Kathir News
Begin typing your search above and press return to search.

பார்வதி தேவியார் பசு வடிவம் எடுத்த ஆச்சர்ய தேவாதிராஜன் திருக்கோவில்

திருவழுந்தூர் தேவாதிராஜ பெருமாள் ஆலயம்

பார்வதி தேவியார் பசு வடிவம் எடுத்த ஆச்சர்ய தேவாதிராஜன் திருக்கோவில்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  22 Jan 2022 6:00 AM IST

தேவாதி ராஜ பெருமாள் கோவில் தமிழகத்தில் மயிலாடுதுறையில் உள்ள தேரழுந்தூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மருவியப்பன் ஆமருவியப்பன் மற்றொரு திருப்பெயரும் உண்டு. இந்த கோவில் மஹா விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்ட ஆலயமாகும். ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட திருத்தலங்களுள் ஒன்று. மஹா விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக திகழும் இக்கோவிலில் விஷ்ணு பரமாத்மா ஆமருவியப்பனாகவும், இலட்சுமி தேவி செங்கமலவள்ளி தாயாராகவும் அருள் பாலிக்கிறார்கள்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், ஒரு முறை சிவபெருமானும், விஷ்ணு பெருமானும் சொக்காட்டான் விளையாட்டு விளையாடினர். இந்த விளையாட்டின் நடுவராக செயல்பட்டார் பார்வதி தேவியார். ஆட்டத்தின் நடுவே வென்றவர் யார் என்ற குழப்பம் வந்த போது தனது சகோதரரான மஹா விஷ்ணுவிற்க் சாதகமாக தீர்பை வழங்கினார் பார்வதி தேவியார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத சிவபெருமான் பார்வதி தேவியை பசுவாக மஅற சாபமிட்டார். பூமிக்கு பசுவாக வந்த பார்வதியுடன் துணையாக பசு வடிவம் எடுத்தனர் இலட்சுமியும், சரஸ்வதியும். பசுவாக இருந்த இவர்களை மேய்ப்பவராக மஹா விஷ்ணு இந்த தலத்தில் அவதரித்ததாலேயே "ஆ "மருவியப்பன் என்று அவருக்கு பெயர்.

ஊர்பெயர் குறித்து சொல்லப்படும் வரலாறு யாதெனில், ஒரு முறை உபரிசிரவசு என்கிற அரசர் தன் தேரின் நிழல் எங்குபட்டாலும் அந்த இடம் பஸ்பமாகிவிடும் வரம் பெற்றிருந்தான். ஒருமுறை இந்த கோவிலின் மேல் அவர் தேர் பறந்து செல்லும் போது அதனுடய நிழல் இக்கோவிலில் உள்ள பசுக்களின் மீது பட்டு அவை துன்பப்பட்டன. எனவே அவர் அகங்காரத்தை அடக்க எண்ணிய கிருஷ்ண பரமாத்மா அந்த தேரின் நிழல் மீது கால் வைத்து அழுத்தினார் தேரும் அழுந்தியது அந்த அரசனின் அங்காரமும் அழுந்தி அழிந்தது. எனவே இந்த ஊருக்கு தேரழுந்தூர் என்றும் அதுவே மருவி திருவழந்தூர் என்றும் அழைக்கப்படுகிறது.

மஹாவிஷ்ணுவின் அவதாரமான இராம காதையாம் இராமாயணத்தை எழுதிய கவிசக்ரவர்த்தி கம்பன் பிறந்த ஊர் இதுவே ஆகும். எனவே இத்திருத்தலத்தில் கம்பருக்கென்று சன்னிதி உண்டு. இங்கு மூலவராக இருக்கும் தேவாதிராஜன் 13 அடியில் நின்றகோலத்தில் அருள் பாலிக்கிறார்.

வைகாசி பிரம்மோற்சவம், மார்கழியில் வரும் வைகுண்டா ஏகாதேசி, ஆகிய விழாக்கள் இங்கே கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோவிலின் எதிரில் இக்கோவிலின் தர்சன புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது.

Image : Glourious hinduism

Next Story
கதிர் தொகுப்பு
Trending News