Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மீக சாதனாவில் இருப்பவர்கள் தரையில் படுப்பது உகந்தது என சொல்லப்படுவது ஏன்?

ஆன்மீக சாதனாவில் இருப்பவர்கள் தரையில் படுப்பது உகந்தது என சொல்லப்படுவது ஏன்?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  25 May 2022 1:51 AM GMT

சிலருக்கு தரையில் படுப்பது தான் தினசரி பழக்கம். அவர்களால் மெத்தையிலோ அல்லது பாயிலோ உறங்க முடியாது. அதுவே மற்ற சிலரால், வெறும் தரையில் படுக்க முடியாது. தரையில் உறங்குவதை சாதாரண பழக்கம் என நாம் எண்ணுகிறோம். ஆனால் அந்த பழக்கத்தால் விளையும் ஆரோக்கிய நன்மைகள் அசாதாரணமானவை.

அடர்த்தியான மெத்தை, மிருதுவான தன்மை மெதுமெதுப்பான நெகிழ்வு என மெத்தை தரும் செளகரியம் தற்காலிகமானது. இந்த அனுபவத்தை தரை உங்களுக்கு வழங்காது. மற்றும் முதன் முறையாக தரையில் படுப்பவர்கள் மிக மிக அசெளகரியமாக உணர்வார்கள். இவற்றையெல்லாம், கடந்து ஒருவர் தரையில் உறங்க பழகிவிட்டால் அவர்கள் பெறும் முதல் பயன் அழுத்தங்களிலிருந்து விடுபடுவது. இயற்கையான முறையில், தரையின் தட்டையான தன்மையில் உறங்குவதால், புத்துணர்வு ஏற்படும்.

ப்ளாட் (Flat) எனப்படும், தட்டையான தரையில் உடலை கிடத்துவதால் உங்கள் முதுகெலும்பு நேராகிறது. ஆன்மீக பயிற்சிகள், மற்றும் தியான வகுப்புகளை நீங்கள் கவனித்திருந்தால் அங்கே கொடுக்கப்படும் முதல் அறிவுருத்தல், முதுத்தண்டை நேராக வைத்து அமருங்கள் என்பது தான். முதுகுதண்டு நேராக இருக்கிற போது, ஒருவரின் கவனம் சிதறாது. அதே நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்தப்படி ஒருவர் உறங்குவார் எனில் அதனால் அவருக்கு டென்ஷன் மிக மிக குறையும் என சொல்லப்படும்.

அது மட்டுமின்றி இது சில வகையான முதுகு வலி பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என சொல்லபடுகிறது. இன்று இருக்கும் துரித உலகில், மற்றும் நவீன யுகத்தில் பெரும்பாலான பணி வைட் காலர் எனப்படும் உட்கார்ந்து அமர்தபடி செய்யக்கூடிய வேலைகள் தான். தவறான முறையில் உட்காருவதே முதுகு வலியை உருவாக்குகிறது. இதற்கான தீர்வாக குஷன் போன்ற அமைப்புடைய மெத்தையை உடல் விரும்பினாலும், ஆரோக்கியம் என்பது இயற்கை வகையிலான படுக்கை அமைப்பில் தான் இருக்கிறது.

தவறான முறையில் அமர்வது தான் உடலின் பெரும்பாலான புற வலிகளுக்கு காரணமாக அமைகிறது, நரம்பு சம்மந்தப்பட்ட வலிகள், போன்றவை சரியான முறையில் உறங்குவதால் நீங்க பெறலாம். மேலும் தோள்களை சமமாக வைத்து உறங்குவது மற்ற சில வலிகளை நீக்கும். மேலும் தரையில் உறங்குவதால் உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பு சீராக நடக்கும். இதனால் இரத்தம் மற்றும் இதர சுழற்சிகள் சீராக நடக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News