs from TimesNow

Next Story
கதிர் தொகுப்பு
Trending News