Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்படிகத்திடம் இருக்கும் அதிசய நற்பலன்! இதனை அணிவதும் இதனால் தான்!

ஸ்படிகத்திடம் இருக்கும் அதிசய நற்பலன்! இதனை அணிவதும் இதனால் தான்!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  16 March 2022 2:45 AM GMT

ஆன்மீக பாதையில் இருப்பவர்கள், தங்களின் ஆன்மீக தேடலை தீவிரப்படுத்தும் நோக்கில் பல விஷயங்களை முயற்சித்து பார்ப்பார்கள். அந்த வகையில், ஆன்மீக பாதைக்கு ஏதுவான மோதிரம், மாலை அணிவது வழக்கம். குறிப்பாக ருத்ராக்‌ஷம், மற்றும் ஸ்படிகம் ஆகியவற்றை அணிவதை நாம் கண்டிருக்கிறோம்.

இதில் ஸ்படிகம் என்பது வெறும் தோற்றத்திற்காக அணிவது அல்ல. அதற்கென பிரத்யேக முக்கியத்துவம் உண்டு. அதைபோலவே இன்று ஸ்படிகம் என்பது மிக எளிமையாகவும் கிடைத்து பல கடைகளில் கிடைத்து விடுகிறது. அந்த அனைத்தும் தூய்மையானதா? தரம் மிக்கதா என பாத்து அணிதல் அவசியம்.

இந்த ஸ்படிகத்தின் முக்கியத்துவம் குறித்து மஹா பெரியவர் சொன்னதாக ஒரு கருத்து இணையத்தில் உண்டு. அதாவது பாரத போரின் போது, விஷ்ணு சஹஸ்ஹரநாமத்தை பீஷ்மர் சொன்னதாக தெரிவிக்கிறார். அப்போது ஒரு கேள்வி எழுப்புகிறார். இதை பீஷ்மர் சொல்லியிருந்தால், அதனை பாரத போரின் போது யார் குறிப்பெடுத்திருப்பார்கள்?

இதற்கு கூட்டத்தினரிடையே அமைதி நிலவே, தொடர்ந்திருக்கார் மஹா பெரியாவர். பீஷ்மர் கிருஷ்ணரை போற்றி சஹஸ்ஹரநாமத்தை சொல்லி முடித்த போது அதில் லயித்திருந்த அனைவரும் கண்ணை திறக்கையில், உடனடியாக யுதிர்ஷ்டரர் சொன்னார்,, பிதா மகர் 1000 நாமங்களை போற்றி பாடினார் என்ற எண்ணிக்கையை முதன் முதலில் சொன்னவர் தர்மர்.

சஹஸ்ஹரநாமத்தை கேட்கையிலேயே அனைவரும் அந்த நாமத்தில் லயித்திருக்க இதனை யார் குறிப்பெடுப்பது என்ற கருத்து நிலவிய போது கிருஷ்ணர் சொன்னார், இதனை செய்ய சகாதேவனால் மட்டும் தான் முடியும். சகாதேவனால் இதனை கிரகிக்க முடியும், வியாசரால் இதனை எழுத முடியும் என்றார்.

அனைவருக்கும் சகாதேவனால் மட்டும் இதனை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்த போது, கிருஷ்ணர் சொன்னாராம், சகாதேவன் மட்டுமே இங்கே சுத்த ஸ்படிகம் அணிந்திருக்கிறார். அவர் ஸ்படிகத்தை அணிந்து சிவனை எண்ணி தியானித்தால், ஸ்படிகம் கொண்டு சப்தங்களை அலைவரிசையாய் மாற்ற முடியும். இதனை வியாசரால் எழுத முடியும்.

உடனே சகாதேவன் அந்த புண்ணிய காரியத்தை துவங்கினார், பீஷ்மர் சஹஸ்ஹரநாமத்தை சொல்ல துவங்கினார். வியாசர் எழுத துவங்கினார்.

எனவே ஸ்படிகத்தின் இயல்பென்பது, அமைதியான சூழ்நிலையை ஒலி அதிர்வுகளை நினைவில் வைத்து கொள்வது. நல்லதிர்வுகளை நினைவு வைத்து கொள்ளும் தன்மையும் ஸ்படிகத்திற்கு உண்டு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News