Kathir News
Begin typing your search above and press return to search.

ஶ்ரீராமர் அரண்மனையில் அரசராக காட்சி தரும் ஆச்சர்ய ஆலயம் ராமராஜ் மந்திர்!

ஶ்ரீராமர் அரண்மனையில் அரசராக காட்சி தரும் ஆச்சர்ய ஆலயம் ராமராஜ் மந்திர்!
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  3 Jun 2022 7:20 AM IST

இந்தியாவிலுள்ள மத்தியபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது ஓர்ச்சா எனும் நகரம். இங்குள்ள ராம ராஜர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மிகவும் புனிதமான கோவிலாக கருதப்படும் இத்தலத்திற்கு ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். ஒரு வருடத்திற்கு இங்கு வருகை தரும் சுற்றுலா பயணைகளின் எண்ணிக்கை 6.50,000 என்று சொல்லப்படுகிறது மற்றும் இங்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டும் வருடத்திற்கு 25,000 ஆகும்.

அரண்மனையில் அரசர் கோலத்தில் ராம பெருமான் வழிபடப்படும் இந்தியாவின் ஒரே கோவில் இது தான். அரசரக்கு இருக்கும் பாதுகாப்பு மற்றும் மரியாதைகள் இன்றும் இங்கு அருள் பாலிக்கும் இராம பிரானுக்கு வழங்கபடுகிறது. படைகள் திரண்டு நின்று அரசருக்கு மரியாதை செலுத்துவதை போல இன்றும் இராம ராஜருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

இங்கிருக்கும் ராம பிரான் மிகவும் அரிய வகையில் கையில் வாளும், கேடயமும் ஏந்தி காட்சி தருகிறார் அவருடன் சீதா பிராட்டி, இலட்சுமணர், மற்றும் அவர்தம் தர்பாரில் மஹராஜ சுக்ரீவர், துர்கை அம்மன், அனுமர், மற்றும் ஜாம்பவன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கோவில் மத்தியபிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, பேட்வா ஆறு மற்றும் ஜாம்னி நதியின் சங்கமத்தில் உருவான ஒரு தீவில் அமைந்துள்ள ஓர்ச்சா கோட்டை வளாகத்தின் ஒரு அங்கமாக இந்த கோவில் விளங்குகிறது.

இந்த கோட்டைக்குள் ராஜா மகால், சீஷ் மகால், தோட்டங்கள், அரங்குகள் என ஏராளமான இடங்கள் உள்ளன. பார்ப்பதற்கு மிக பிரமாண்டமாக திகழும் இந்த கோட்டையின் ஒரு பகுதியான ராம ராஜர் ஆலயத்தில் ஒரு முக்கிய சிறப்பம்சன் என்னவெனில்,

ராம பிரான் இங்கே பத்மாசன கோலத்தில் அமர்ந்திருக்கிறார். அவரது இடது திருப்பாதத்தின் பெருவிரலுக்கு தினசரி இங்கே சந்தனா காப்பு இடப்படுகிறது. ஏதேனும் வேண்டுதலுடன் வரக்கூடிய பக்தர்கள் இறைவனின் இந்த பெருவிரலை கண்டுவிட்டால் அவர்கள் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். ஆனால் அந்த பெருமைமிகு பெருவிரலை அவ்வளவு எளிதாக யாரும் கண்டுவிட முடியாது. தீவிர பக்தியும், தூய பக்தியும் இருப்பவர்கள் நிச்சயம் காணாமலும் இருக்க முடியாது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News