திருச்செந்தூர் முருகன் கோவில் கொடியேற்றம்.. HRCE அதிகாரிகளின் வருகைக்காக தாமதம்.. இந்து முன்னனி வாக்குவாதம்..
By : Bharathi Latha
இந்தியாவில் அதிகமான கோவில்களை கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகைத்து வருகிறது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களும் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இருந்தாலும் தற்போது ஆளும் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை அதனுடைய பாரம்பரியத்துடன் நடத்துகிறதா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த கொடியேற்றுமானது குறித்த நேரத்தில் நடைபெறாமல் தாமதத்தை ஏற்படுத்து இருப்பது பெரும் சர்ச்சை ஏற்பட இருக்கிறது.
கோவில் இணை ஆணையர் வருகைக்காக கொடியேற்றம் தாமதம். இதனால் அங்கு இருந்த இந்துமுன்னனி மாநில துணைத்தலைவர் வாக்குவாதத்திற்கு பிறகு கொடியேற்றம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. குறித்த நேரத்தில் நடைபெற வேண்டிய கொடியேற்றம் ஆனது அதிகாரிகள் வருகை தாமதத்தின் காரணமாக குறித்து நேரத்தில் நடைபெறாமல் சற்று தாமதமாக நடைபெற்று இருக்கிறது.
கொடியேற்றம் காலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற வேண்டும். ஆனால் 4.50 ஆகியும் கொடியேற்ற தயாராகவில்லை. இந்த நிலையில் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், கோவில் இணை ஆணையருக்காக காத்திருக்க கூடாது. உடனே கொடியேற்றுகிறீர்களா.? அல்லது நான் கொடியேற்றவா.? என சிறிது நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். உடனே சில நிமிடங்கள் இணை ஆணையர் அங்கு வந்தார். பின்னர் 4.52 க்கு கொடியேற்றம் நடந்தது.
Input & Image courtesy: News