தீராத நோய்கள் தீர்க்கும் மருந்தீஸ்வரர்! ஒரே தலத்தில் முப்பெரும் காட்சி தரும் அதிசயம்
By : Kanaga Thooriga
கச்சபேஸ்வரர் ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கச்சூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலாகும். இங்கு சிவபெருமான் கச்சபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருப்பெயர் அஞ்சனநாட்சியம்மாள். இந்த கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். இந்த கோவில் இரட்டை கோவிலாகும் இதே கிராமத்திலிருக்கும் மருந்தீஸ்வரர் கோவிலே இதன் இரட்டை கோவிலாக கருதப்படுகிறது.
இந்த கோவில் வளாகம் இரண்டேக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் பிரமாண்ட ஸ்தலமாகும். இந்த வளாகத்தினுள் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டது, தற்போதிருக்கும் கட்டிடக்கலை நாயகர்களால் புதுப்பிக்கப்பட்டது.
இந்த இரட்டை கோவிலில் ஒரு கோவில் மலையின் மேலும், மற்றொரு கோவில் மலை அடிவாரத்திலும் அமைந்துள்ளது. இந்த இருபெரும் சிவபெருமானையும் சேர்த்தே பதிகம் பாடியுள்ளார்.
இந்த இரு கோவில்களிலும் சிவபெருமான் மூன்று பெயரில் காட்சி தருகிறார். மருந்தீஸ்வரர், மலைக்கு அடியில் இரந்தீஸ்வரர் மற்றும் விருந்தீஸ்வரர் என இரு பெயரிலும் அருள் பாலிக்கிறார். அதாவது இறைவனின் முக்கண்ணை குறிக்கும் அமைப்பு இது என்பது ஆச்சர்யமூட்டும் தகவல்.
தேவர்களின் அதிபரான இந்திரனுக்கு சாபத்தினால் அவதியுற்ற போது அவனுக்கு அஸ்வினி தேவர்கள் மருந்தை தேடி அலைந்தனர். இந்த தலத்தில் வழிபட்டு சிவபெருமானின் அருளோடு மருந்தை கண்டறிந்ததால் இவருக்கு மருந்தீஸ்வரர் என்று பொருள்.
மற்றும் இத்தலம் சொல்லப்ப்படும் மற்றொரு புராணம் யாதெனில் அமிர்தம் வேண்டி மலையை கடைந்தபோது விஷ்ணு பெருமான் மச்ச அவதாரம் அதாவது அமை உரு(கச்சப) எடுத்த போது போது இங்கிருக்கும் தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானின் அருளை பெற்றதால் இவருக்கு கச்சப்பேஸ்வரர் என்ற பெயரும், இந்த ஊருக்கு திருக்கச்சூர் என்ற திருப்பெயரும் வந்தது.
இதை போலவே சிவாலய யாத்திரியில் சுந்தரர் இருந்த போது இந்த இடத்தை அடைகையில் மிகுந்த பசியோடு இருந்தார். அவர் பசி போக்க, சிவபெருமான் அடியார் உருவில் வந்து அவரின் பசியை போக்குவதாக கூறி, சுந்தர ருக்காக உரெல்லாம் இரைந்து உணவு பெற்று சுந்தரருக்கும் அவரோடிருந்த அடியாருக்கும் விருந்து படைத்தார்.
வந்தது சிவபெருமான் என்று தெரிந்த போது அவரது அன்பில் நெக்குருகி போனார் சுந்தரர். உணவை இரைந்து கொடுத்த சிவபெருமான் இரந்தீஸ்வரர் என்றும், விருந்து படைத்த சிவபெருமான் விருந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தீராத நோய்கள், கண் தொடர்பான நோய்கள் போன்றவை நீங்க இந்த தலத்தை வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு வழிபடுவோருக்கும் கை மேல் பலன் கிடைக்கும் நிகழ்வுகளும் ஏராளம் உண்டு.