Kathir News
Begin typing your search above and press return to search.

சிவ தாண்டவங்கள் எத்தனை மற்றும் எப்போது நிகழ்ந்தது? ஆச்சர்ய குறிப்புகள்

சிவ தாண்டவங்கள் எத்தனை மற்றும் எப்போது நிகழ்ந்தது? ஆச்சர்ய குறிப்புகள்

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  18 March 2022 1:48 AM GMT

ஆடல் கலையில் நாயகன் சிவ பெருமான். சிவபெருமான் தில்லையில் நட்டம் ஆடுவாதாலே நடராஜன் என்ற பெயரும் சிவபெருமானுக்கு உண்டு. நடராஜர ஆடும் தாண்டவத்தில் ஏழு வகைகள் உண்டு. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியதாண்டவம், காளிகா தாண்டவம், திருப்புரத் தாண்டவம், கெளரி தாண்டவம், சம்ஹார தாண்டவம், மற்றும் உமா தாண்டவம்.

இதில் ஆனந்த தாண்டவம் என்பது இறைவன் ஆனந்தத்தில், பேரானந்தத்தில் ஆடுவது. இந்த தாண்டவத்தின் போது இறைவனின் கரங்களில் டமரு, அபய ஹஸ்தம், தண்ட ஹஸ்தம், ஏந்தியிருப்பார். இந்த தாண்டவத்திற்கு சதா தாண்டவம் என்ற பெயரும் உண்டு.

சந்திய தாண்டவம் அல்லது பிரதோஷ தாண்டவம் என்கிற இதுவும் ஆனந்தத்தினாலே ஆடப்படுவது. இந்த நடனம் மிக புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த நடன காட்சியை நாம் ஓவியமாகவோ, அல்லது வரலாறுகளில் காண்கிற போது, இந்த நடனத்தை அய்யன் ஆடுகையில் அவரை சுற்றி அனைத்து தேவாதி தேவர்களும் சுற்றி நிற்பதையும், ரசித்து மெய்மறந்து இருப்பதையும் காட்சிப்படுத்தியிருப்பர். இது படைப்புக்கான நடனம். சந்திய தாண்டவமே அனைவரையும் காக்கிறது என்பது நம்பிக்கை.

காளிகா நடனம் இதனை ருத்ர தாண்டவம் எனவும் சொல்வதுண்டு. சிவனும், பார்வத்தியும் உக்கிரமாக ஆடும் கோலத்தில் இருக்கும் இந்த காட்சி காளிகா நடனம் என அழைக்கபடுகிறது.

திரிப்புர தாண்டவம் என்பது அசுரன் திருப்புரனை அழித்த பின் ஆடியது. திரிப்புர அசுரன், மூன்று லோகத்தையும் தன் வசப்படுத்தி, ஒவ்வொரு லோகத்திலும் ஒவ்வொரு கோட்டை அமைத்து பல அநீதிகளை இழைத்து வந்தான். ஒற்றை அம்பினால் மூன்று கோட்டைகளை வீழ்த்தி பின் ஆடியதெஎ திரிப்புர தாண்டவம். இதனாலேயே இறைவனுக்கு திரிப்புரந்தக மூர்த்தி என்ற பெயரும் உண்டு.

கெளரி தாண்டவம் என்பது திரிப்புர தாண்டவத்தை ஆடப்படுவது. இதுவும் ஒருவகையில் ருத்ர தாண்டவமே. இந்த ஒரு முறையில் மட்டுமே பார்வதி தேவி அய்யனுடன் கெளரி ரூபத்தில் இணைந்து நடனமாடியிருப்பார். ஜடா முடி அவிழ்ந்து அவர் ஆடும் கோலம், பக்தர்களுக்கு பெரும் பரவசத்தை ஏற்படுத்த வல்லது.

சம்ஹார தாண்டவம் என்பது பெயரில் இருப்பதை போலவே ஒரு அழிவின் முடிவில் ஆடப்படுவது. மற்ற அனைத்து தாண்டவத்தை விடவும் உக்கிரமானது. தக்‌ஷணனின் யாகத்தில் சதி தன்னை தானே எரித்து கொண்ட போது, சிவபெருமான் ஆடியாதே சம்ஹார தாண்டவம். அதன் பலனாய் தக்‌ஷனின் பெரும் சேனை அழிந்தது என புராணங்கள் சொல்கின்றன.

இறுதியாக உமா தாண்டவம்,இதுவும் ஒரு வகை ருத்ர தாண்டவமே. ஒரே வேறுபாடு, இந்த நடனத்தில் பார்வதி தேவி, உமையாள் ரூபத்தில் இருக்கிறாள் என்பதே.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News