Kathir News
Begin typing your search above and press return to search.

1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில்.. பாகிஸ்தானில் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.!

1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில்.. பாகிஸ்தானில் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.!

1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில்.. பாகிஸ்தானில் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2020 10:33 AM GMT

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விஷ்ணு கோயில் இருப்பதை பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் இந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா தொல்லியல் துறையைச் சேர்ந்தவர் பசல் காலிக். மற்றும் இத்தாலிய தொல்பொருள் திட்ட தலைவர் டாக்டர் லுகா என்பவருடன் சேர்ந்து ஸ்வாட் மாவட்டத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரிகோட் குந்தை எனும் பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து ஷாஹி மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு கோயிலை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


ஹிந்து ஷாஹி அல்லது காபூல் ஷாஹி என்பவர்கள் 850 முதல் 1026 வரை காபூல் பள்ளத்தாக்கு, பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா பகுதிகளை ஆண்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் கோயிலுக்கு அருகில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் வருகையில் சுத்தப்படுத்திக்கொள்ள அவை அமைக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.


ஸ்வாட் மாவட்டத்தில் ஆயிரமாண்டு பழமையான பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இன்னும் பல உண்டு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் தற்போது தான் முதன் முறையாக ஹிந்து ஷாஹி கால தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புத்த மத கோயில்கள் பலவும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News