சூரிய சந்திர கோள்கள் பலவீனமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
By : Kanaga Thooriga
சில சமயங்களில் வாழ்கை நாம் கணிக்க முடியாத திசையில் பயணிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். சிறிய விபத்து கூட பெரிய விளைவை ஏற்படுத்தலாம். வாழ்வெனும் மைதானத்தில் மட்டுமே படைத்தவன் எந்தவித விதிமுறைகளும் இன்றி விளையாடுகிறார் என்று கூட சில சமயங்களில் தோன்றும்.
இதற்கு பலவித காரணங்களை நாம் கணிக்கலாம். ஆன்மீக ரீதியாக அல்லது ஜோதிட ரீதியாக சிந்தித்தால், இது போன்ற எதிர்பாரா நிகழ்வுகளுக்கு நம்முடைய கிரகங்களின் அமைப்பை காரணமாக சொல்லாம். அந்த கிரகங்களின் நிலையை கவனித்து அதற்கு தேவையான பரிகாரங்களை செய்து வர தொடர் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
இதற்கு முதன்மையான பரிகாரமாக சொல்லப்படுவது பூஜைகள், யாகங்கள். புனிதமான பூஜைகளின் மூலம் நம் கோள்களின் நிலையை முறைப்படுத்தும் வாய்ப்புகளை புராணங்களும், வேதங்களும் பரிந்துரைக்கின்றன. ஆனால் இதிலிருக்கும் ஒரு சவால் என்னவெனில், இது போன்ற யாகங்களை செய்ய பல நாட்கள் ஆகலாம் அல்லது ஒரு முறையான புரோகிதரின் இருப்பு நமக்கு தொடர்ச்சியாக இருப்பது அவசியம். மிக முக்கியமான இந்த சடங்குகளை தொடர்ச்சியாக செய்வதற்கு உரிய செலவு நிச்சயம் ஆகும்.
அந்த செலவுகளை செய்ய முடியாதவர்கள் செய்வதறியாது தவிக்க வேண்டாம். நம்முடைய முன்னோர்கள் அனைத்து விதமான சவால்களுக்கும் தீர்வுகள் சொல்லியுள்ளனர். அந்த வகையில் இது போன்ற யாகங்கள், பூஜைகள் செய்ய முடியாதவர்களுக்கு சில வீட்டு பரிகாரங்களை நம் முன்னோர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த வீட்டு பரிகாரங்களுடன், நம்மால் சொல்லப்பட்ட யாகங்களையும் செய்ய முடிந்தால் நிச்சயம் ஒரு நல்ல பலனை நம்மால் அனுபவிக்க முடியும் என்பது நம்பிக்கை.
உதாரணமாக, சூரிய கோள் பலவீனமாக இருந்தால் சூரிய வெளிச்சத்தில் சில நிமிடங்கள் அமர்ந்திருக்கலாம். மற்றும் சூரியவொளியில் அமர்ந்து உணவருந்துவதால், சூரியனின் முழு பலனையும் நாம் அனுபவிக்க முடியும். சந்திர கோள் பலவீனமாக இருந்தால், சூரிய அஸ்தமனத்துக்கு பின் குளிர்ந்த உணவினை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
செவ்வாய் கிரகம் பலவீனமாக இருந்தால், தரையில் உறங்குவது, மற்றும் வாரம் ஒருமுறை உணவில் இருந்து உப்பினை முழுமையாக நீக்கி உண்பது நல்ல பலனை தரும். மற்றும் ஹனுமன் ஸ்துதியை சொல்லி வருவதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
சனிக்கோள் கோள் பலவீனமாக இருந்தால், தொடர்ந்து அனுமனை வணங்கி வர வேண்டும். தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது நல்ல பலனை கொடுக்கும்.