Kathir News
Begin typing your search above and press return to search.

உங்கள் பாதையில் பறவையின் இறகு கிடைக்கிறதா? இயற்கை உணர்த்தும் செய்தி என்ன?

உங்கள் பாதையில் பறவையின் இறகு கிடைக்கிறதா? இயற்கை உணர்த்தும் செய்தி என்ன?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  21 May 2022 6:53 AM IST

இறகுகளை தேவதைகளோடு ஒப்பிடுவார்கள். இறகுகள் பறவை உதிர்த்த இறகுகள், நம் கைகளுக்கு கிடைக்கிற போது பறத்தலுக்கான அம்சத்தை நம் கைகளில் ஏந்தும் தருணம் நாம் பெரும் அனுபவம் அலாதியானது. நாம் எதிர்பாராத நேரத்தில், சாலையோரத்தில், நாம் நடையிடும் பாதையில் நம் மீது இறகுகள் உதிரலாம், அல்லது நம் கைகளுக்கு கிடைக்கலாம்.

இந்த இறகுகள் நமக்கு உணர்த்துவது என்ன? இறகுகள் விடுதலையை உணர்த்துகின்றன. நம் எல்லைகளை கடந்து நாம் முன்னேற வேண்டும். இது தான் நான், இது தான் என் எல்லை, போன்ற கட்டுபாடுகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு இடராக இருக்கலாம். இந்த நான் எனும் தன்மையை உடைத்து கொண்டு வெளியேறுவதே முக்தி. அந்த வகையில் இறகுகள் நம் கைகளில் கிடைத்தால் நிமித்த சாஸ்திரத்தின் படி அவை நமக்கு பல விஷயங்களை உணர்த்தும். ஒவ்வொரு நிற இறகிற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு.

சில நேரங்களில் ஒரு அதிசயம் போல, காற்றே அடிக்காத போது, ஜன்னல் இல்லாத அறையில், தியானம் முடித்து விழிக்கையில் உங்கள் முன் ஓர் இறகு இருக்கலாம். இது போல் அதிசயமாக கிடைக்கும் இறகு நமக்கு நிச்சயம் ஏதோவொரு செய்தியை உணர்த்துகின்றது. உங்கள் கைகளில் வெள்ளை நிற இறகு கிடைத்தால் புனிதம், அன்பு, அமைதி நம்பிக்கை பாதுகாப்பு போன்ற நல்ல அறிகுறிகள் உங்களுக்காக காத்திருக்கிறது என்று பொருள். மேலும், வெள்ளை நிற இறகு உங்கள் மூதாதையர் மிகவும் நிறைவாக இருக்கின்றனர் என்பதன் அறிகுறி.

உங்கள் கரங்களுக்கு சிவப்பு நிற இறகு கிடைத்தால் அவை உங்கள் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்க போகிறது என்பதை உணர்த்தும் மேலும் உங்கள் உணர்ச்சி நிலை சற்று தீவிரமடையும் என்பதை உணர்த்தும். நீல நிற இறகு ஏற்புத்தன்மையை, உண்மையை பேச வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மஞ்சள் நிற இறகு நம் உள்மனம் சொல்வது சரி என்பதை நமக்கு உணர்த்துகிறது. உங்களுக்கு ஆசிர்வாதமும், ஞானமும் நிரம்ப இருக்கும் தருணத்தில் நீங்கள் தங்க நிறத்திலான இறகினை பெறக்கூடும்.

பச்சை நிற இறகு உங்கள் தனிப்பட்ட காதல் வாழ்க்கை மேலும் மேம்பட போகிறது என்பதை உணர்த்தும். ப்ரவுன் நிற இறகு உங்கள் நட்பு மேம்படும் என்பதை உணர்த்தும். கருப்பு நிற இறகு நாம் கவனமாக இருக்க வேண்டும் என்கிற அறிவுருத்தல். சில வேளைகளில், ஆன்மீக ரீதியான பல முன்னேற்றங்களை காண இருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News