Kathir News
Begin typing your search above and press return to search.

மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வர உதவும் ஆச்சர்ய ஆலயம் திருவைக்காவூர்

மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வர உதவும் ஆச்சர்ய ஆலயம் திருவைக்காவூர்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  2 Jun 2022 1:59 AM GMT

திருவைக்காவூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது தமிழகத்தின் புகழ்பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றான திருவைக்காவூர் கோவில். இது திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். இந்த கோவிலின் நான்கு புறத்திலும் மிக நீண்ட வீதிகள் நீண்டு விரிந்துள்ளன. இங்கிருக்கும் சிவபெருமான் வில்வனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மற்றும் இங்கிருக்கும் நாயகி வளக்கை நாயகி என அழைக்கப்படுகிறார்.

ஒரு முறை தவநிதி துறவி இந்த கோவிலில் தன்னுடைய வழிபாட்டை நடத்தியிருந்தார். அப்போது ஒரு வேடனால் துறத்தப்பட்ட மான் ஒன்று அந்த துறவியிடம் பாதுகாப்பு கோரியது. அந்த வேடனை பயமுறுத்த எண்ணிய அந்த துறவி புலி வேடம் கொண்டு வேடனை விரட்டினார். அந்த வேடனின், புலியின் வருகையால் பயந்து அங்கிருந்த வில்வ மரத்தின் மீது ஏறிகொண்டார். ஆனாலும் ஆக்ரோஷம் குறையாமல் அந்த புலி உறுமி கொண்டே இருந்தது. இரவு ஆகிவிட்டதால் தான் உறங்கி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவும் தன்னை தானே விழிப்புடன் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அந்த இரவு முழுவதும் மரத்திலிருந்த இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து கிழே போட்டு கொண்டிருந்தார்.

அன்று எதேர்ச்சயகா சிவராத்திரியாக இருந்தாலும், அந்த வில்வ இலைகள் அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்ததாலும் அவருக்கு இருந்த மரண யோகம் நீங்கி முக்தி பெற்றார் என்று புராணங்கள் சொல்கின்றனர். மஹா விஷ்ணு கூட அவருடைய சாபம் நீங்கே இங்கே தவம் இயற்றியுள்ளார். இங்கிருக்கும் யம தீர்த்தத்தில் புனித நீராடி சிவபெருமானை சப்த ரிஷிகள் வழிபட்டுள்ளனர். இங்கிருக்கும் சிவபருமான் பாவங்களை போக்க கூடியவர் இவரை வழிபடாதவர்களே கிடையாது.

பூமா தேவி கூட இங்கிருக்கும் சிவன் மற்றும் உமையாளை வணங்கியுள்ளார். அதனாலேயே இந்த பகுதிக்கு பூமிப்புரம் என்ற பெயரும் உண்டு. மேலும் ஆச்சர்யமாக இங்கிருக்கும் தட்சிணமூர்த்தி சூலம் ஏந்தியவாறு இருக்கிறார்.

மரண பயம் போக்கும் யம தீர்த்தம் நோக்கி பலர் இங்கே வருகின்றனர். இங்கு நிகழும் சிவராத்திரி விழாவற்கு கிட்ட தட்ட 2 இலட்சம் மக்கள் வருடந்தோரும் வருகை தருகின்றனர். இந்த கோவில் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலும், சுவாமிமலையிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News