நான்கு முகம் கொண்ட சிவலிங்கமிருக்கும் ஆச்சர்ய ஆலயம்!!
By : Kanaga Thooriga
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்தில் ராம்கர் கிராமத்தில் அமைந்திருக்கிறது மிகவும் பழமையான முந்தேஸ்வரி தேவி கோவில். இந்த கோவில் முந்தேஸ்வரி மலையில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புராதன தொன்மைமிக்க கோவில்களில் இது மிகவும் முக்கியமான ஒன்று.
மிகவும் பழமையான இந்த கோவில் சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டது கிமு 625 என சொல்லப்படுகிறது.
இந்த கோவில் பழங்கால நினைவுச் சின்னமாக இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் 1915 ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வருகிறது. இந்த கோவில் குறித்து சொல்லப்படும் நாட்டுப்புற வரலாறு யாதெனில் இந்த பகுதியில் சண்டா முண்டா என்ற இரு அரக்கர்கள் இருந்து வந்தனர். இவர்களுடைய அரசனாக மகிசாசுரன் திகழ்ந்தான். மகிசாசுரன் போரிட்டு தோல்வி கண்டதை அடுத்து துர்க்கையின் அற்புதத்தை கண்டு வியந்த முண்டா முனீஸ்வரி பவானி கோவில் என்பதை கட்டியதாகவும், அவனுடைய இளைய சகோதரன் சண்டேஸ்வரி கோவிலை மதுரானா மலையில் கட்டி இருப்பதாகவும் அந்த கதை விவரிக்கிறது.
இந்த கோவில் குறித்து சொல்லப்படும் மற்றொரு கதையாதெனில், மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் கல்வி போதித்தமையால், குரு தட்ஷனையாக அஹிக்சத்ரா எனும் இடத்தின் அரசனாக துரோணர் அறிவிக்கப்பட்டார். அந்த இடம் இன்று அஹினாபூர், மிர்சாபூர் மற்றும் கைமூர் ஆகியவை என்கிற வரலாற்று பதிவும் உண்டு. மேலும் இந்த கோவிலின் நான்கு முகம் கொண்ட சிவலிங்கம் நாகத்துடன் காட்சி அளிக்கிறது. இது போன்ற ஒரு அம்சத்தை நாம் வேறு எங்கும் காண முடியாது. எனவே இந்த கோவில் நாகர்களின் சாம்ரஜ்ஜியத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது. இந்த கோவிலில் மையத்தில் சிவலிங்கமும். அய்யனுக்கு தென் புறத்தில் தேவியும் அமைந்துள்ளனர். இந்த கோவில் கடல் மட்ட த்திலிருந்து 608 அடி உயரத்தில் அமைந்த்உள்லது. சொனு நதிக்கரையில் கைமூர் பீடபூமியில் இந்த கட்டிடக்கலையின் அதிசயம் அமைந்திருக்கிறது.