Kathir News
Begin typing your search above and press return to search.

தர்மத்தை நிலை நிறுத்தும் தசரா பெருவிழா!

தர்மத்தை நிலை நிறுத்தும் தசரா பெருவிழா!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  15 Oct 2021 12:00 AM GMT

நவராத்திரியின் இறுதி கொண்டாட்டங்கள் தசராவுடன் இணைந்து நிறைவடையும். இந்த நவராத்திரி என்பதே அம்பிகையின் பல அம்சங்களை கொண்டாடி மகிழும் ஒரு அற்புத நிகழ்வு. கர்நாடகாவில் சாமுண்டி, வங்காளத்தில்துர்கை, தமிழகத்தில் சரஸ்வதி தேவி என பல்வேறு இடங்களில் பல்வேறு அம்பிகை வடிவங்கள்வழிபாட்டுக்குரியவை ஆகின்றன. ஆனால் அடிப்படையில் பெண் தன்மையை வழிபடும் நிகழ்வே இந்தநவராத்திரி அல்லது தசரா.


மைசூரில் தசராவை நாடப்பா என்கிறார்கள் அதாவது அவர்களுடைய பகுதியின் திருவிழா இது. ஒன்பது இரவுகள் அன்னையை வணங்கிய பின் பத்தாம் நாள் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் வெற்றியை குறிக்கும் திருநாளாகும். இந்நாளில் தான் அன்னை சாமுண்டீஸ்வரி மஹிசாசுரன் எனும் அரக்கனை கொன்று தர்மத்தை நிலை நாட்டினார். எனவே இந்த நாளில் கர்நாடகாவில் உள்ள மைசூரில் இந் நாளை பெரும் பண்டிகையாக கொண்டாடும் வழக்கம் உண்டு. மைசூர் தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. அந்நாளில் மின் விளக்குகளால் ஒளிரும் அந்நகரின் பேரழகையும், கலாச்சார கூறுகளையும், ஆன்மீக சாரத்தையும் பார்வையிடுவதற்கு ஏராளமான வெளிநாட்டினரும் வருகை தருவதுண்டு.


நவராத்திரி என்பது தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே. அதுமட்டுமின்றி மனித வாழ்வுக்கான சகலவிதமானவைகளையும், பொருட்கள் உட்பட அனைத்திற்கும் நன்றி சொல்லி, அனைத்தையும் இறைவனின் அருளாக கருதி அவற்றிற்கும் வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஒன்பது நாட்களும் மூன்று முக்கிய தன்மைகளின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று நாட்கள், தமஸ் இந்த மூன்றுநாட்களில் பார்வதி தேவியை வணங்குவது இயல்பு. அடுத்த மூன்று நாட்கள் ரஜோகுணத்தை வணங்குவது வழக்கம், இதன் அம்சமாக தேவி மகாலட்சுமியை வணங்கி பொருள் தன்மையிலான அனைத்து நன்மைகளையும் ஒருவர் பெறுவர். அடுத்து இறுதி மூன்று நாட்கள் சாத்வீக குணத்தை குறிப்பதாகும். இந்தமூன்று நாட்களும் சரஸ்வதியை வணங்குவது மரபு. இந்நாளில் அன்னையை வணங்கி ஞானம், முக்தி,வீடுபேறு ஆகியவற்றை ஒருவர் பெறக்கூடும்.


இந்த மூன்று முக்கிய தன்மைகளிலும் நாம் நிகழ்த்தும் வழிபாட்டிற்கு ஏற்ப அன்னை அருள்பாலிப்பதாக கூற்றுஉண்டு. எந்த மாதிரியான நன்மைகளை ஒருவர் பெறுகிறோம் என்பதை தாண்டி, இந்த ஒன்பது நாட்களின்அடிப்படை அம்சம் என்பது விடுதலை, வீடுபேறு. இந்த ஒன்பது நாட்களுக்கு அடுத்து வரும்பத்தாம் நாள் தசரா விழா என்பது, நாம் அன்னையை எந்தவொரு தனித்த அம்சத்திலும் காணவில்லை.அவரை முழுமையாக ரூபமாக வழிபடுகிறோம் என்பதையே குறிக்கிறது.


தசரா என்பதுஆடி, பாடி, மனிதர்களின் ஆற்றல் சக்தி மிகுந்ததாக இருக்கும் நாட்கள் ஆகும். அந்த அடிப்படையிலேயே பல இடங்களில் இன்றும் தசரா என்பது கொண்டாட்டத்திற்குரிய ஆன்மீக நிகழ்வாக உள்ளது. நாட்டின்சில இடங்களில் இந்த ஒன்பது இரவும் கலை நிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. இந்த பாரம்பரியம்மறையாமல் பேணி காப்போம். தசரா திருநாள் நல்வாழ்த்துகள்.

Image : Hans India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News