Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை அர்ச்சனை செய்ய தேவையான 21 வகை மலர்கள்!

விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகையான புஷ்பத்தினால் அல்லது அட்சதையால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் பலவாக நமக்கு கிடைக்கப் பெறும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை அர்ச்சனை செய்ய தேவையான 21 வகை மலர்கள்!
X

KarthigaBy : Karthiga

  |  4 Sep 2024 5:15 PM GMT

முழு முதல் கடவுளாக கொண்டாடப்படக்கூடியவர் விநாயக பெருமான் .எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் விரதமாக இருந்தாலும் யாகமாக இருந்தாலும் விநாயகரை வணங்கிய பிறகு தொடங்க வேண்டும் என்பது ஐதீகம். விஷ்ணு பகவானை வழிபடுவதை 'வைணவம்' என்றும் சிவபெருமானை வழிபடுவதை சைவம் என்றும் சொல்வது போல விநாயகரை பிரதான தெய்வமாக வழிபாடு செய்வதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள்.

ஆவணி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி அன்று தான் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் கடைபிடிக்கும் விநாயகர் விரதத்தால் வருடம் முழுக்க விரதம் இருந்த பலனும் ஆயிரம் கணபதி ஹோமம் செய்த பலனும் கிடைக்கும் அன்றைய தினம் காலை எழுந்து களிமண்ணால் செய்த விநாயகரை பெரும்பாலும் பூஜிப்பார்கள். ஆனால் களிமண்ணால் செய்த விநாயகரை பூஜித்த மறுநாள் புனர் பூஜை செய்துவிட்டு நீரில் கரைக்க வேண்டும் .விநாயகர் சதுர்த்தி அன்று பூரண கொழுக்கட்டை, உளுந்து வடை, அப்பம் ,பருப்பு பாயாசம் ,வெள்ளை சாதம், சுண்டல் ,கொய்யாப்பழம், இலந்தை பழம் ,விளாம்பழம், நாவற்பழம் முதலானவை முக்கிய நைவேத்தியங்களாக கருதப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகை புஷ்பங்களால் பூஜை செய்து விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் பலவாக நமக்கு கிடைக்கப்பெறும். அந்த மலர்களாவன புன்னைமலர், மந்தாரை மலர் ,மாதுளம் பூ, மகிழம்பூ ,வெட்டிவேர், பாதிரி பூ, தும்பை பூ ,ஊமத்தம் பூ ,செண்பகப்பூ, மாம்பூ, தாழம்பூ ,முல்லைப் பூ, கொன்றைப்பூ, எருக்கம் பூ ,செங்கழுநீர் பூ ,செவ்வந்திப் பூ ,வில்வம், அரளிப்பூ, முல்லைப்பூ, பவளமல்லி பூ ,ஜாதிமல்லி பூ ஆகியவை ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News