காலசர்ப தோஷம் நேர்வது ஏன்? நிவர்த்தியாக செய்ய வேண்டிய பூஜை என்ன?
By : Kanaga Thooriga
இந்து மரபில் ஒவ்வொரு இல்லங்களுக்கும் பூஜை என்பது மிக முக்கியமான நிகழ்வு. எவ்வளவு துரிதமான வாழ்வு எனினும், கடுமையான நேர சிக்கல் எனினும் பூஜைக்கு நேரம் ஒதுக்கும் பலரை இன்றும் நாம் காண்கிறோம். காரணம் நல்வாழ்விற்கு, சுபமான வாழ்விற்கு கடவுளின் ஆசி மிக முக்கியமானது.
புனித நூல்களின் படி ஒரு வீடு மிகவும் சுபிக்ஷமானதாக இருக்க பின் வரும் பூஜைகளை செய்வது அவசியம். யாரெல்லாம் இந்த பூஜையை முழு மனதுடன், தூய்மையான பக்தியுடன் யார் செய்கிறார்களோ அவர்களின் எண்ணமும், வேண்டுதலும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கணபதி பூஜை.
கணபதி பூஜை மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையான வழிபாடு. நம் மரபில் இவரை முதலில் வழிபடுவதே வழக்கம். அதிலும் அவருக்கென ஒரு பிரத்யேக பூஜை செய்யப்படும் ஆயின் அது அவர் பக்தர்களின் வாழ்வில் பெரும் ஏற்றத்தை வழங்கும். இதன் மூலம் ஒருவருக்கு நல்ல ஆரோக்கியம், செல்வ வளம் வெற்றி ஆகியவை கிடைக்கப்பெரும்.
லட்சுமி பூஜை
சக்தியின் மற்றொரு அம்சம் மஹாலட்சுமி. மஹாலட்சுமியை வழிபடுவதால் வாழ்வில் இருக்கும் பொருளாதார தடைகள், சிக்கல்கள் போன்றவை நீங்கும்.
சனிபகவான் பூஜை
சனிசிங்கனாப்பூர் எனும் புனித ஸ்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனிதேவருக்கு எண்ணையை சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானது. தேசத்தில் இருந்து பல லட்சம் பக்தர்கள் இங்கே அன்றாடம் குவிந்து சனி பகவானுக்கு தைலாபிஷேகம் நடத்துகின்றனர். இதன் மூலம் தீய கர்ம வினைகளிலிருந்து விடுதலை கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
காலசர்ப தோஷ நிவாரண பூஜை
எப்போது மற்ற ஏழு கிரகங்களும் ராகு மற்றும் கேதுக்கு இடையே வருகிறதோ அப்போது இந்த தோஷம் எழும். இந்த நேரத்தில் பிறந்தவர்கள் பெரிதும் சில சிக்கல்களை சந்திப்பார்கள் இதற்காக கால சர்ப தோஷ நிவாரண பூஜை செய்யப்படும் ஆயின் அது மிகுந்த நற்பயனை அளிக்கும்.
இவை மட்டுமின்றி இன்னும் பல பூஜைகள் நம் நல்வாழ்விற்காக நம் முன்னோர்கள் ஆன்மீக அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். பார்வதி சிவலிங்க பூஜை, மங்கள தோஷ நிவாரண பூஜை, மஹாமிருந்தியுஞ்சய மந்திர ஜபம், சத்யநாராயணா பூஜை, ஹனுமன் பூஜை, கத்யாயனி பூஜை ஆகியவற்றை செய்வதால் ஒருவர் தோஷ்ங்கள், கர்ம வினைகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று வாழலாம் என்பது சாஸ்திரம் காட்டும் வழிகள்.