அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் வீட்டு அலங்கார பொருட்கள்! ஆச்சர்ய தகவல்
By : Kanaga Thooriga
பெரும்பாலான சூழலில் ஒரு மனிதனின் மனம் நிறைவாக இருப்பது தன் இல்லங்களில் மட்டும் தான். ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்கிற போது வீடு என்பது இல்லமாக மாறுகிறது. வீட்டினை யார் வேண்டுமனாலும் உருவாக்கி விடலாம் அனால் இல்லம் அப்படியல்ல. அங்கே மகிழ்ச்சி, இன்பம், ஆனந்தம்ம் அனைத்தும் நிரம்பியிருக்க வேண்டும். ஒரு வீடு முழுவதும் நேர்மறை அதிர்வுகள் நிரம்பியிருக்கிற போது அது இல்லமாக மாறுகிறது.
இதற்கிடையே சில சாஸ்திர விதிகளின் படி, ஒரு வீட்டில் நன்மையை ஈர்க்க கூடியது என சில பொருட்களை வகைப்படுத்தியுள்ளனர். இதன் உண்மைதன்மை குறித்த ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருப்பினும். ஒரு விஷயம் நமக்கு நேர்மறையான அதிர்வுகளை தருமெனில் அதை முயற்சிப்பதில் தவறில்லை.
அதுமட்டுமின்றி நாம் நமது இல்லத்திற்கு பொருட்களை தேடித்தேடி வாங்குவதை வழக்கமாக வைத்திருப்போம். ஒவ்வொரு சிறிய பொருட்களுக்கு பின்னும் பல மெனக்கெடல்கள் இருக்கும். அதில் முதலாவதாக சொல்லப்படுவது மணி ப்ளாண்ட் எனப்படும் செடி வகை இதனை வீட்டின் வடக்கு புறத்தில் வைத்திருப்பதால் பொருளாதார ஏற்றம் இருக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
இதற்கடுத்தபடியாக நீட்டில் மிகச்சிறிய நீர்வீழ்ச்சி போன்ற வீட்டு அலங்கார பொருள் இருப்பது மிக நல்ல அதிர்வை கொடுக்குமாம். நீரின் ஓட்டத்தை போலவே பணம் மற்றும் மகிழ்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பது அதன் தார்பரியம்.
இதை போலவே பணம் வைக்கக்கூடிய இடத்தில் ஒரு சிறிய கண்ணாடி இருப்பது பணத்தின் இருப்பை பெருக்கும் ஒரு சிறு வாஸ்து உத்தி. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் யாதெனில், அந்த கண்ணாடி சுத்தமாகவும் மற்றும் உடையாமலும் இருக்க வேண்டும்.
அடுத்து மீன் தொட்டி, இது பெரும்பாலனவர்களுக்கு தெரிந்ததே. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் யாதெனில், மீன் தொட்டி வைப்பது எளிது ஆனால் அந்த மீன்களை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். மீன் தொட்டியில் மீன்கள் எத்தனை ஆரோக்கியத்துடன் ஓடியாடி நீந்துகிறதோ அந்தளவு நமது பொருளாதாரம் ஆரோக்கியமான விதத்தில் செல்லும்.
மேலும், மூங்கில் செடிகள், சிரிக்கும் புத்தா சிலை, காற்றடித்தால் இசையெழுப்பும் சைம்ஸ் எனும் வீட்டு அலங்கார பொருள், இலட்சுமி குபேரர் மற்றும் இலட்சுமி கணபதி திருவுருவம் ஆகியவை வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்பது நம்பிக்கை.
உழைப்பும், விடாமுயற்சியும் நம் வெற்றியின் தூண்கள், இது போன்ற குறிப்புகள் நம்மை ஊக்கப்படுத்தும் ஓர் உற்சாகமன்றி வேறில்லை.