Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்ப கடவுளாக கணபதி இருப்பதன் காரணமென்ன?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்ப கடவுளாக கணபதி இருப்பதன் காரணமென்ன?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  22 March 2022 2:52 AM GMT

விநாயகர் முழு முதற் கடவுள். அவர் கடவுள் என்பதை விடவும், அவர் ஓர் இருப்பு. அவர் இருக்கும் இடம் அமைதி, அன்பு, கருணை, வெற்றி போன்றவை நிறைந்திருக்கும் இடமாக கருதப்ப்டுகிறது. அதனால் குழந்தைகள் தங்கள் பள்ளி பை துவங்கி, பெரியவர்கள் கூட பர்ஸ், கீ செயின், வேலை செய்யும் இடம் என எங்கெல்லாம் சாத்தியம் உள்ளதோ அங்கெல்லாம் விநாயகரை வைத்திருப்பதை நம்மால் காண முடியும்.

விநாயகரின் திருவுருவம் நமக்கு கற்று தரும் வாழ்க்கை பாடங்கள் அதிகம். உதாரணமாக, அவருடைய சிரம் நமக்கு எதையும் பெரிதாக சிந்திக்க வேண்டும் என்பதை கற்று தருகிறது. காரணம் அவருடைய சிரம் என்பது ஞானத்தின் குறியீடு. கஜானனாக திகழும் அவருடைய சிரம் அறிவின், அறிவார்ந்த சிந்தனையின் அடையாளமகா திகழ்கிறது. ஒவ்வொருவரும் சாமர்த்தியமான, அறம் சார்ந்த சிந்தனைகளை கொள்ள வேண்டும் என்பதை நமக்கு கற்று தருகிறது

அடுத்து கணேஷரின் பெரிய காதுகள். அவருடைய காதுகள் நமக்கு எப்போதும் நாம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கிறோம். ஆனால் பிறருக்கு செவி சாய்ப்பது என்பது நவீன மேலாண்மையில் கூட மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தன்னுடைய பக்தர்களின் குறைகளை செவிக்கொடுத்து கேட்பவர்.

கணேசரின் சின்னஞ்சிறு கண்கள் உணர்த்துவது கவனத்தை குவியுங்கள் என்பதை. யார் ஒருவரால் மனதை ஒருமுகப்படுத்த முடிந்திருக்கிறதோ அவர்களால் தான் கவனத்தை குவிக்க இயலும். அடுத்து விநாயகரின் திருநெற்றியில் அமைதிருக்கும் திரிசூல முத்திரை குறிப்பது முக்காலத்தை. கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம். யாரொருவர் இந்த மூன்று காலத்தையும் முறையாக கையாள்கிறாரோ அவர் வெற்றிக்கு அருகில் இருப்பார். கணபதி இந்த மூன்றையும் கட்டுப்படுத்தியவர்.

கணேசரின் உடைந்த தந்தம் உணர்த்துவது, சூழல் எவ்வாரு இருப்பினும் அதில் நன்மையை மாத்திரம் கொண்டாடுங்கள். அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளுங்கள். நன்மைகளை மட்டும் வைத்து கொண்டு தீய எண்கணங்களை புறம் தள்ளுங்கள் என்பதை.

கணேசரின் வயிற்று பகுதி உணர்த்துவது நன்மை, தீமை இரண்டையும் ஜீரணித்து முன்னேறுங்கள். அவருடைய வயிற்று பகுதி அளவில்லா பிரபஞ்சத்தை உணர்த்துகிறது. அனைத்து விதமான சவால்களையும் தாங்குபவர் என்பதை உணர்த்துகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News