Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் சாமுண்டி, தீரா நோய்களை தீர்க்கும் தாய் சமயபுரத்தாள்!

தமிழகத்தின் சாமுண்டி, தீரா நோய்களை தீர்க்கும் தாய் சமயபுரத்தாள்!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  22 March 2022 3:00 AM GMT

சமயபுரத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவில் திருச்சியின் முக்கிய அடையாளம். இந்த கோவிலின் அம்பாளின் மறுரூபமான மாரியம்மனுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

சக்தி எனும் பார்வதியின் தேவியின் பல அம்சங்களில் மிக முக்கிய அம்சம் மாரியம்மன். ஆக்ரோஷமானவளாக, ஆனந்தம் நல்கும் அன்னையாக அனைத்து அம்சத்திலும் காட்சி தருபவள் மாரியம்மன். குறிப்பாக சமயபுரத்தாள் அம்மை நோயை தீர்க்கும் அதிசயத்தாள் என அந்த ஊர் மக்களால் போற்றப்படுகிறாள்.

காளி என்ற ரூபம் உருவானதற்கு, பல கதைகள் புராணத்தில் சொல்லப்படுவதுண்டு சிவபெருமான் விஷம் உண்ட போது அந்த விடத்தின் தீவிரத்தால் உருவானவள் காளி என சொல்லபடுவதுண்டு. மாரியம்மன் என்பவள் காளியின் ரூபம் எனவே அவளுக்கு மகமாயீ அல்லது சீதலா கெளரி என்ற பெயர்களும் உண்டு.

ராமரின் தந்தையாஉன தசரத மஹாராஜா இங்கே வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அம்மனை மக்கள் போற்றி பாட காரணம், சமயபுரத்தாளை எண்ணி வணங்கினால் அவள் பக்தர்களை ஒரு போதும் கை விடுவதே இல்லை. சமய புர மாரியம்மன் சமயத்தில் காப்ப்பாள் என்பதே பழமொழி போல் ஆகியுள்ளது.

அம்மை போன்ற நோய்கள் ஏற்படின், இங்கே வந்து தங்கியிருந்து மாவிளக்கிட்டு திரும்பினால் அந்நோய் பறந்தோடும் என்பது நம்பிக்கை. மாசி மாதத்தில் சமயபுரத்தாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். இங்கே அம்மனுக்கு தங்கள் அர்பணிப்பாக மொட்டை அடித்தல், தீச்சட்டி ஏந்துதல் போன்ற பல நேர்த்தி கடன்களை செலுத்துகிறார்கள்.

இன்று உற்சவத்திற்கென இருக்கும் விக்ரகம் விஜயநகர பேரரசிற்கு சொந்தமானது என்றும். தங்கள் நகரை அழிவு நெருங்கிற போது அம்மனை இருக்கும் இடத்தில் இருந்து மாற்றுவதற்காக பல்லக்கில் வைத்து பணியாட்கள் எடுத்து வந்த போது, சற்று ஓய்வுக்காக அவர்கள் இறக்கி வைத்த இடமே இன்றைய சமயபுரம். ஓய்வுக்கு பின் அவர்களால் அந்த இடத்திலிருந்து அம்மனை நகர்த்தவே முடியவில்லை என்கிற ஒரு வரலாறும் உண்டு.

மைசூரில் உள்ள சாமுண்டியின் உருவ அமைப்பை ஒத்த அமைப்பு என்பதாலேயே பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் குவிகின்றனர். தமிழகத்தின் வருவாய் ஈட்டி தரக்கூடிய கோவில்களின் வரிசையில் சமயபுரம் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News