நன்மை அருளும் நாக வழிபாட்டிற்கு உகந்த தலம்! ஆச்சர்யமூட்டும் ஆலயம்
By : Kanaga Thooriga
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது இந்த கோவில். கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தூரம் உள்ளது இந்த சிவன் கோவில் . கும்பகோணத்தை அடுத்த திருநாதேஷ்வரத்தில் இறங்கி 2 கி.மீ தூர பயணத்தில் தேப் பெருமாநல்லூரை அடையலாம். எப்போதும் சூரிய கிரகணத்தன்று திறக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் 2010 முதல் சூரிய கிரகண நாட்களில் மூடப்பட்டு வருகிறது .
காரணம் அந்த குறிப்பிட்ட ஆண்டின் கிரகணத்தின் போது கோயில் வளாகத்தில் உள்ள வில்வ மரத்தின் இலையை ஒரு நாகம் பறித்து, பின் கோமுகம் வழியாக நுழைந்து சிவனின் மீது வைத்து அர்ச்சித்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அதிலிருந்த இந்த கோயிலுக்கு கூட்டம் அதிகம் வர ஆரம்பித்து விட்டது .
பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள் . அந்த ஆண்டு முதல் கிரகணத்தின் போது கோயில் முழுமையாக முடப்பட்டு பின்னர் கிரகணம் முடிந்து திறக்கும் போது சன்னிதியில் பாம்பு சட்டை இருக்குமாம் . இது எல்லா வருடமும் நடைபெருகிறது . இது போல் இந்த கோயிலில் நிறைய அதிசயங்கள் நடைபெற்றதாக கூறுகிறார்கள் .
இந்த ஸ்தலமே ஒரு புண்ணிய ஸ்தலமாகும் காரணம் இதை சுற்றி எல்லா திசைகளிலும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன . திருவிடைமருதூர், திரு விசரல்லூர், நாச்சியார் கோயில், திருமங்கலகுடி , போன்ற ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இங்கு சிவன் விசுவநாத சுவாமி என்றும் அன்னை வேதாந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். ஆண்டு முழுவதும் முலவர் திருமேனியில் சூரிய ஒளிக்கதிர் விழுகிறது . சுவாமிக்கு ருத்ராஷ கவசம் அணிவிக்கபட்டு ருத்ரா ஷத்தால் அபிஷேகம் செய்ய படுகிறது . இவருக்கு ருத்ரேஷ்வரர் என்கிற பெயரும் உண்டு . இந்த தலத்தில் வழிபடு பவருக்கு மறுபிறப்பு இல்லை என்பது நம்பிக்கை .
இவ்வாலயத்தின் பல இடங்களில் நாகத்தின் சிற்பங்கள் காணப்படுகின்றன . கோமுக துவாரத்தில் பாம்பு படமெடுப்பது போன்று ஒரு சிற்பம் உள்ளது . இந்த வழியாகத்தா நாகம் நுழைந்ததாக கூறுகிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர் மற்றும் பிரகாரத்தின் உள்ளே அமைத்துள்ள ராகு கேது சிலைகள் சிறந்த வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டி ருக்கிறது . தேப் பெருமான் என்பது ஈசனை குறிக்கிற வார்த்தை யாகும் அதனாலேயே இவ்வூருக்கு தேப் பெருமாநல்லூர் எனும் பெயர் வந்தது . கும்பகோணத்தின் சுற்றுப் பகுதிகளிலேயே வேத விற்பணர்கள் அதிகம் வாழும் ஊராகும் .