Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழு கடலை ஒரே கிணற்றில் அடக்கிய அதிசயம் நிறைந்த ஆலயம் திருப்புறம்பியம்!

திரு சாட்சிநாதேஸ்வரர் ஆலயம், திருப்புறம்பியம்

ஏழு கடலை ஒரே கிணற்றில் அடக்கிய அதிசயம் நிறைந்த ஆலயம் திருப்புறம்பியம்!
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  19 Feb 2022 9:14 AM IST

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் அமைந்துள்ள இடம் திருப்புறம்பியம் இவ்வூரில் அமைந்திருப்பது தான் சாட்சிநாதேஸ்வரர் ஆலயம். சிவனுக்கென அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம் இது. இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற சாரங்கபாணி கோவிலுக்கு அருகே இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இங்கிருக்கும் மூலவருக்கும், பார்வதி தேவிக்கும் பல பெயர்கள் உண்டு சாட்சி நாதர், புன்னைவன நாதர் மற்றும் சாஷீஸ்வரர் என்பதாகும். இங்கிருக்கும் பார்வதி தேவிக்கும் பல திருப்பெயர்கள் உண்டு கரும்பன்ன சோலம்மை, மற்றும் குறைவிலா அழகி ஈக்‌ஷபாவனி ஆகியவை. இக்கோவில் மூன்று நதிகளின் கரையில் அமைந்திருப்பது சிறப்பு, மணியாறு, கொல்லிடம் மற்றும் காவேரி ஆகிய நதிக்கரையின் ஓரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் குறித்து பல அதிசயங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முதலானது இங்கிருக்கும் பிரளயம் காத்த விநாயகர். இத்தலத்தில் இருக்கும் விநாயகருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்று பெயர். கடல்களால் சூழ்ந்து உலகம் அழிகிற போது அது பிரளயம் என்போம். அவ்வாறு ஒரு சமயம் இத்தலத்தை பிரளயம் சூழயிருந்த போது சிவபெருமான் இத்தலத்தை காக்குமாறு விநாயகருக்கு ஆணையிட்டார். அதனால் பிரளயத்தை ஏற்படுத்த இருந்த ஏழு கடலை ஓம் எனும் பிரணவத்தால் அடக்கி இந்த வெள்ளத்திற்கு புறம்பாக இந்த தலத்தை வைத்தமையால் இத்தலத்திற்கும் திருப்புறம்பியம் என்ற பெயர் வந்தது. அதுமட்டுமின்றி பிரளயத்தை ஏற்படுத்த இருந்த ஏழு கடலை இங்கிருக்கும் ஒரு கிணற்றில் அடக்கியதால் இங்கிருக்கும் கிணற்றிற்கு ஏழு கடல் கிணறு மற்றும் சப்த சாகர கூப்பம் என்று பெயர்.

வருட பகவான் கடலில் கிடைக்கும் அரிதான பொருட்களை கொண்டு இந்த விநாயகரை உருவாக்கியுள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு முதல் இரவு கிட்டதட்ட 100 கிலோ தேனை அய்யனுக்கு அபிஷேகம் செய்கிறனர். அதிசயமாக அந்த தேன் வழிந்து வெளியேறுவதே இல்லை. இந்த அதிசயத்தை இன்றும் இத்திருத்தலத்தில் காணலாம்.

திருவிளையாடல் புராணத்தின் படி கன்னி பெண் ஒருவர் மதுரையில் இருந்து தனக்கு கணவராக வரவிருக்கும் மணாளனோடு இத்தலத்திற்கு வந்த போது அந்த மனிதரை பாம்பு தீண்டி உயிரழந்தார். அச்சமயம் ஞானசம்பந்தர் பதிகம் பாடவே ஆவர் உயிர்பெற்றார். இறந்தது அப்பெண்ணின் வருங்கால மணாளன் தானா என சாட்சிக்கு சிவபெருமானையும் வன்னிமரத்தையும் ஞானசம்பந்தர் நிறுத்தினார் என்றும். இதை மதுரை வரை சென்று சிவபெருமானே மெய்பித்து சாட்சியாக நின்றதால் இவருக்கு சாட்சிநாதர் என்ற பெயரும் நிலைத்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News