Kathir News
Begin typing your search above and press return to search.

பூஜையறையில் ஏற்றும் சுடர் உறுதியாக எரிய வேண்டும் என்பது ஏன் ? பூஜையறை குறிப்புகள்

பூஜையறையில் ஏற்றும் சுடர் உறுதியாக எரிய வேண்டும் என்பது ஏன் ? பூஜையறை குறிப்புகள்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  13 Aug 2022 9:38 AM IST

எல்லா இந்துக்களின் வீட்டிலும் பூஜை அறை என்பது இன்றியமையாத ஒன்று, தங்கள் விருப்பத்திற்கேற்ப பூஜை அறையை சிறிதாகவோ பெரியதாகவோ வைத்திருப்பார்கள். இந்த பூஜை அறைகளை வைத்திருப்போர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. பூஜை அறையில் பூஜையின் போது அது எந்த தெய்வங்களாக இருப்பினும் அரிசி நெய்வைத்யம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

ஏனென்றால் அரிசி இறைவனின் உணவாக கருதப்படுகிறது. அரிசியை தவிர்த்து ஏலக்காயும் வெற்றிலையும் மிக அவசியமாக பூஜை அறையில் வைக்க வேண்டியவைகள். பூஜையில் ஏற்றப்படும் விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்காமல் ஸ்திரமாக எறிவது நல்ல சகுனத்தை தெரிவிப்பதாக அமையும். மலர்கள் தண்ணீர் மற்றும் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது இந்த மூன்றும் பூஜையின் மிக முக்கியமான அம்சங்கள்.

பகவத் கீதையில் கிருஷ்ணனே இந்த வழிமுறையை கூறியுள்ளார். பூஜையின் போது அணிய வேண்டிய ஆடைகளை பற்றியும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. துர்கை போன்ற தெய்வங்களை வணங்கும் போது சிவப்பு ஆடைகளும். சிவனை வணங்கும் போது வெண்மை நிற ஆடைகளும், விஷ்ணுவை வணங்கும் போது மஞ்சள் அடையும் அணிவது சிறந்தது.

நாம் அமர்ந்து பூஜை செய்யும் ஆசனமும் மிக புனிதமானதாக கருத வேண்டும் அதை அங்கும் இங்கும் மாற்றி வைக்க கூடாது அதை கால்களால் தள்ள கூடாது. மேலும் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றும் போது வீட்டின் வாஸ்து தோஷங்கள் மறையும் என்பது ஐதீகம். மேலும் பூஜை அறையின் சுத்தம் மிக மிக முக்கியமானது, சிலர் எண்ணற்ற தெய்வ படங்களை வைத்து கொண்டு பூஜை அறையையே அசுத்தமாக வைத்திருப்பார்கள், குறைந்த தெய்வ படங்களை வைத்தாலும் அதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், பூஜை அறையில் படங்கள் மட்டும் தான் வைக்க வேண்டுமே தவிர சிலைகளை வைக்க கூடாது. விளக்கு ஏற்றும் போது அது தெய்வத்திற்கு நேராக இருக்க வேண்டுமே தவிர வேறு திசைகளை நோக்கி இருக்க கூடாது, சுத்தமான திரியையே விளக்கிற்கு பயன்படுத்த வேண்டும், பூஜை முறைகள் தவறாமல் நடந்த வேண்டும், பூஜையின் போது உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட எதுவும் பூஜை அறையில் இல்லாமல் பார்த்த கொள்ளவேண்டும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News