Kathir News
Begin typing your search above and press return to search.

ஆம். ஒரு மகாத்மா தான் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்.. அவர் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.!

ஆம். ஒரு மகாத்மா தான் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்.. அவர் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.!

ஆம். ஒரு மகாத்மா தான் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்.. அவர் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.!

Saffron MomBy : Saffron Mom

  |  23 Jan 2021 9:00 AM GMT

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைந்து போய் 70 ஆண்டுகள் ஆன பிறகும் இந்திய மக்கள் அவரைப் பற்றிய உண்மைகளை அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? அந்த பதிலின் ஒருபகுதி நேதாஜி நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதில் அடங்கியுள்ளது.

வகைப்படுத்தப்பட்ட பதிவுகள், நிகழ்வுகள் நடந்த போது அதனை அருகிலிருந்து பார்த்தவர்களின் சாட்சியங்கள், கொஞ்சம் பொது அறிவு இவை எல்லாவற்றையும் நாம் சேர்த்து வைத்து பார்த்தால் கூட நேதாஜி, பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு ஒரு மிகப்பெரிய அடி கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியும்.

பிரிட்டிஷார் 1947ல் இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கு எவ்வளவு பெரியது என்று அரசியல் காரணங்களுக்காக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. உண்மையில் சொல்லப்போனால் இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கியபோது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் என்று ஒன்றே நடந்து கொண்டிருக்கவில்லை. உலகப்போர் ஆரம்பித்த போது, அது வாழ்க்கையில் கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பு என்று கருதிய நேதாஜி, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு ஆறு மாதங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று இறுதி கெடு கொடுக்குமாறு காங்கிரசாரை கேட்டுக் கொண்டார். காந்தியின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ், பிரிட்டிஷாருக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த செயலையும் செய்வதற்கு தயாராக இல்லை.

காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், இந்தியாவை விட்டு வெளியேறி இந்திய தேசிய ராணுவத்தின் (INA) தலைவரானார். இப்பொழுதும் இந்திய தேசிய ராணுவத்தை பலர் இங்கே கிண்டல் செய்வார்கள், அதை மிகவும் பெரிய நன்றாக பயிற்சி பெற்ற பிரிட்டிஷ் இந்திய இராணுவத்துடன் ஒப்பிட்டு. ஆனால் சந்திரபோஸ் எந்த அளவு தடைகளைத் தாண்டி அப்படி ஒரு ராணுவத்தை மிக குறுகிய காலத்தில் கட்டமைத்தார் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இந்திய தேசிய ராணுவம், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தை போர்க்களத்தில் எதிர்கொள்ள தயார் ஆன போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை (Quit India) 1942ல் காங்கிரஸ் கொண்டு வந்தது. இதைப்போல் ஒரு இயக்கத்தைத்தான் 1939இல் சுபாஷ் சந்திரபோஸ் செய்ய சொல்லி கேட்டிருந்தார். இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக தொடங்கப்பட்டது. ஆனால் மூன்று வாரத்திற்குள் இந்த போராட்டம் நசுக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் சில அதிசயங்களை செய்தார் என்பது உண்மை. ஆனால் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு காரணம் என்று கூறுவது முழு உண்மை அல்ல. எதற்காக இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது என்பது வெளிப்படையாக அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளிமட் அட்லி தெரிவிக்க இருபது ஆண்டுகளுக்கு மேலானது.

ஆனால் அம்பேத்கர் இதை முன்னாலேயே கணித்திருந்தார். 1955 இல் BBCக்கு கொடுத்த பேட்டியில் இரண்டு விஷயங்கள் இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக இருந்தன என்று குறிப்பிட்டார். சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் அதில் ஒன்று. பிரிட்டிஷார் நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது அவர்களிடம் இருந்த ஒரு திடகாத்திரமான நம்பிக்கை இருந்தது. அதாவது நாட்டில் என்ன நடந்தாலும் என்னதான் அரசியல்வாதிகள் செய்தாலும் ராணுவ வீரர்களின் விசுவாசத்தை யாராலும் மாற்ற முடியாது என்பது. அந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் தான் அவர்கள் நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை சுக்குநூறாக உடைக்கப்பட்டது. அவர்கள் ராணுவ வீரர்களால் கூட ஒரு பிரிவாகப் பிரிய முடியும் என்பதும், அப்படி ஒரு பட்டாலியன் பிரிட்டிஷாரைத் தகர்க்கும் எனக் கூடிய விரைவில் புரிந்துகொண்டனர்.

1945 இல் உளவுத்துறையின் நிர்வாகி ஒரு ரகசிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கிறார். "இந்திய தேசிய ராணுவத்தின் நிலைமையை பொறுத்து விஷயங்கள் கவலைக்கிடமாக உள்ளது. இந்திய மக்களின் ஆர்வத்தை இந்த அளவுக்கு வேறு எதுவும் தூண்டவில்லை. பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்கு, இந்திய தேசிய ராணுவத்திடம் அனுதாபம் இருக்கிறது. இதைப் புறக்கணிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

1946ல் ராணுவ நடவடிக்கைகளுக்கான பதவியிலிருந்த, லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே சின்ஹா, 1976இல், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்கு உள்ளேயே இந்திய தேசிய ராணுவத்திற்கு மிகப்பெரிய அனுதாபம் இருந்ததாகவும் மற்றொரு 1857 போன்ற புரட்சி ஏற்படுமோ என்ற பயம் பிரிட்டிஷாரை 1946 இலிருந்து ஆட்டிப்படைக்க ஆரம்பித்ததாகவும் கூறுகிறார். இதுதான் பிப்ரவரி 1946 ல் பல பிரிட்டிஷ் எம்பிக்கள் அட்லியை சந்தித்தபோது முடிவெடுத்தது. மூன்று விஷயங்கள், ஒன்று நாமாக வெளியேற வேண்டும்; இரண்டாவது நாம் வெளியே துரத்தப்படும் வரை காத்திருக்க வேண்டும்; மூன்றாவது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் விசுவாசம் அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு உரியது அல்ல. இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய தேசத்தின் ஹீரோக்கள் போலக் கருதப்படுகிறார்கள்.

தன்னுடைய 'தோல்வி' யிலும் கூட நேதாஜி பிரிட்டிஷ் ஆட்சிக்கு மிகப்பெரும் அடியை கொடுத்தார். அவர் இந்தியாவுக்கு மிகவும் தேவைப்பட்ட போது மறைந்து போனார் என்பது நம்முடைய துரதிர்ஷ்டமே.

With Inputs from- Swarajya.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News