Kathir News
Begin typing your search above and press return to search.

பணவோட்டத்தை மயிலறகு ஈர்க்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் படி உண்மையா?

பணவோட்டத்தை மயிலறகு ஈர்க்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் படி உண்மையா?
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  2 July 2022 7:06 AM IST

மயிலை குறித்து சிந்தித்தாலே நம் நினைவுக்கு வருவது அது ஒரு அழகான படைப்பு. மயிலின் தோகை என்பது அனைவருக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தக்கூடியது. மயிலின் உதிர்க்கும் இறகுகளை இங்கே பலர் விரும்பி பெறுவதுண்டு. மயிலறகு என்றவுடன் பலருக்கும் அதனை ஒரு அலங்கார பொருளாக தான் பார்க்க தோன்றும்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, மயிலறகை கொண்டு நாம் பல விதமான தோஷங்களை நீக்க முடியும் என்கிற ஆச்சர்ய செய்தி தெரியுமா? வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கு நாம் மொத்தம் 8 மயிலறகுகளை ஒன்றிணைக்க வேண்டும். அந்த எட்டு மயிலறகையும் ஒன்றாக இணைந்து வெள்ளை நிற நூலினால் கட்டி பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். "ஓம் சோமாய நமஹ "

சனி கிரகத்தினால் ஏதேனும் பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டிருந்தால், மூன்று மயிலறகை ஒன்றாக்கி, கருப்பு கயிறு கொண்டு கட்டி நீரினால் அதனை தெளித்து பின்னர் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். "ஓம் சனீஸ்வராய நமஹ "

பணத்தை, பொருளாதார ஓட்டத்தை ஈர்க்கும் வல்லமை மயிலறகிற்கு இருப்பதால், அதனை எப்போதும் பணம் வைக்கும் அறையின் வைப்பது நல்ல விதமான விளைவுகளை கொடுக்கும். வீடுகளில் போதிய இடமிருப்பின் மயிலறகு போன்ற ஓவியம் அல்லது படத்தை வைப்பது மிக நல்ல அதிர்வுகளை கொடுக்கும்.

மயிலறகு எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் அண்டவிடாமல் செய்யும் மிக பலமான பாதுகாப்பு அரண். எனவே மயிலறகை வீட்டு வாசலில் கட்டுவது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். மயிலறகை அலங்கார பொருளாக நினைத்து பயன்படுத்தினால் அதற்கு பராமரிப்பு தேவையில்லை. வாஸ்து தோஷம் நீக்குவதற்காக மயிலறகை பயன்படுத்தினால், அதனை முறையாக பாரமரிப்பதும், வழிபடுவதும் அவசியம். குறிப்பாக மயிலறகின் மீது ஒட்டடை, தூசு போன்றவை படாமல் பார்த்து கொள்தல் நலம். முந்தைய காலத்தில் மயிலறகு என்பது காயங்களை ஆற்ற மிகச்சிறந்த மருத்துவ உபகரணியாக பார்க்கப்பட்டது அதனால் தான் மருந்துகள் தடுவுவது போன்ற செயல்களுக்கு மயிலறகு பயன்படுத்தப்பட்டது.

வாஸ்து தோஷம் மட்டுமின்றி வீடுகளில் இருக்கும் சிறு சிறு பூச்சிகள் தேவையற்ற உயிரிகளை வீட்டினுள் தங்கவிடாது. வீட்டின் படுக்கையறையில் மயிலின் படம் வைத்திருந்தால் அது தம்பதியினரிடேயே ஒற்றுமையை அதிகரிக்கும் .

Next Story
கதிர் தொகுப்பு
Trending News